search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "v"

    • பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.
    • உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு.

    இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு

    கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி

    இரவு கோவிலுக்கு சென்று தரிசனம் பெறுவர்.

    மறுநாள் காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர்.

    பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

    வீடுகளை அலங்கரிக்கும் முறை

    பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து

    அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி

    நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

    கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.

    இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது.

    கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும்

    அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை.

    இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் எனப்படுகிறது.

    கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம்.

    கார் என்றும் கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மலரும் காலம் கார்த்திகை மாதம்.

    கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

    ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார்.

    திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும் தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது.

    இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் ஒரு காலத்தில் வெளிப்படும்.

    பிற்காலத்தில் அதையெல்லாம் பார்க்கப் போகிறார்கள்.

    அதனால்தான் அந்த மலையைச் சுற்றினாலேயே அத்தனை இன்பம் கிடைக்கும் என்று சொல்வது.

    அந்த அளவிற்கு மிகப் பழமையான மலை. அதனால்தான் இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார்.

    உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு.

    அதனால் ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது.

    • தங்களை அ.தி.மு.கவில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியிருந்தனா்.
    • ஓ.பி.எஸ். தரப்பினரின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

    புதுடெல்லி:

    கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்ட தீா்மானங்களை எதிா்த்தும், அ.தி.மு.க பொதுச்செயலாளா் தோ்தலை எதிா்த்தும், அ.தி.மு.க.வில் இருந்து தங்களை நீக்கியதை எதிா்த்தும் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆா்.வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகா் ஆகியோா் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா். தங்களை அ.தி.மு.கவில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அம்மனுவில் வலியுறுத்தியிருந்தனா்.

    இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு, அ.தி.மு.க பொதுக்குழு தீா்மானங்கள் செல்லும் என்றும், பொதுச்செயலாளா் தோ்தலுக்கோ, ஓ.பி.எஸ். உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதற்கோ தடை விதிக்க முடியாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

    இதை எதிா்த்து ஓ.பி.எஸ். உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோா் கடந்த ஆகஸ்ட் 25-ந்தேதி தீா்ப்பளித்தனா். அதில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லும். அ.தி.மு.கவில் மனுதாரா்களுக்கான உரிமை குறித்து உரிமையியல் வழக்கில்தான் தீா்மானிக்க முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீா்ப்பளித்துள்ளதால், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களுக்கு இடைக்காலமாக தடை விதிக்க முடியாது. அவ்வாறு தடை விதித்தால், அது பிரதான கோரிக்கை மனு மீதான உரிமையியல் வழக்கின் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கூறி, ஓ.பி.எஸ். தரப்பினரின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

    இந்த உத்தரவை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் உச்சநீதிமன்றத்தில் 4-ந் தேதி (புதன்கிழமை) மாலை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். வக்கீல் கவுதம் சிவ்சங்கா் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், தாங்கள் தொடா்ந்த வழக்கில் ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமா்வு உரிய வகையில் ஆராயாமல் வழக்கை தள்ளுபடி செய்து தீா்ப்பு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி துணிகரம்
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். இவரது மகள் நபிஷா குல்சும் (வயது 23) கடந்த ஏப்ரல் 28-ந் தேதி இவரது செல்போனுக்கு, பகுதி நேர வேலை உள்ளதாகவும், அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே தினசரி பணம் சம்பாதிக்கலாம் என்ற தகவலுடன் ஒரு குறுந்தகவல் வந்தது.

    இதை உண்மை என நம்பிய நபிஷா குல்சும் அந்த 'குறுந்தகவலில்' தனது சுயவிவரங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அளித்துள்ளார்.

    அதன்பின் அவரது செல்போனுக்கு ஒரு செய்தி வந்தது. அதில், இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் லிங்குகளை அனுப்பி அந்த ஓட்டல்களின் தரம் குறித்து ஸ்டார் மதிப்பெண்கள் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, தர மதிப்பெண் கொடுத்தால் ரூ.100 முதல் ரூ.190 வரை தினசரி பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, நபிஷா குல்சும் ஸ்டார் மதிப்பெண்கள் கொடுத்துள்ளார். அதில், அவருக்கு ரூ.100 தொடங்கி ரூ.10 ஆயிரம் வரை பணம் வந்தது. இதனால், அவர் மகிழ்ச்சியடைந்தார்.

