search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு"

    • விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த தி.மு.க. அரசை எதிர்த்து அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    • விவசாயிகளை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்த அரசின் அடக்கு முறையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த தி.மு.க. அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த தி.மு.க. அரசின் அடக்கு முறையைக் கண்டித்து நாளை (18-ந் தேதி) தமிழக பா.ஜனதா சார்பில் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • விவசாயிகள் என்ன தவறு செய்தார்கள் என்பதற்காக குண்டர் சட்டம் அவர்கள் மீது பாய்ந்துள்ளது.
    • குண்டர் சட்டத்தில் கைதான அனைத்து விவசாயிகளைவும் எந்த நிபந்தனையும் இன்றி தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் 20 பேர் கைது என்கின்ற செய்தி மிகவும் அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது. மேலும் அதைவிட மிகக் கொடுமையானது 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைவருக்கும் உண்ண உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதை வன்மையாக கண்டிப்பதோடு இதுவரை அரசியல் வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தது கிடையாது.

    விவசாயிகள் என்ன தவறு செய்தார்கள் என்பதற்காக குண்டர் சட்டம் அவர்கள் மீது பாய்ந்துள்ளது. இதை ஒட்டுமொத்தமாக நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். குண்டர் சட்டத்தில் கைதான அனைத்து விவசாயிகளைவும் எந்த நிபந்தனையும் இன்றி தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் திருவண்ணாமலையில் தே.மு.தி.க. சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    • குண்டர் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    செய்யாறு தாலுகா மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மேல்மா கூட்ரோட்டில் கடந்த சில மாதங்களாக கீற்றுக்கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட போராட்டங்கள் மூலமாக விவசாயிகள் நிலம் கையகப்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    குடியுரிமை, வாக்குரிமை சம்பந்தமான ஆவணங்களை செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகாவிடம் அளிக்க செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முகப்பு வாயிலில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    தொடர்ந்து அன்று மாலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவித்தும், மண்டபத்தை விட்டு வெளியேறாமல் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த சப்-கலெக்டர் அனாமிகா அங்கு வந்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றார். இதற்கிடையே, அனுமதி இன்றி ஊர்வலமாக செல்ல முயன்ற 147 விவசாயிகள் மீது செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கடந்த 4-ம் தேதி அதிகாலை மேல்மா சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகி அருள் (45) உள்பட 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரை பேரில் கலெக்டர் பா.முருகேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 பேரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து ஊத்தங்கரை தாலுகா அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருள் (45), தேத்துறை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (47), எருமைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவன் (45), மணிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சோழன் (32), மேல்மா கிராமத்தைச் சேர்ந்த திருமால் (35), நர்மாபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி, குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்யராஜ் (38) ஆகிய 7 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

    விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டது ஏன் என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள். அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேல்மா கூட்டு ரோடு, கூழமந்தல் போன்ற பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.
    • 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவலை தி.மு.க. அரசு போட்டிருக்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மாபள்ளம், நெடுங்கல், அத்தி, வட ஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளைநிலங்களை 'சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்' என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை தி.மு.க. அரசு பிறப்பித்துள்ளது.

    இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்றும், அப்பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த சில மாதங்களாக அறப்போராட்டத்தைக் கையிலெடுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயப் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    போராட்டத்தில் பங்கெடுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மீதும், விவசாயப் பெருங்குடி மக்கள் மீதும் தி.மு.க. அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்துள்ளது.

    எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வழக்குகளைக் காரணம் காட்டி, எந்தவிதமான முன்வழக்குகளும் இல்லாத விவசாயிகள் மீது தொடர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளதோடு, அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார்கள் என்ற காரணத்தைக் காட்டி, தற்போது 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவலை தி.மு.க. அரசு போட்டிருக்கிறது.

    மேல்மா கூட்டு ரோடு, கூழமந்தல் போன்ற பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போட்டிருக்கக்கூடிய முள்வேலிகளைப் போல, அங்கே முள்வேலிகளைக் கொண்டு வந்து தடுப்புகளை அமைத்து, பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனங்களையெல்லாம் கொண்டு வந்து நிறுத்தி, விவசாயப் பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு முயல்கிறது.

    அகிம்சை வழியில் போராடி வருவதை ஒடுக்குவதற்கும், தி.மு.க. அரசு காவல் துறையை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

    விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக தி.மு.க. அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×