search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டனம்"

    • பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் இன்று கழுத்தில் ‘மப்ளர்’ அணிந்து வந்திருந்தனர்.
    • பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    நாகர்கோவில்:

    மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் மீனா தேவ், முத்துராமன், வீர சூர பெருமாள், அய்யப்பன், ரமேஷ் ஆகியோர் இன்று கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் மீனாதேவ் பேசுகையில், நாகர்கோவில் அனாதை மடம் மைதானத்தில் இருந்து மணலை அப்புறப்படுத்து வதற்கு ரூ.25 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது.

    இது மாநகராட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். வருவாய் வரக்கூடிய இந்த திட்டத்தில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்து உள்ளது. தேசியக் கொடி ரூ.20 லட்சத்தில் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதிலும் ஊழல் நடந்து உள்ளது, இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    அப்போது மற்ற பா.ஜ.க. கவுன்சிலர்கள் நாகர்கோவில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை சீவி விடுவதாக கூறிய மேயரை கண்டிக்கிறோம் என்று கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நாங்கள் கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க., பாரதிய ஜனதா கவுன்சிலர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.

    பின்னர் பா.ஜ.க. கவுன்சி லர்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறி போராட்ட த்தில் ஈடுபட்டனர். கையில் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • கேரளாவில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
    • அடையாள அட்டை வழங்க வேண்டும்

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கேரளா வில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும். அடை யாள அட்டை வழங்க வேண்டும் என்பது உட்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு இன்று கண்டன ஆர்ப்பா ட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கி னார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகனன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பொன் சோபன ராஜ், மாநில குழு உறுப்பினர்கள் இந்திரா, சித்ரா மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், பொன் சுந்தர், மாரிமுத்து, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

    • ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.
    • தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில்:

    பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா வினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி னர். குமரி மாவட்டத்தில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சுபாஷ், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வளையாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு பேசினார்.

    அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் பாரத் நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திர ளான பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறை வில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தக்கலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் இரணியல் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பேரூர் பாஜக தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார் ஒன்றிய தலைவர் பத்மநாபன் பேரூர் தலைவர் ஸ்ரீகலாமுருகன் மாவட்ட செயலாளர் பிரியா சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணகுமார் மாவட்ட பார்வையாளர் குமார் தாஸ் பொது செயலாளர் வக்கீல் பத்மகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ராஜாக்கமங்கலம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பாஜக தலைவர் பொன் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட் டத்திற்கு குமரி பா. ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் டாக்டர் சிவக்குமார், ராஜக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார், கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெயஸ்ரீ, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹேமா, பாஜக ஒன்றிய செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தாமோதரன் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் செல்லத்துரை, ரமேஷ் முன்னாள் வந்திய கவுன்சிலர் சுகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆசாரிபள்ளம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மேற்கு மாநகர பாஜக தலைவர் சிவசீலன் தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் ஆன்றோடைல்ஸ்டைனா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    போராட்டத்தில் மாநகர பொதுச்செயலாளர்கள் வேலானந்தன், பிரஜாபதி, பொருளாளர் ராஜுவ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ பிரசாத் மாநகர தொழில் பிரிவு தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

    குளச்சல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் நகர தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் குமாரதாஸ், நகர பார்வையாளர் சிவகுமார் பிரபு, மாவட்ட பிரசார அணி முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், நகர பொதுச்செயலாளர் ஜெனோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச்செயலாளர் பிரதீப்குமார் வரவேற்று பேசினார்.மாவட்ட முன்னாள் தலைவர் பொன் ரெத்தினமணி, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சுஜித்திரா, முன்னாள் கவுன்சிலர் விஜயராணி மற்றும் ஜஸ்டின் செல்வகுமார், பகவதியப்பன், ஜெயச்சந்திரன், ராஜன், சூர்யா முருகன், அல்போன்ஸ், ஜாண்சன், டிக்சன், பெருமாள், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திரளான நிர்வாகிகள் பங்கேற்பு
    • கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது‌.

