search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் தொல்லை"

    • அனுமந்தை ஊராட்சியில் சங்கம் அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட குளிர்சாதன வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • பார்த்திபன் தனது வீட்டிற்கு தெரியாமல் எலிமருந்தை வாங்கி குடித்தார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே அனுமந்தை, கீழ் பேட்டை, ஆட்சிக்காடு,ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடற்கரை ஓரம் இறால் குஞ்சு பொரிப்பாக தொழிற்சாலைகள் உள்ளது இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடங்களுக்கு இறால் குஞ்சுகள் ஏற்றுமதி செய்ய அனுமந்தை ஊராட்சியில் சங்கம் அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட குளிர்சாதன வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தைப் போல் ஆலப்பாக்கம் ஊராட்சியிலும் தற்போது சங்கம் அமைத்து வேன்கள் இயக்கப்படுகிறது இதன் காரணமாக அனுமந்தையில் உள்ள சங்கத்திற்கும் ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சங்கத்திற்கும் கடந்த மாதம் பிரச்சனை ஏற்பட்டது .இது சம்பந்தமாக இரண்டு சங்கத்தினர் தரப்பிலும் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு சங்கங்களையும் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர் மேலும் இரு தரப்பை அழைத்து சமாதான கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் இரண்டு சங்கங்களுக்கும் மேற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஆலப்பாக்கம்ஊராட்சியில் உள்ள குளிர்சாதன வேன்கள் கடந்த 4 மாதமாக இயக்கப்படவில்லை. இதனால் ஆட்சிக்காடு பகுதியில் உள்ள வேன் உரிமையாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.

    இந்நிலையில் ஆட்சிக்காடு கிராமம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் வயது( 48 )இவரும் இறால் குஞ்சுகளை ஏற்றி செல்லும் குளிர்சாதன வேன் வைத்துள்ளார். இந்த வேனை வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக4 மாதத்திற்கு மேலாக பார்த்திபன் தனது வேனுக்கு கடன் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தார்.

    இதன் காரணமாக பார்த்திபன் தனது வீட்டிற்கு தெரியாமல் எலிமருந்தை வாங்கி குடித்துவிட்டு வீட்டின் அருகில் மயங்கி கிடந்து உள்ளார். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு டாக்டர்கள் பார்த்திபனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் .

    கடன் தொல்லையால் வேன் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் சமாதான கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது .ஆனால் இரு சங்கங்களும் முட்டுக்கட்டை போட்டு பேச்சுவார்த்தைடிய ஒத்துக்கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் இரு சங்கங்களையும் அழைத்து பேசி சமரசம் செய்யப்படும் என மரக்காணம் தாசில்தார். கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

    • . இவர் குடும்ப செலவுகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார்.
    • ட்டில் தனிமையில் இருந்த தமிழ்செல்வன் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே பரவலூர் கல்லரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது26). இவர் குடும்ப செலவுகளுக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கி இருந்தார்.

    கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத நிலையில் தமிழ்செல்வன் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.நேற்று வீட்டில் தனிமையில் இருந்த தமிழ்செல்வன் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த தமிழ்ச்செல்வனுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கியில் தவணை செலுத்த முடியாததால் குமரேசன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே குன்னத்தூர் பகுதி சாத்திர விளை என்ற இடத்தை சேர்ந்தவர் குமரேசன் (51).இவருக்கு ஜெயக்குமாரி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். தொழிலாளியான குமரசேனுக்கு மதுப் பழக்கம் இருந்தது.

    இந்த நிலையில் அவர், வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து கடன் வாங்கி, கடன் சுமையால் அவதிப்பட்டுள்ளார். வங்கியில் தவணை செலுத்த முடியாததால் குமரேசன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

    நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற குமரேசன் அதே பகுதி பொற்றை என்ற இடத்தில் விஷம் குடித்து பிணமாக கிடந்தார். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமரே சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மரக்காணம் அருகே கடனை திரும்ப கேட்டு மிரட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • ரூ. 5 லட்சம் கடன் வாங்கி தன் கணவர் விட்டுச் சென்ற கடன்களை அடைத்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது அனுமந்தை மீனவர் கிராமம். இப்பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) . இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் அதே பகுதியில் தீபாவளி சீட்டும் நடத்தி வந்துள்ளார். இதனால் ராஜேந்திரனுக்கு அதிக அளவில் கடன் ஏற்பட்டுள்ளது . எனவே அவர் 2 ஆண்டுக்கு முன் வீட்டை விட்டு வெளியில் சென்று உள்ளார். அதிலிருந்து அவர் வீடு திரும்பவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விபரமும் உறவினர்கள் கூட இதுவரையில் தெரியவில்லை. இந்நிலையில் ராஜேந்திரனின் மனைவி மணிமேகலை அதே பகுதியை சேர்ந்த சீனிவாசனிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி தன் கணவர் விட்டுச் சென்ற கடன்களை அடைத்துள்ளார். கடந்த 8-ந் தேதி சீனிவாச னின் மனைவி மணி மேகலையின் வீட்டிற்குச் சென்று நீங்கள் எங்களிடம் கடன் வாங்கியது 5 லட்சம் அதற்கு வட்டி இப்பொழுது 5 லட்சம் ஆகிவிட்டது.

    எனவே வட்டியும் அசலுமாக சேர்த்து எங்களுக்கு ரூ. 10 லட்சம் இப்பொழுது நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது மணிமே கலைக்கும் மதிக்கும் வாய் தகராறு ஏற்ப ட்டுள்ளது. இதனால் மதி மணிமேகலையை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தி உள்ளார். இதனால் மணமுடைந்த மணிமேகலை எலி மருந்தை சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் புதுவை ஜிப்பர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மணிமேகலை சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ராதாகிருஷ்ணன் வேலை விஷயமாக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
    • ராதாகிருஷ்ணனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அருகே உள்ள திருத்தாலா பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது46). இவரது மனைவி சாந்தினி(43). இவர்களுக்கு கார்த்திக்(14), ராகுல்(8) என 2 மகன்கள் உள்ளனர்.

    ராதாகிருஷ்ணன் மர வியாபாரம் செய்து வந்தார். இதுதவிர வேறு பணிகளையும் எடுத்து செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்குள் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்றனர். வீட்டின் கதவை திறக்க முயன்றபோது அது திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது, வீட்டிற்குள் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சாந்தினி, மகன்கள் என 4 பேரும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தாலா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து திருத்தாலா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், ராதாகிருஷ்ணன் வேலை விஷயமாக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் கடந்த 2 மாதமாக அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் ராதாகிருஷ்ணன் மனவேதனையில் இருந்ததும், அதன் காரணமாகவே மண்எண்ணையை ஊற்றி குடும்பத்துடன் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து திருத்தாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சத்தியேந்திர குமார் தனது மகள்களுடன் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
    • கடன் தொல்லையால் சத்தியேந்திர குமார் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திர வரம் அடுத்த ஈ.எல் புரத்தை சேர்ந்தவர் சத்தியேந்திர குமார் (வயது 40). இவரது மனைவி சுவாதி (35). இவர்களுக்கு ரிஷிதா (12), சித்விகா (7) என 2 மகள்கள் இருந்தனர்.

    சத்தியேந்திர குமார் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் அக்கவுண்டராக வேலை செய்து வந்தார். சத்தியேந்திரகுமாருக்கு நிறைய கடன் தொல்லை இருந்துள்ளது.

    இதனால் அவர் வாங்கும் சம்பளம் முழுவதும் வட்டிகட்டி வந்துள்ளார். குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுவாதி மட்டும் சென்று இருந்தார். சத்தியேந்திர குமார் தனது மகள்களுடன் வீட்டில் இருந்தார். நிகழ்ச்சி முடிந்து நேற்று காலை சுவாதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது.

    தனது கணவரின் செல்போனை தொடர்பு கொண்டார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த சுவாதி இது குறித்து ராஜ மகேந்திரவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சத்தியேந்திர குமார் தனது மகள்களுடன் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

    அங்குள்ள ஏரிக்கரையின் மேல் சத்தியேந்திர குமார் மற்றும் ரிஷிதா, சித்விகா ஆகியோர் காலணிகள் இருந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் ஏரியில் இறங்கி தேடினர். அப்போது தந்தை, 2 மகள்கள் உடல்கள் பிணமாக மீட்கப்பட்டன. கடன் தொல்லையால் சத்தியேந்திர குமார் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சில மாதங்களுக்கு முன், கன்ஸ்ட்ரக்ஷன் வேலை செய்ய தொடங்கினார்.
    • இவரால் வேலையை குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியாமல் கடன்சுமைக்கு தள்ளப்பட்டதார்.

