search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரடி"

    • பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவிவருகின்றன.
    • கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரவேணு:

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. அவை உணவு, தண்ணீா் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சா்வ சாதாரணமாக உலவிவருகின்றன.

    இந்நிலையில் கோத்தகிரி அருகே கேசலாடா கிராமத்தில் ஒரு கரடி நேற்று புகுந்தது. அங்கு அங்கு உள்ள பகுதிகளில் சுற்றி திரிந்தது. இதனால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனா். சேசலாடா குடியிருப்புப் பகுதியில் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்த கரடி, பின்னா் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு சென்று விட்டது.

    எனவே அசம்பாவிதம் நடக்கும் முன்பாக இந்தக் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனா். 

    • சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
    • கரடி கூடலூர் தாசில்தார் அலுவலகம் வழியாக கூடலூா் நகரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் புகுந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அதிகமான வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த விலங்குகள் அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து வருகிறது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவதுடன், அங்குள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. அதோடு, சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியை யொட்டிவனத் தில் இருந்து சம்பவத்தன்று இரவு கரடி ஒன்று வனத்தை விட்டு வெளியேறியது.

    அந்த கரடி கூடலூர் தாசில்தார் அலுவலகம் வழியாக கூடலூா் நகரில் உள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் புகுந்தது.

    அங்கு அந்த கரடி வெகு நேரமாக சுற்றித் திரிந்துள்ளது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    நகரின் மையப்பகுதியிலுள்ள போலீஸ் நிலைய வளாகத்துக்குள் கரடி நுழைந்திருப்பது அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    • கடந்த 15 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
    • வனத்துறையினா் கூண்டு வைத்து பிடித்தனா்.

    ஊட்டி,

    குன்னூா் அருகே சேலாஸ் மற்றும் மேல்பாரதிநகா் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. அது குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்தது.

    எனவே அந்த கரடியைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனா். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனா்.

    இதனை தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டு வைத்து கடந்த 15 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.இந்நிலையில் ஊருக்குள் பதுங்கி இருந்த கரடி ஒருவழியாக கூண்டில் சிக்கியது.

    பின்னா் பிடிபட்ட கரடியை வனத்துறையினா் முதுமலை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா். வனத்துறை போலீசாருக்கு கடந்த 15 நாட்களாக போக்கு காட்டி வந்த கரடி பிடிபட்டதால், அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனா்.

    • வனப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.
    • திருப்பதி மலைபாதையில் சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கடித்துக் கொன்றது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. சிவன் கோவில் அமைந்துள்ள மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதி ஆகும்.

    மலையின் கீழ் இருந்து பல கிலோமீட்டர் சென்றால் தான் கோவிலை சென்றடைய முடியம். அங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

    இதனால் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை மலைபாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கோவில் அருகே உள்ள வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரடி ஒன்று சுற்றி திரிந்தது. இதனைக் கண்ட பக்தர்கள் இதுகுறித்து ஸ்ரீசைலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் கரடியை பிடிக்க கோவில் அருகே வனப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி ஒன்று சிக்கியது.

    இதையடுத்து வனத்துறையினர் கரடியை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். ஏற்கனவே திருப்பதி மலைபாதையில் சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கடித்துக் கொன்றது.

    இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது, வெளியில் கரடி நடமாடி கொண்டிருந்தது.
    • கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    காட்டெருமை, சிறுத்ைத, யானை உள்ளிட்டவை ஊருக்குள் புகுந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடியே ஊருக்குள் படையெடுத்து வருகின்றன.

    குறிப்பாக கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊருக்குள் புகும் கரடிகள், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்துவதுடன் மக்களையும் அச்சுறுறத்தி வருகிறது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் கக்காச்சி குடியிருப்பு பகுதியில் சம்பவத்தன்று ஒற்றை கரடி ஒன்று வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வந்தது.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் பல பகுதிகளிலும் நீண்ட நேரமாக சுற்றி திரிந்தது. இதற்கிடையே வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது, வெளியில் கரடி நடமாடி கொண்டிருந்தது.

