search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்கள்"

    • மாநகர பஸ்சின் ஜன்னல், படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கிறார்கள்.
    • மாணவர்கள் அட்டகாசம் செய்த பஸ்சின் பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.

    சென்னை:

    சென்னையில் மாநகர பஸ், மின்சார ரெயில் நிலையங்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசாரும், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் எச்சரித்தும் இது தொடர்கதையாக நீடித்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச்சென்ற மின்சார ரெயிலில் தொங்கியபடி நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி சென்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 'ரூட்டு தல' பிரச்சினையில் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மாநகர பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்தாலும் மாணவர்களின் அட்டகாசம் அடங்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் படிக்கட்டு, ஜன்னலில் தொங்கியபடி பயணம் செய்து பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது நீடிக்கிறது.

    இந்த நிலையில் பிராட்வேயில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் (எண்15) கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ்சின் மேற்கூரையில் நின்றும், அமர்ந்தபடி நடனம் ஆடியும் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. மேலும் மாநகர பஸ்சின் ஜன்னல், படிக்கட்டில் தொங்கியபடியும் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கிறார்கள். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இதனை மாணவர்கள் அட்டகாசம் செய்த பஸ்சின் பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். கோயம்பேடு மேம்பாலத்தில் செல்லும்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. ஆபத்தை உணராமல் பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நுழையும்போது வீடியோ எடுக்கச்சொல்லி மீண்டும் நடைமேடையில் பட்டாக்கத்தியை உரசியபடி அட்டகாசம் செய்தனர்.
    • மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்.

    அவர்கள் தினந்தோறும் மின்சார ரெயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள்.

    இவர்களால் ரூட்டு தல தகராறில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதேபோல் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் சிலர் பட்டாக்கத்திகளை மின்சார ரெயில்களில் தொங்கியபடி நடைமேடையில் உரசியபடி செல்லும் சம்பவமும் அடிக்கடி அரங்கேறுகிறது.

    போலீசார் மாணவர்களுக்கு பல்வேறு எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் எடுத்தும் இது குறையவில்லை.

    இதற்கிடையே மீஞ்சூர் அருகே மின்சார ரெயிலில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் பட்டாக்கத்திகளை நடைமேடையில் உரசியபடி செல்வது தற்போது மீண்டும் நடந்து உள்ளது.

    இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரெயிலில் செல்லும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டில் கும்பலாக நின்றபடி உள்ளனர்.

    அவர்கள் கத்திவாக்கம், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு ரெயில் நிலையங்களின் நடைமேடையில் மின்சார ரெயில் வந்ததும் மாணவர்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசி செல்கின்றனர். இதனை கண்டு ரெயில் இருந்த பயணிகளும், நடைமேடையில் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அடுத்தடுத்த ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நுழையும்போது வீடியோ எடுக்கச்சொல்லி மீண்டும் நடைமேடையில் பட்டாக்கத்தியை உரசியபடி அவர்கள் அட்டகாசம் செய்து சென்றனர். இதனை மாணவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளார்.

    இதுகுறித்து மின்சார ரெயில் பயணிகள் கூறும்போது, மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    போலீசார் எச்சரித்தும் மாணவர்கள் கண்டு கொள்ளாமல் இதுபோல் நடந்து கொள்கிறார்கள். இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மாணவர்கள் கத்தியுடன் மோதும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது. மாணவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து மாணவர்களின் ரகளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

    • காலை வேளையில் அதாவது (8.30 - 10.30) நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதும்.
    • கண்டக்டர், டிரைவர்கள் கூட அவர்களை தட்டி கேட்கவோ, புகார் கொடுக்கவோ அச்சப்படுகிறார்கள்.

    சென்னை :

    பூந்தமல்லி, குன்றத்தூர், பட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து பிராட்வே செல்ல போக்குவரத்து துறை மூலம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் (53இ, 53பி, 53) ஆகிய பஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் காலை வேளையில் அதாவது (8.30 - 10.30) நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதும்.

    மேற்கூறிய பஸ்களில் பெண்கள், ஆண்கள் கூட்டத்தைவிட கல்லூரி மாணவர்களின் கூட்டம்தான் அதிகமாக காணப்படுகிறது.

    சென்னைக்கு வரும் கல்லூரி மாணவர்கள் குன்றத்தூர், குமணன்சாவடி, வேலப்பன் சாவடி, வானகரம் ஆகிய பகுதிகளில் இருந்து பஸ்களில் ஏறிக்கொள்கிறார்கள். பஸ்சின் முன் படிக்கட்டுகளிலும் பின் படிக்கட்டுகளிலும் மாணவர்கள் கூட்டம் சேர்ந்ததும் அவர்களின் அரங்கேற்றம் ஆரம்பமாகிறது.