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் பட்டி னச்சேரி சுனாமி குடியி ருப்பை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது30). எலெக்ட்டிரிக்கல் வேலை செய்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், கன்ஸ்ட்ரக்ஷன் வேலை செய்ய தொடங்கினார். தொடர்ந்து, நாகை மாவட்டம் அக்கரைபேட்டை கிராமத்தில், புதிய கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை தொடங்கினார். வீட்டுக்கா ரரிடம் பணம் வாங்கி வேலையை தொடங்கிய இவரால் வேலையை குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியாமல் கடன்சுமைக்கு தள்ளப்பட்டதார்.

    எனவே கடந்த ஜூலை மாதம் வீட்டைவிட்டு சென்றவர், இதுநாள் வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. சமயத்தில் இது போன்ற வீட்டில் சொல்லாமல் செல்லும் சிவக்குமார் சில நாட்களில் வீடு திரும்புவது வழக்கமாம். அதுபோன்று சென்றி ருப்பார் என மனைவி விக்னேஸ்வரி இருந்து விட்டார். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் வீடு திரும்பாத தால், கலக்கம் அடைந்த விக்னேஸ்வரி, சொந்த காரர்கள் வீடுகளில் பல நாட்கள் தேடியும், விசாரித்தும் சரியான பதில் இல்லாததால், திரு.பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன சிவக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • கல்பாக்கத்தில் நகைக்கடையில் வேலை போனதாலும், கடனை அடைக்க முடியாத காரணத்தாலும் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை கொண்டார்.
    • கடிதத்தை கைப்பற்றி கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் புதுப்பட்டினம் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது.25) நகைக்கடை ஊழியரான இவர், கடன் தொல்லை காரணமாக கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு நேற்று இரவு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கடிதத்தில் எழுதி இருப்பதாவது:- நகைக்கடையில் வேலை போனதால் என்னால் வீட்டு கடன், தனிநபர் கடன், பைக் கடன் என தகுதிக்கு மீறி வாங்கிய கடன்களை மாதம்தோறும் அடைக்க முடியவில்லை. வீட்டின் அருகில் நடந்த நகைத்திருட்டு சம்பவத்திலும் என்னை சேர்த்து பேசுகிறார்கள். அதனால் வாழ பிடிக்கவில்லை. அக்கா நீ அம்மாவை பார்த்துக்கொள் என எழுதி இருந்தது.

    இக்கடிதத்தை கைப்பற்றி கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லோகநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார்.
    • கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லோகநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம் பாளையம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (56). இவர் அங்குள்ள ஒரு தனியா ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பத்மாவதி (38). இவர்களுக்கு ஹரிபுவனேஷ்(12) என்ற மகன் உள்ளார். இவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் லோகநாதனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லோகநாதன் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டில் வறுமை வாட்டியது.

    இதன் காரணமாக லோகநாதன் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் லோகநாதன் திணறி வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் லோகநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று லோகநாதன் கோபியில் உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றார். அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் லோகநாதனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.

    கணவனின் உடலை பார்த்து பத்மாவதியும், அவரது மகனும் கதறி அழுதனர். இதனையடுத்து இன்று காலை பத்மாவதி தற்கொலை செய்ய முடிவு எடுத்து விஷத்தை குடித்துள்ளார். பின்னர் தனது மகனுக்கும் விஷத்தை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் பத்மாவதியும் அவரது மகனும் மயங்கி விழுந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர்களை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இருவரும் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைனான்சியர் மேலும் பணத்தைக் கேட்டு வர்மாவுக்கு போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • பைனான்சியர் வர்மாவின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை மிரட்டி விட்டு சென்றார். இதனால் வர்மா மனமுடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் வர்மா (வயது 40) வியாபாரி. இவர் குண்டூரை சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்தார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் பைனான்சியர் மேலும் பணத்தைக் கேட்டு வர்மாவுக்கு போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த வர்மா அவரது போனை எடுக்காமல் தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் பைனான்சியர் வர்மாவின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை மிரட்டி விட்டு சென்றார். இதனால் வர்மா மனமுடைந்தார்.

    நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்க சென்ற வர்மா அதிகாலை நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஜன்னலை திறந்து பார்த்தபோது மின்விசிறியில் வர்மா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து வர்மாவின் பிணத்தை மீட்டனர்.