    குறுந்தகவல் அனுப்பி மோசடி

    இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் ஒரு குறுந்தகவலை அனுப்பி அதில் உள்ள வங்கி கணக்குக்கு பணம் செலுத்தினால் கூடுதலாக பணம் தருவதாக மோசடி நபர்கள் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, நபிஷா குல்சும் அடுத்தடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.9 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார்.

    ஆனால், கூடுதல் பணம் வரவில்லை. இதையடுத்து, நபிஷா குல்சும் அந்த நபர்களுக்கு மெசேஜ் மூலம் பதில் கேட்டுள்ளார். அதற்கு, அவர்கள் இன்னும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

    சைபர் கிரைம் போலீசில் புகார்

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நபிஷா குல்சும் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து `ஆன்லைன்' மோசடி கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 15 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
    • வனத்துறையினா் கூண்டு வைத்து பிடித்தனா்.

    ஊட்டி,

    குன்னூா் அருகே சேலாஸ் மற்றும் மேல்பாரதிநகா் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. அது குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்தது.

    எனவே அந்த கரடியைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனா். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனா்.

    இதனை தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டு வைத்து கடந்த 15 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.இந்நிலையில் ஊருக்குள் பதுங்கி இருந்த கரடி ஒருவழியாக கூண்டில் சிக்கியது.

    பின்னா் பிடிபட்ட கரடியை வனத்துறையினா் முதுமலை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா். வனத்துறை போலீசாருக்கு கடந்த 15 நாட்களாக போக்கு காட்டி வந்த கரடி பிடிபட்டதால், அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனா்.

    • வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
    • இ சேவை மையங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் 14,82,079 ஆண் வாக்காளர்களும், 15,32,354 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர்கள் 539 பேரும் என மொத்தம் 30,14,972 பேர் உள்ளனர். 1-1-2023, 1-4-2023, 1-7-2023, 1-10-2023 அன்று 18 வயது பூர்த்தியாகி இருப்பின் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை இணைக்க கோரி விண்ணப்பம் அளிக்கலாம்.

    அதேபோன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மற்றும் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் பெயர் நீக்குதல் ஆகியவற்றுக்கும் விண்ணப்பங்கள் அளிக்கலாம். இதற்காக விண்ணப்பங்களை வருகிற 9- ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள வாக்கு பதிவு மையங்கள், உதவி வாக்காளர் அலுவலர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும்.

    இது தவிர வருகிற 12-11-22, 13-11-22 மற்றும் 26-11-22 27-11-22 ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

    இதில் வாக்காளர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6ன் மூலமாகவும், ஏற்கனவே உள்ள பதிவில் திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும், படிவம் 8-யை பயன்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய www.nvsp.in எனும் இணைய முகவரி வாயிலாகவோ அல்லது 'Voters Helpline App' என்ற செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

    மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மனுக்களை பதிவேற்றம் செய்யலாம். இ சேவை மையங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5-1-2023 அன்று வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டப்பகலில் வீடு புகுந்து நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • நகையை திருடிவிட்டு தப்பி சென்றனர்

    திருச்சி:

    திருச்சி உறையூர் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 29). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேைல பார்த்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாயாரை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    வீட்டில் இருந்த அவரின் சகோதரி முன்பக்க கதவை திறந்து வைத்துக் கொண்டு சமையலறையில் பணியில் இருந்துள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் நைசாக வீடு புகுந்து பீரோவில் இருந்த இரண்டு பவுன் நகையை திருடிவிட்டு தப்பி சென்றனர். சமையல் அறையில் இருந்த கிருஷ்ணனின் சகோதரி இதனை கவனிக்கவில்லை.

    வீடு திரும்பிய கிருஷ்ணன் நகை திருடு போனது குறித்த அறிந்த அவர், இதுபற்றி உறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வீடு புகுந்து நகை திருடிய திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்த தர்மராஜ் (21), விக்ரம் (19) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர்.

    மேலும் அவர்களுக்கு வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. 

    • கல்லூரிக்கு செல்வதாக சென்ற மாணவர் மாயமானார்
    • வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை

    திருச்சி :

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரன் நகர் செட்டியாபட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர்(46). இவரின் மகன் விக்னேஷ்(16). இவர் அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு புறப்பட்டு சென்ற அவர்

    அதன்பின் திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் எடமலைப்பட்டிபுதூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் விக்னேசைதேடி வருகின்றனர்.

    ×