    முதலில் கானா பாடல், பின்பு தாளம், அதன் பின்னர் கூச்சல் கடைசியில் இரைச்சல். அவர்கள் போடும் இரைச்சலில் பஸ்சில் யாரேனும் இதய நோயாளி இருந்தால் பஸ் பிராட்வே செல்வதற்கு பதில் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிடுமோ என்று பயணிகள் நினைக்கும் வண்ணம் மாணவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.

    அவர்களை யாரும், எதுவும் கேட்க தயங்குகிறார்கள், காரணம் பயம். நேற்று கூட 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாணவர்களை பார்த்து 'ஏனப்பா? கூச்சல் போடுகிறீர்கள்' என கேட்டதுக்கு அந்த பெண்மணியை ஆபாசமாக வசை பாடியது பஸ் பயணிகள் அனைவரையும் வேதனைப்பட வைத்தது. மேலும் அந்த மாணவர்கள் அனைவரும் முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பதால் கண்டக்டர், டிரைவர்கள் கூட அவர்களை தட்டி கேட்கவோ, புகார் கொடுக்கவோ அச்சப்படுகிறார்கள்.

    குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் சில பெண்கள் இவர்களின் இம்சைகளை தாங்க முடியாமல் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என ஆட்டோவில் பயணம் செய்து வருகிறார்கள்.

    ஆசிரியர்கள் கண்டிக்காத பிள்ளை போலீசில் அடி வாங்குவான் என்பது பழைய கூற்று. போலீஸ் தண்டிக்காத மாணவர்கள் கொலைகாரர்களாகவும், கொள்ளைக்காரர்களாவும் மாறுவார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இந்த வழித்தடம் மட்டுமல்லாது சென்னையின் முக்கிய பல வழித்தடங்களில் செல்லும் பஸ்களிலும் பயணிகள் இதுபோல் படும் இன்னல்கள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக இனிவரும் நாட்களில் ஒவ்வொரு மாநகர பஸ்களிலும் போலீசார் மாறுவேடத்தில் சென்று பஸ்களில் எல்லை மீறுபவர்களை பிடித்து பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும்.

    பயணிகள் ஒவ்வொருவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள், இதற்கிடையில் புது பிரச்சினையாக மாணவர்களின் கேலி, கிண்டல் உருவெடுத்திருப்பதால் அவை பயணிகளின் நிம்மதியை முழுவதுமாக சிதைத்து விடுகிறது.

    • கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

    காரைக்குடி

    தமிழகத்தில் மது பழக்கத்துக்கு அடுத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த பழக்கம் காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலும் நாசமாகிவிடும் அபாயம் உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ கத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கப்படு கிறது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி ஆலோசனைபடி தனிப்படை போலீசார் காரைக்குடி பகுதி முழு வதும் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதில் ஒரு மாணவர் மதுரையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர் என்பதும், அவர் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.

    பிடிபட்ட 2 கல்லூரி மாணவர்களிடம் இருந்து 1 கிேலா 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரின் விசாரணை யில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

    காரைக்குடி பகுதியில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டட பலர் 22 வயதுக்குட்பட்ட வர்கள். அதில் பெரும்பா லானவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தொடர்ந்து தனிப்படை போலீசார் கஞ்சா வியாபாரிகளை கண்காணித்து நடவடிக்ைக எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • நவ இந்தியாவில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
    • ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டனர்.

    கோவை 

    கோவை நவ இந்தியாவில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 2-வது, 3-வது ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.


    இதில் ஆத்திரம் அடைந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக் கொண்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து சிங்காநல்லூர், பீளமேடு போலீசார் இரு தரப்பை சேர்ந்த 15 மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மனித சங்கிலி அமைத்தும் புலிப் போன்று வேடமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • காடுகளில் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதும் புலிகளை காப்பாற்றலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி நுழைவாயிலில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி அமைத்தும் புலிப் போன்று வேடமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் , தேசிய விலங்கான புலிகளின் முக்கியத்துவத்தை கூறி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு அமலாக்க பிரிவு ‌காவல் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் வடக்கு காவல் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் , மக்களிடம் புலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்நாள் உலகம் முழுவதும் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது .காடுகளின் காவலன் புலிகள் எனவும் , காடுகளில் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதும் புலிகளை காப்பாற்றலாம். நாம் காடுகளை அழிப்பதன் மூலம் அதிக நகரங்களை உருவாக்குவதன் மூலம் வசிக்க இடம் இல்லாமல் உண்ண உணவு இல்லாமல் புலிகள் இறந்துவிடுகிறது .

    புலிகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் குறைவாக உள்ளது . இந்தியாவில் உள்ள 51 புலிகள் காப்பகங்களில், களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் தமிழகத்தில் உள்ளன. புலிகளின் கண்கள் இரவில் மனிதர்களை விட ஆறு மடங்கு தெளிவாக தெரியும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் அருள்குமார் , பாலசுப்பிரமணியம் , சுந்தரம் , பூபதி ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புலி போன்று வேடமிட்டும் , பதாகைகளை ஏந்திக்கொண்டும் , புலிகளின் முககவசங்களை அணிந்தும், கைக்கட்டை விரல்களில் புலியின் நிறத்தை வரைந்தும் உலக புலிகள் தின விழிப்புணர்வு கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • விடுதிகளில் தங்கி படிக்க விருப்பமுள்ளவர்கள் விடுதியில் சேருவதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
    • ண்ணப்ப படிவத்தில் மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அதில் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 28 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும் இயங்கி வருகின்றன.

    இதில் 2022-2023-ம் கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி, கல்லூரிக்கு அருகாமையில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்க விருப்பமுள்ளவர்கள் விடுதியில் சேருவதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக அளிக்கப்பட வேண்டும். விடுதியில் சேர்க்கப்படும் மாணவ, மாணவிகள் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருப்பதை கட்டாயம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    விண்ணப்ப படிவத்தில் மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அதில் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் கட்டாயமாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் ஆதார் கார்டு எண் கட்டாயம் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    பள்ளி விடுதிகளில் சேரு வதற்கான விண்ணப்பங்கள் வருகின்ற 20-ந் தேதி வரையும், கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளுக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி வரையும் சம்மந்தப்பட்ட பள்ளி, கல்லூரி விடுதிகள் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தென்மாவட்டத்தில் இருந்து வந்துள்ளீர்களா? என கேட்டு கல்லூரி மாணவர்களை தாக்கியது தெரியவந்தது.

    கோவை:

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத்(22). இவர் கோவை க.க.சாவடி பிச்சனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதி அறையில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வினோத், தனது கல்லூரி நண்பர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த முகிலன்(20), கள்ளக்குறிச்சியை சேர்ந்த மனோஜ்குமார்(21) ஆகியோருடன் கல்லூரி அருகே உள்ள பேக்கரிக்கு டீ குடிக்க சென்றனர்.

    அப்போது அங்கிருந்த சில வாலிபர்கள் வினோத் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் வினோத் மற்றும் அவரது நண்பர்களை கற்களால் தாக்கி மிரட்டி சென்றனர்.

    இதில் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் இது குறித்து மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தென்மாவட்டத்தில் இருந்து வந்துள்ளீர்களா? என கேட்டு கல்லூரி மாணவர்களை தாக்கியது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களை தாக்கிய பிச்சனூரை சேர்ந்த தனியார் நிறுவன சூப்பர்வைசர் பூமணி(21), பிச்சனூர் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த மற்றொரு தனியார் கல்லூரி கேண்டீன் கேஷியர் ரவிக்குமார்(19), பிச்சனூர் அண்ணாநகரை சேர்ந்த கல்லூரி மாணவர் முருகேசன்(19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் மீது தாக்குதல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பட்டாசுகளை வெடிக்கும் போது நமது கவனக்குறைவால் பல்வேறு ஆபத்துக்கள் நிகழும்.
    திருப்பூர்:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் சார்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட உறுதிமொழி அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

    அதன்படி இன்று திருப்பூர் அரசு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரியில் உள்ள குமரன் அரங்கில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    முன்னதாக அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், இந்த தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடனும் மிகுந்த கவனத்துடனும் கொண்டாட வேண்டும்.

    பட்டாசுகளை வெடிக்கும் போது நமது கவனக்குறைவால் பல்வேறு ஆபத்துக்கள் நிகழும். அதை தடுத்திடவேண்டும். அதிக சத்தமுள்ள பட்டாசுகளை வெடிப்பதால் சாலைகளில் விபத்துகள் நடக்கும்.

    அதிக சத்தமுள்ள பட்டாசுக்களை வெடிக்க வேண்டாம் என்றார். பிறகு மருத்துவமனைகள்  அமைந்துள்ள அமைதி பகுதிகளில் வெடிகளை வெடிக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    ×