    நாகர்கோவில்:

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் அந்தஸ்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்படாததை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடந்தது .

    இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலை வரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. அமைப்பு செயலாளர் பச்சைமால் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர் ஜெசிம், பொன்சுந்தர்நாத், ராஜ்குமார், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன்.

    மாநகராட்சி கவுன்சி லர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், முன்னாள் நகர செயலாளர்கள் சந்துரு, சந்திரன், முன்னாள் கவுன் சிலர் சகாயராஜ், பகுதி செயலாளர்கள் முருகே ஸ்வரன், ஜெயகோபால், ஜெவின் விசு மற்றும் ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ் நிர்வாகிகள் ராஜாராம், இரணியல் லட்சுமணன், வடிவை மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒரு சிலர் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது‌.

    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அறிக்கை
    • நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    நாகர்கோவில்:

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் நாளை 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பான இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் கன்னியா குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயருமான மகேஷ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.மாநகரச் செயலாளர் ஆனந்த், இளைஞர் அணி அமைப்பாளர் சிவராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டம் குறித்து கிழக்கு மாவட்ட செய லாளரும் மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    அதன்படி கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி சார்பில் நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நாளை காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடக்கிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி கிளைச்செயலா ளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • நீலகிரி எம்.பி., ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்து சமுதாய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஜனநாயக முறையில் கண்டனம் தெரிவிக்க இந்திய நாட்டில் உரிமை உள்ளது.

    பல்லடம் :

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து மதம் குறித்து நீலகிரி எம்.பி., ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இந்து சமுதாய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஜனநாயக முறையில் கண்டனம் தெரிவிக்க இந்திய நாட்டில் உரிமை உள்ளது. ஆனால் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இந்த சம்பவங்கள் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். .இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அமைச்சர் பட்டியலின மக்களை புண்படுத்திவிட்டார் என்று அம்பேத்கார் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது

    புதுக்கோட்டை:

    அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மணம்பூண்டியில் நியாய விலை கட்டடத் திறப்பு விழாவில், திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், அதே மேடையில் அமர்ந்திருந்த பெண் ஒன்றிய குழு தலைவரை பார்த்து, சாதியை குறிப்பிட்டு அந்த ஒன்றிய குழு பெண் தலைவரை பொதுமக்கள் முன்னிலையில் ஜாதிய வன்கொடுமை செய்துள்ளார். இந்திய தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்,

    மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒருவரை ஜாதியை சொல்லி களங்கப்படுத்துவது சட்ட சாசனத்திற்கு எதிரான செயலாகும். இந்திய இறையாண்மையை காப்பற்றுவேன் என்று உறுதிமொழி ஏற்று அமைச்சரான ஒருவர் இந்திய இறையாண்மையையும் ஒற்றுமையையும் குலைக்கும்  வகையில் பேசியது கண்டனத்திற்குரியது.

    தமிழகத்தில் இருக்கும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பங்கு வகிக்கும் பட்டியலின மக்களின் உணர்வுகளை அமைச்சர் பொன்முடி புண்படுத்திவிட்டார். இச்செயலுக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில், அம்பேத்கர் மக்கள் இயக்கம் தமிழகம் தழுவிய போராட்டத்தை கையிலெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      நாகர்கோவில்:

      தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் அதை திரும்பப் பெறக் வலியுறுத்தியும் அனுமதி இன்றி டாஸ்மார்க் மதுபான பார் நடத்துவதை கண்டித்தும் குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

      அமைப்புச் செயலாளர் பச்சைமால். மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், அனைத்துலக எம்ஜி.ஆர் மன்றம் கிருஷ்ண தாஸ், இளைஞர் அணி செயலாளர் சிவ செல்வராஜ் ,வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பரமேஸ்வரன், நாகர்கோவில் மாநகராட்சி பகுதி செயலாளர்கள் ஜெய கோபால், முருகேஸ்வரன், ஜெவின், விசு ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

      அ.தி.மு.க ஆட்சியில் தான் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இலவச லேப்டாப் போன்ற எண்ணற்ற திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு உன்னதத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