    உடனடியாக மக்கள் சம்பவம் குறித்து குந்தா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் கரடியை குடியிருப்பு பகுதிக்குள் இருந்து அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்.

    இதற்கிடையே தங்கள் பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து, வனத்துறையினர் கரடியை பிடிக்க குடியிருப்பு பகுதியில் கூண்டு வைத்துள்ளனர். மேலும் கரடியின் நடமாட்டத்தை இரவு, பகலாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • திருமண வரவேற்பு விழாவிற்குள் கரடி புகுந்து இனிப்புகளை சாப்பிட்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகி வைரலானது.
    • பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து கரடியை விரட்டி உள்ளனர்.

    அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் ஒரு இளம்ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையொட்டி வரவேற்பு விழாவும் தடபுடலாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விருந்தினர்கள் திரளாக வந்திருந்தனர்.

    அவர்களுக்காக பல்வேறு இனிப்பு வகைகள் மற்றும் விதவிதமான உணவு பண்டங்கள் தயார் செய்யப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திருமண வரவேற்பு விழா நடைபெறும் இடத்திற்குள் கரடி புகுந்து விட்டது. இதைப்பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கும் இங்குமாக ஓடி தப்பிய நிலையில் கரடி நேராக அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த இனிப்புகள் மற்றும் உணவு பண்டங்களை எடுத்து சாப்பிட்டுள்ளது.

    பின்னர் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து கரடியை விரட்டி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திருமண வரவேற்பு விழாவிற்குள் கரடி புகுந்து இனிப்புகளை சாப்பிட்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகி வைரலானது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • குன்னூா் கோடேரி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு 5 பெரிய கரடிகள் ஒரே நேரத்தில் வந்தன.
    • கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக நாவல் பழ மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த மரங்களில் தற்போது நாவல்பழம் கனிய தொடங்கி உள்ளது. எனவே நாவல் பழங்களை ருசிப்பதற்காக கரடிகள் கூட்டம், கூட்டமாக தேயிலைத் தோட்டம் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகே வரத்தொடங்கி உள்ளன.

    இந்த நிலையில் குன்னூா் கோடேரி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்கு 5 பெரிய கரடிகள் ஒரே நேரத்தில் வந்தன. அவை அங்கு உள்ள நாவல் மரங்களில் இருந்து கீழே விழுந்து கிடந்த பழங்களை ருசித்து தின்றன.

    அதன்பிறகு நீண்ட நேரம் அந்த பகுதியில் சுற்றி திரிந்தன. இதற்கிடையே கோடேரி கிராமத்தினர் தேயிலை பறிப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் தோட்டத்துக்குள் நின்ற கரடிகளை பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-கோடேரி கிராமத்தில் நாவல்ப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், தற்போது கரடிகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. அங்கு தரையில் விழுந்து கிடக்கும் நாவல் பழத்தை ருசித்து விட்டு செல்கின்றன.

    இது தேயிலை தோட்ட தொழிலாளா்களை அச்சப்பட வைத்து உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பாக இந்தக் கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என

    வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் சாலைகளில் வருவதற்கு மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
    • கரடியை வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

    குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது .

    இந்நிலையில் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் கரடி ஒன்று மிகவும் ஆக்ரோஷமான நிலையில் நடமாடி வருகிறது.

    இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் சாலைகளில் வருவதற்கு மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    ஆக்ரோஷமாக உலா வரும் கரடியால் பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்னர் அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதிமக்கள் வனத்துறையினர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
    • பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு பஞ்சாயத்து பகுதியில் காபி, அன்னாசி பழம், வாழை, மிளகு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இங்கு குரங்குகள், முயல்கள், நரிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.

