திருப்பூர் மாநகரில் 8 மாதத்தில் 46 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு- போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நடவடிக்கை

திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.கோவை மத்திய சிறையில் உள்ள அழகர்சாமியிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.
போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு.
போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு.
Published on

திருப்பூர்:

திருப்பூர் சர்மியான் சாகிப் வீதியில் உள்ள மதுக்கடை அருகே கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவரது சொந்த ஊர் மதுரை ஆரப்பாளையம் ஆகும்.

அழகர்சாமி மீது தெற்கு, அனுப்பர்பாளையம், சென்னை பூந்தமல்லி போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தையும், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.

அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள அழகர்சாமியிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 46 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com