      ஏழை எளிய மக்களை பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். விலைவாசி உயர்ந்துள்ளது.மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காண 2024-ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான நல்லாட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      ஆர்ப்பாட்டத்தில் அவை தலைவர் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம்,மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், அணி செயலாளர்கள் ஜெயசீலன்,ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம்,பொன் சுந்தரநாத்,ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார்,மாவட்ட கவுன்சிலர் நீல பெருமாள், மாநகராட்சி கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், ஸ்ரீலிஜா, குமரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வினோஜ்,தோவாளையூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், மற்றும் நிர்வாகிகள் சகாயராஜ், சந்துரு, வடிவை மாதவன், ரெயிலடி மாதவன், கோட்டார் கிருஷ்ணன், வெங்கடேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், முன்னாள் குளச்சல் தொகுதி செயலாளரும் குளச்சல் நகராட்சி கவுன்சிலருமான ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரவீந்திரவர்சன், உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மண்எண்ணை விளக்குகளுடன் வந்திருந்தனர். அவர்கள் அரசை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.

      • ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து மதுரை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
      • இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

      மதுரை

      மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, பிரதமர் மன்மோகன் சிங்கின் வயதை (80) நோக்கி போகிறது" என்று பா.ஜ.க. கிண்டல் செய்தது.

      நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது ரூபாய் மதிப்பு (58). அதாவது பிரதமர் மோடியின் வயதை விட (64) குறைவாகத்தான் இருந்தது. இன்றைக்கு, டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, பிரதமரின் அண்ணன் சோம்பாய் மோடியின் வயதை (80) தொடும் நிலையில் உள்ளது.

      நீங்கள் இந்திய பொருளாதாரம் வளரும் என்று சொன்னது, டாலர் வளர்ச்சியைத்தானா?"என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

      • தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மற்றும் பள்ளிவாசல்களை சீரமைக்க தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது
      • வக்பு வாரியத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே அரசு தலையிட முடியும்

      நாகர்கோவிலில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

      சிறுபான்மை நலத்துறை சார்பில் அனைத்து மக்க ளுக்கும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 முதல் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

      தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மற்றும் பள்ளிவாசல்களை சீரமைக்க தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 70-க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஆலயங்களை பராமரிக்க இதுவரை 1.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

      தமிழகத்தில் வக்பு வாரியத்தில் 150-க்கு மேற்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதாக தெரிய வந்தது. இது தொட ர்பாக ஆய்வு செய்து 100-க்கு மேற்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் கையகப்படுத்தப்பட்டு வக்பு வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

      சொத்துக்களை மீட்கும் போது பள்ளிவாசலுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் இதற்கு வரவேற்பு உள்ளது.

      உலமாக்களுக்கு பென்சன் வழங்க நடவடி க்கை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை விண்ண ப்பித்த 1,600 பேருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. உலமாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் மனைவிக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

      இது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடி க்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாதம் முதல் உலமாக்கள் மாத உதவி தொகை பெறுபவர்கள் இறந்து விட்டால் அவரது குடும்ப த்திற்கு வழங்க நடவடி க்கை எடுக்கப்பட்டு உள்ளது.

      மேலும் உலமாக்கள் உதவி தொகை பெற விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

      இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீற முடியாது. வக்பு வாரியத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே அரசு தலையிட முடியும். திராவிட மாடல் ஆட்சியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.

      இந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று வேறுபாடு இல்லாமல் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒன்றே குலம். ஒருவனே தெய்வம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

      திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். வெளிநாடு சென்ற வர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நல வாரியத்தில் பதிவு செய்து சென்றவர்களுக்கு 60 வயது கடந்தாலும் அவர்களுக்கு பென்சன் வழங்குவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

      அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை மக்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு, அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்டி. வரி விதித்து இருப்பது கண்டனத்து க்குரியதாகும். அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

