சிங்காநல்லூரில் அரசு ஊழியர் வீட்டில் 16 பவுன் நகைகள், பணம் கொள்ளை

வேலூர் காட்பாடியில் நடந்த உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றார். 16 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது.
சிங்காநல்லூரில் அரசு ஊழியர் வீட்டில் 16 பவுன் நகைகள், பணம் கொள்ளை
Published on

கோவை,

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.

கடந்த 8-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலூர் காட்பாடியில் நடந்த உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், செயின், கம்மல், மோதிரம், டாலர் உள்பட 16 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

நேற்று வீட்டிற்கு திரும்பிய செல்வராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டார்.

பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com