search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திகுத்து"

    • கணவரை கத்தியால் குத்திய பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    • காயமடைந்த சுதர்சன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை இந்திரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (34). இவர் மணிமேகலை என்ற பிரியா(29) என்பவரை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். சுதர்சனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று மாலை சுதர்சன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதை மணிமேகலை தட்டி கேட்டார். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த மணிமேகலை காய்கறி வெட்டும் கத்தியால் கணவரை குத்தினார். காயமடைந்த சுதர்சன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • பிரபாகரனை கத்தியால் தொடை மற்றும் வயிற்றுப் பகுதி யில் குத்தினர்.

    கடலூர்:

    கடலூர் வண்டிபாளை யம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாசிலாமணி. அவரது மகன் பிரபாகரன் (32). இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை புதுச்சேரி மாநிலம் குருவிநத்தம் பகுதியை சேர்ந்த கலைமணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால் கலைமணி பிரபாகரனுக்கு வாடகை பணத்தை சரியாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இது குறித்து பிரபாகரன், கலைமணியிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபாகரன் நேற்று இரவு உண்ணாமலை செட்டி சாவடி பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த கலை மணி மற்றும் 3 பேர் பிரபாகரனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளனர்

    மேலும் பிரபாகரனை கத்தியால் தொடை மற்றும் வயிற்றுப் பகுதி யில் குத்தினர். இதில் காயமடைந்த பிரபா கரன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் குருவி நத்தம் சேர்ந்த கலைமணி, புதுச்சேரி லால்பேட்டை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31), புதுச்சேரி குருவி நத்தம் சேர்ந்த ஸ்ரீதர் (வயது 24), அழகிய நத்தம் சேர்ந்த செல்வம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ராஜேஷ் , ஸ்ரீதர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    செல்போனை திருடியதாக கூறி கத்தியால் குத்திய 2 பேர் கைது

    திருச்சி, 

    திருச்சி மாவட்டம் தொட் டியம் அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த–வர் சுரேஷ் (வயது 27). இவர் தனது நண்பர் சத்ய–ராஜ் என்பவருடன் கோட்டை–மேடு சன்னாசியப்பன் கோவில் அருகாமையில் திறந்த வெளியில் உட் கார்ந்து மது குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்ப–டுகிறது.இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கோட்டைமேடு நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த ரகுபதி (24), சுகுமார் (23), சரவணன் (40) ஆகிய 3 பேரும் தனியாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.இதற்கிடையே ரகுபதி–யின் செல்போன் தொலைந் துள்ளது. உடனே எதிரே மது குடித்துக் கொண்டிருந்த சுரேசிடம் சென்று என்னு–டைய செல்போனை நீ தான் திருடினாய், அந்த செல்போனை கொடுத்து விடு என ரகுபதி கூறி–னார்.ஆனால் சுரேஷ் நான் திருடவில்லை என்று கூறி மறுத்துள்ளார். அதைத் தொடர்ந்து இரு தரப்பின–ருக்கும் இடையே மோதல் ஏற் பட்டது. ஆத்திரமடைந்த ரகு–பதி தரப்பினர் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பி ஓடினர்.இதில் சுரேசுக்கு கழுத்து, கன்னம், உதடு ஆகி ய இடங்களில் பலத்த கத்திக்குத்து விழுந்தது. இதைப்பார்த்த அங்கு வந்த நண்பர் சத்யராஜ் அவரை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக தொட்டியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரகுபதி, சுகுமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட சரவணனை தேடி வருகின்றனர்.

    • சேலம் அன்னதானப்பட்டி அடுத்த மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த தொழிலாளிக்கு கத்திகுத்து.
    • பிரகாஷ் அருகில் இருந்த குவாட்டர் பாட்டிலை உடைத்து சுப்ரமணியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் குடல் சரிந்து சுப்ரமணி மயங்கி விழுந்தார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி அடுத்த மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்ரமணி ( வயது 60).

    பிரகாஷ் (57). நண்பர்களான இவர்கள் இருவரும் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் மூட்டை

    தூக்கும் கூலித் தொழிலாளர்க ளாக வேலை செய்து வருகின்ற னர்.