      விவசாயிகள், வியாபாரிகள் அனைவரும் இதற்கு கண்டனம் தெரி வித்து உள்ளனர். முதல்- அமைச்சரை வியாபாரி களும், வணிகர்களும் சந்தித்து வலியுறுத்த உள்ளா ர்கள். இந்த பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் நல்ல தீர்வு காண்பார்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      பாகிஸ்தானில் பஷ்தூன் இன பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக போராடிவரும் மனித உரிமை செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயில் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச பொது மன்னிப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது. #GulalaiIsmail
      இஸ்லாமாபாத்:

      பாகிஸ்தான் நாட்டின் கைபர் பகதுங்கவா, பலூசிஸ்தான் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் பழங்குடி இனத்தவர்களான பஷ்தூன் இன பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். 

      இவர்களுக்கான உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்காக போராடி வரும்  மனித உரிமை செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயில் என்ற பெண்ணுக்கும் கர்நாடக மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் என்பவருக்கும் ரஷிய நாட்டின் மிக உயரிய விருதான ‘அன்னா ஸ்டெபனோவ்னா பொலிட்கோவ்ஸ்க்காயா விருது’ கடந்த 2017-ம் ஆண்டு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

      இந்நிலையில்,  கைபர் பகதுங்கவா மாகாணத்துக்குட்பட்ட சுவாபி நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குலாலாய் இஸ்மாயில் உள்பட 19 பேருக்கு எதிராக அனுமதி இல்லாமல் திரள்வது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

      இந்நிலையில், லண்டன் நகரில் இருந்து இன்று விமானம் மூலம் இஸ்லாமாபாத் நகரை வந்தடைந்த  குலாலாய் இஸ்மாயிலை பாகிஸ்தான் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

      இந்த கைது நடவடிக்கைக்கு சர்வதேச பொது மன்னிப்பு சபையான ஆம்னெஸ்ட்டி இன்ட்டர்நேஷனல் கண்டனம் தெரிவித்துள்ளது. எவ்வித முன்நிபந்தனையும் இன்றி அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. #HumanRightsactivist #GulalaiIsmail #GulalaiIsmaildetained
      காலியாக உள்ள மத்திய அரசு துறைகளில் இந்துத்துவ சக்திகளின் மனப்போக்கை கொண்டவர்களை பணியில் அமர்த்தும் பிரதமர் மோடி அரசு திட்டத்திற்கு ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் கண்டனம் தெரிவித்துள்ளது.
      சென்னை:

      ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

      * மத்திய அரசு நிர்வாகத்தில் நிதி, வருவாய், பொருளாதாரம், வேளாண்மை, கூட்டுறவு, சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளின் இணை செயலாளர்கள் பதவிக்கு சமூக நீதியை சாகடித்து, சங்பரிவாரின் கொள்கை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இந்துத்துவ சக்திகளின் மனப்போக்கை கொண்டவர்களை, மத்திய அரசுப் பணிகளில் அமர்த்தவே மோடி அரசு முடிவு செய்திருக்கின்றது.

      அனைத்து முற்போக்கு எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளும், சமூக நீதியில் அக்கறைக் கொண்டோரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்க வேண்டும், கண்டனக்குரல் எழுப்ப வேண்டும்.

      * மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் தூத்துக்குடியில் இயக்கும் நிலை ஏற்பட்டால், மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் நடந்ததுதான் தூத்துக்குடியில் நடக்கும் என கழக உயர்நிலைக்குழு எச்சரிக்கின்றது.

      * தமிழக மக்களின் கல்வி உரிமையை பறித்து, சமூக நீதியையும் குழிதோண்டி புதைத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு மருத்துவக் கல்விக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வை அடாவடியாக திணிப்பதை ஏற்கவே முடியாது.

      * மத்திய அரசு நடைமுறைப்படுத்திய ஜி.எஸ்.டி. மற்றும் மூலப் பொருட்களின் விலையேற்றம் போன்ற நெருக்கடிகளால் மூடப்பட்டு வரும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கிட தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

      * காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு பாதுகாப்பு கிடைக்க உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்து, அரசியல் சட்ட அமர்வுக்கு பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த கடமையை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும் என ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #MDMK #Vaiko
      ×