    இந்நிலையில் வாழவந்திநாடு பஞ்சாயத்து கரையன்காடுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பழனிசாமி (51), காளி (70). இவர்கள் இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

    வழக்கம்போல் இருவரும் இன்று காலை 6 மணி அளவில் அப்பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் வழியாக தோட்ட வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    காளியம்மன் கோவில் அருகே சென்றபோது மறைந்திருந்த கரடி, அவர்கள் மீது பாய்ந்து தாக்கியது. முகம், கை, கால் , கழுத்து, உடல் உள்ளிட்ட பகுதிகளில் குடித்து குதறியது. இதனால் நிலைகுலைந்த இருவரும் படுகாயங்களுடன் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இதையடுத்து பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக செம்மேடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவம் நடந்த வனப்பகுதியில் கரடியை பிடிப்பதற்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே இந்த பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தோட்ட வேலைக்கு சென்ற 2 பேரை கரடி கடித்து குதறிய சம்பவத்தால் வாழவந்திநாடு கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • யானை, காட்டு மாடுகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகின்றன.
    • தீப்பந்தங்களை காட்டி கிராம மக்கள் கரடியை வனத்திற்குள் விரட்டினர்

    அரவேணு

    கோத்தகிரி பகுதியில் தற்போது வனவி லங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.குறிப்பாக கரடிகள், சிறுத்தை, யானை, காட்டு மாடுகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகின்றன.

    நேற்று விவசாயி ஒருவரை கரடி தாக்கி படுகாயப்படுத்தியது. கோத்தகிரி அருகே உள்ள அரக்கோடு மல்லி க்கொப்பை என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 34). விவசாயி. இவர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர்மறைவில் மறைந்திருந்த ஒரு கரடி, பிரபு மீது ஆக்ரோஷமாக பாய்ந்தது. பிரபுவை கரடி கடித்து குதறியது.

    இதில் பிரபு படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்க த்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் கரடி அங்கிருந்து ஓடியது. பிரபுவை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிரபுவை தாக்கிய கரடி அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது.பொதுமக்கள் தீப்பந்த ங்களை காட்டி விரட்டினர் இதையடுத்து கரடி அங்கிருந்து ஓடி மறைந்தது. கிராமத்துக்குள் திரியும் அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து காட்டு ப்பகுதியில் விட வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். காயம் அடைந்த விவசாயி பிரபுவுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ௩ குழந்தைகள் உ ள்ளனர்.

    • பாட்டிஸ்ட் காலனியில் ஒரு கரடி பகல் நேரத்தில் சாலையில் ஓடும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.
    • கரடியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோத்தகிரி, பாட்டிஸ்ட் காலனியில் ஒரு கரடி பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்து சாலையில் ஓடும் காட்சி, அங்கு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்த பகுதியில் தொடர்ந்து உலா வரும் கரடி, பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நேரும்முன்பாக, அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கண்டமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு கரடிகள் உலா வருகின்றன.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் இருந்த கரடியை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் கதிர்வேல்புரத்தில் அதிக அளவு பளியர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலப்பர் கோவில் அருகே உள்ள கண்டமனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று மூலிகை, ஈஞ்சமார் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    அதன்படி கதிர்வேல்புரத்தைச் சேர்ந்த செல்வி (வயது 32) என்பவர் மூலிகை சேகரிக்க அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சென்றார். அனைவரும் திரும்பிய நிலையில் செல்வி மட்டும் வராததைக் கண்டு அவர்கள் திரும்பிச் சென்று பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் செல்வி காயங்களுடன் கிடந்தார்.

    அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்கு சேர்த்தனர். மூலிகை சேகரிக்க சென்ற போது புதரில் மறைந்திருந்த ஒரு கரடி செல்வியை தாக்கியதாகவும், உயிருக்கு பயந்து ஓடிய போதும் விரட்டி கடித்ததால் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்டமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு கரடிகள் உலா வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் இருந்த கரடியை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

    தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    ×