    இந்த நிலையில் வேலை முடிந்து இருவரும் நேற்று இரவு தாதகாப்பட்டி சண்முக நகர் சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்தனர். தொடர்ந்து இருவரும் மது அருந்தி விட்டு பேசி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சுப்ரமணி பிரகாஷை தகாத வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் இருந்த குவாட்டர் பாட்டிலை உடைத்து சுப்ரமணியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் குடல்

    சரிந்து சுப்ரமணி மயங்கி விழுந்தார். இதனால் பதற்ற மடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அருகில் இருந்த வர்கள் படுகாயமடைந்த சுப்ர

    மணியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் அருகே வாலிபரை கத்தியால் தாக்கினர்
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், வெள்ளியணை, புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). கடவூர் பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (35) ஆடு வியாபாரி, இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில், வெள்ளியணை - விஜயபுரம் சாலையில், சக்திவேல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்த சிவாஜி, அவரை வழிமறித்து, தகாத வார்த்தையால் திட்டி, கத்தியில் குத்தினார். அதில், சக்திவேலுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, சக்திவேல் அளித்த புகாரின் பேரில், சிவாஜியை வெள்ளியணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை அருகே டிரைவர்-வாலிபருக்கு கத்திகுத்து விழுந்தது.
    • இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் இந்திரா நகர் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் சுகுமாரன் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று நேதாஜி தெருவில் ஒரு பெட்டிக்கடை முன்பாக தனது ஆட்டோவை நிறுத்தினார்.

    அப்போது அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த நவநீதன் மகன் சதீஷ்குமார் (24), ஜெயஹிந்த்புரம் என்.எஸ்.கே தெரு மாரிமுத்து மகன் மணிகண்டன் என்ற எம்டன் மணி (25), நேதாஜி தெரு பாண்டி மகன் பாலமுருகன் (19) மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் சுகுமாரனை வேறொரு இடத்தில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சிறுவன் உள்பட 4 பேரும் சுகுமாரனை ஆபாசமாக பேசி கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், மணிகண்டன், பாலமுருகன், 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    ஆரப்பாளையம் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் நவீன் பாண்டி (21). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் விக்கி (20),வீரபிரபு (20), சரண்குமார் (20) ஆகிய 4 பேர் மேலப்பொன்னகரம் 2-வது தெருவை சேர்ந்தவர் வளர்மதி (54) மகனை மது குடிக்க அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

    இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நவீன்பாண்டி உள்பட 4 பேரும் வளர்மதியின் மகனை கேலி கிண்டல் செய்து கத்தியால் குத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து வளர்மதி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் பாண்டி , விக்கி, வீரபிரபு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    • சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பஸ்சில் வந்தார்.
    • போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் (வயது 34). பெயிண்டர்.

    சம்பவத்தன்று இவர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பஸ்சில் வந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவர் செல்வத்திடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். பஸ் ராமநாதபுரம் சிந்தாமணி பஸ் நிறுத்தம் வந்ததும் செல்வம் பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது அவரை மணிகண்டன் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மிரட்டி பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த குண்டு மணிகண்டன் தான் வைத்து இருந்த கத்தியால் செல்வத்தை குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குண்டு மணிகண்டனை தேடி வருகிறார்கள்.

    இவர் மீது ஏற்கனவே கோவை மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    • வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • தப்பி ஓடிய ரத்தின ஈஸ்வரன் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 39). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்து இருந்தார். இதனை அந்த பெண்ணின் சகோதரர் தட்டி கேட்டார். இருந்த போதிலும் ராமமூர்த்தி அந்த பெண்ணுடன் தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ராம மூர்த்தி நேற்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக ராமமூர்த்தி, சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமமூர்த்தியை கத்தியால் குத்தியதாக, முத்துப்பட்டி நாகேந்திரன் மகன் வெற்றி வேல் (வயது 22) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய ரத்தின ஈஸ்வரன் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • கவாஸ்கர் அவரது நண்பர் கண்ணனுடன் சென்று மைக்கேல்ராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
    • வடசேரி போலீசார் கவாஸ்கர், கண்ணன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த திருநங்கையிடம் அருகுவிைளயைச் சேர்ந்த கவாஸ்கர் என்பவர் தகராறு செய்துள்ளார். இதை கிருஷ்ணன்கோவில் மேல தெருகரையைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது 19). தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் கவாஸ்கர் அவரது நண்பர் கண்ணனுடன் சென்று மைக்கேல்ராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் கத்தியாலும் அவரை குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த மைக்கேல் ராஜ் ஆசாரிப்பள் ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வடசேரி போலீசார் கவாஸ்கர், கண்ணன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முகம், நெற்றி, தாடை, கை ஆகிய இடங்களில் கத்தியால் வெட்டினர்
    • தாக்கிய கும்பல் கொலை மிரட்டல்

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட காட்டுவிளையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் (32) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் சதீஷ்குமார் வீட்டின் அருகாமையில் நின்று கொண்டிருந்தபோது குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜு (62), சீமா (33) ஆகியோர் தடுத்து நிறுத்தி முகம், நெற்றி, தாடை, கை ஆகிய இடங்களில் கத்தியால் வெட்டி காயப்படுத்தி உள்ளனர்.

    சதீஷ்குமார் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்ததும், தாக்கிய கும்பல் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×