ரூபாய் மதிப்பு வீழ்ச்சி-மதுரை எம்.பி. கண்டனம்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து மதுரை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்
Published on

மதுரை

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, பிரதமர் மன்மோகன் சிங்கின் வயதை (80) நோக்கி போகிறது" என்று பா.ஜ.க. கிண்டல் செய்தது.

நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது ரூபாய் மதிப்பு (58). அதாவது பிரதமர் மோடியின் வயதை விட (64) குறைவாகத்தான் இருந்தது. இன்றைக்கு, டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, பிரதமரின் அண்ணன் சோம்பாய் மோடியின் வயதை (80) தொடும் நிலையில் உள்ளது.

நீங்கள் இந்திய பொருளாதாரம் வளரும் என்று சொன்னது, டாலர் வளர்ச்சியைத்தானா?"என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com