search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிங்காநல்லூர்"

    • வேலூர் காட்பாடியில் நடந்த உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • 16 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.

    கடந்த 8-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலூர் காட்பாடியில் நடந்த உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், செயின், கம்மல், மோதிரம், டாலர் உள்பட 16 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    நேற்று வீட்டிற்கு திரும்பிய செல்வராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டார்.

    பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    • லட்சக்கணக்கில் பணம் தப்பியது
    • வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கோவை :

    கோவை சிங்காநல்லூர்-திருச்சி ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.

    சம்பவத்தன்று இரவு இந்த ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் பணம் எடுக்க முடியாததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். மறுநாள் பணம் எடுப்பதற்காக சென்ற வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து வங்கி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏ.டி.எம் மையத்துக்கு வங்கி அதிகாரிகள் வந்து பார்த்தபோது, பணம் கொள்ளை போகவில்லை என்பதும், ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்கமுடியாமல் மர்ம நபர்கள் விட்டு சென்றதால், லட்சக்கணக்கில் பணம் தப்பியதும் தெரியவந்தது.

    இது குறித்து வங்கி அதிகாரி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் ஏ.டி.எம்.மையத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டிவி காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பஸ்சில் வந்தார்.
    • போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் (வயது 34). பெயிண்டர்.

    சம்பவத்தன்று இவர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பஸ்சில் வந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவர் செல்வத்திடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். பஸ் ராமநாதபுரம் சிந்தாமணி பஸ் நிறுத்தம் வந்ததும் செல்வம் பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது அவரை மணிகண்டன் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மிரட்டி பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த குண்டு மணிகண்டன் தான் வைத்து இருந்த கத்தியால் செல்வத்தை குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குண்டு மணிகண்டனை தேடி வருகிறார்கள்.

    இவர் மீது ஏற்கனவே கோவை மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் எதிரே டாஸ்மாக் பார் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது
    • இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் பஸ் நிைலயம் பின்புறம் விநாயகர் கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.தற்போது அந்த கோவிலில் நடந்து வந்த பணிகள் அனைத்தும் முடிந்து, .கும்பாபிஷேகத்திற்கு தயாரான நிலையில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் எதிரே டாஸ்மாக் பார் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து போரா ட்டத்திலும் ஈடுபட்டனர்.மேலும் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையத்திலும், டாஸ்மாக் அதிகாரிகளிடமும் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து அந்த கடையை மூடினர் . ஆயினும் நேற்று மீண்டும் டாஸ்மாக் பார் திறக்கப்பட்டது. சம்பவம் அறிந்த மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய முத்து நேரில் சென்று பார் ஊழியர்களை எச்சரித்து, அனைவரையும் வெளியேற செய்து பாரை பூட்டிவிட்டு சென்றார்.

    அதனை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் அதிகாரிகளுக்கும், மதுவிலக்கு போலீசாருக்கும் நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    • சிங்காநல்லூர் நிலையத்தில் ெரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
    • திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவை-நாகர்கோவில், மற்றும் பாலக்காடு- திருச்சி பயணிகள் ெரயில்கள் நின்று சென்றன.

    கொரோனாவுக்கு பிறகு இந்த ெரயில்கள் எக்ஸ்பிரஸ் ெரயில்களாக மாற்றப்பட்டன. தொடர்ந்து இங்கு ெரயில்கள் நின்று செல்வதில்லை.

    இதனை தொடர்ந்து கோவை சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று காலை ெரயில் நிலையத்தை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கலந்துகொண்டவர்கள் சிங்காநல்லூர் நிலையத்தில் ெரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    போராட்டத்தின் போது, நா.கார்த்திக் கூறியதாவது:-சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ெரயில்கள் நின்று செல்வதில்லை. இதன் காரணமாக இங்கிருந்து திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.

    இங்கு ரெயில்கள் நிறுத்த செல்ல வலியுறுத்தி சேலம் கோட்ட ெரயில்வே மேலாளர் தெற்கு ெரயில்வே பொது மேலாளர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் கோவையில் இருந்து செல்லும் ெரயில்கள் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்து கோவை வரும் ெரயில்கள் சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மனோகரன், சிங்கை பிரபாகரன், பகுதி செயலாளர் , தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு‌.பழனிச்சாமி, கொங்குநாடு மக்கள் கட்சி தனபால், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டல செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளி ட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • இடிந்த விழும் நிலையில் கட்டிடங்கள் உள்ளது
    • அனைத்து வீடுகளின் கதவுகளிலும் நோட்டீஸ் ஒட்டினர்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூரில் உழவர் சந்தை பின்புறம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், 11 ஏக்கரில் கடந்த 1984-ம் ஆண்டு தரைத்தளம் மற்றும் 3 தளங்களைக் கொண்ட 21 பிளாக்குகளில் 960 வீடுகள் கட்டப்பட்டன.

    இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருடங்கள் பல ஆனதாலும், முறையாக பராமரிப்பு இல்லாததாலும், பழுதடைந்து காணப்படுகின்றன.தற்போது 409 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித் தருமாறு குடியிருப்புவாசிகள் தமிழக வீட்டுவசதி வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், பருவ மழைக் காலம் தொடங்க உள்ளதையடுத்து, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் ஆர்.டி.ஓ. இளங்கோ மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

    பழுதடைந்த நிலையில் கட்டிடங்கள் உள்ளதால், குடியிருப்புகளை காலி செய்யுமாறு குடியிருப்புவாசி களிடம் அறிவுறுத்தினர். மேலும், அனைத்து வீடுகளின் கதவுகளிலும் நோட்டீஸ் ஒட்டினர்.

    அந்த நோட்டீசில், குடியிருப்புகள் இடிந்துவிழும் அபாயகரமான நிலையில் உள்ளது புலத்தணிக் கையில் தெரியவருகிறது. எனவே, குடியிருப்புகளில் வசிப்போர், தாங்களாக முன்வந்து, வருகிற 20-ந் தேதிக்குள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு உத்தரவிடப்படுகிறது. தவறும் பட்சத்தில் குடியிருப்புகளை காலி செய்ய சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×