    இது குறித்து குண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அறையை போலீசார் சோதனை செய்தபோது ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வர்மா எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    அதில் தான் வியாபாரத்திற்கு வாங்கிய கடனை முழுவதுமாக செலுத்தி விட்டேன்.

    இருப்பினும் பைனான்சியர் மேலும் பணத்தை கேட்டு மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதி இருந்தார்.

    இதுகுறித்து குண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பைனான்சியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடனை அடைக்க முடியாமல் அவதி
    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் கல்லடிவிளை சிவந்தமண் என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரபா (வயது 42). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது மற்றொரு மகள் வெளியூரில் படித்து வருகிறார். இவருடைய தாத்தா சந்திரன் (76) பிரபாவின் வீட்டு திண்ணையில் உறங்குவது வழக்கம்.

    பிரபா பலரிடம் கடன் பெற்றுள்ளதாகவும் அத னால் கடனை அடைக்க முடியாமல் அவதிப் பட்டு இருந்ததாகவும் கூறப்படு கிறது. சம்பவத்தன்று இரவு வீட்டில் சத்தம் கேட்டதால் திண்ணையில் தூங்கி கொண்டிருந்த சந்திரன் கதவை திறந்து பார்த்தபோது பிரபா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடி யாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.

    இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப் பட்டது. மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முகமது பரீத்துக்கு கடன் கொடுத்து மிரட்டிய நபர்கள் யார் என்பது குறித்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    • கடன் பிரச்சினையால் பள்ளி ஆசிரியர், தனது 17 வயது மகளை கொன்று தற்கொலை செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமம் கிழக்கு, அமராவதி நகரை சேர்ந்தவர் முகமதுபரீத் (வயது 46). இவர் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நஸ்ரின் பானு (39). இந்த தம்பதியின் ஒரே மகள் ஜூகினாஜ் (17). கரூர் வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.

    இதற்கிடையே முகமது பரீத் கரூர் போக்குவரத்து நகரில் புதிதாக வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். அதில் அவருக்கு அதிக கடன் ஏற்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் இப்படி கடன் வாங்கி புதிய வீடு வாங்காமல் தவிர்த்து இருக்கலாமே என்று மனைவி அடிக்கடி கூறி வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    மேலும் கடன் கொடுத்தவர்களும் முகமது பரீத்துக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். தினமும் வீட்டிற்கு வந்து கடன் தொகையை கேட்பதும், மிரட்டுவதுமாக இருந்துள்ளனர்.

    இதனால் அப்பகுதியினர் மத்தியில் தான் அவமானம் அடைந்ததாக முகமது பரீத் எண்ணினார். மேலும் மனைவி, மகளுடன் வெளியில் செல்வதையும் தவிர்த்து வந்தார். எனவே இனிமேல் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது என்று நினைத்த அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

    இதையடுத்து நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் மருந்துக்கடையில் விஷ மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வந்தார். இரவில் மனைவி, மகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட முகமது பரீத் இருவருக்கும் தண்ணீரில் விஷ மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார்.

    அதனை அறியாத அவர்களும் வாங்கி குடித்துள்ளனர். தொடர்ந்து முகமது பரீத்தும் விஷம் கலந்த தண்ணீரை குடித்தார். பின்னர் அவர்கள் அனைவரும் தூங்க சென்றனர். அப்போது வரை தண்ணீரில் விஷம் கலந்தது குறித்து முகமது பரீத் மனைவி, மகளிடம் எதுவும் கூறவில்லை.

    நள்ளிரவில் 3 பேரும் வாந்தி எடுத்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கினர். அப்போது சற்றே நிதானத்தில் இருந்த முகமது பரீத், தனது செல்போனை எடுத்து அதே பகுதியில் வசித்து வரும் தனது அண்ணன் சாதிக் பாட்ஷாவை உதவிக்கு அழைத்துள்ளார்.

    அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சாதிக் பாட்ஷா தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு நள்ளிரவில் முகமது பரீத் வீட்டுக்கு வந்தார். பின்னர் மயங்கி கிடந்த 3 பேரையும் மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கரூர் வடிவேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

    மேல் சிகிச்சைக்காக மகள் ஜூகினாஜ் மட்டும் கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஜூகினாஜ் பரிதாபமாக இறந்தார்.

    அதேபோல் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது பரீத் மற்றும் அவரது மனைவி இருவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். வழியிலேயே முகமது பரீத்தும் இறந்தார். அவரது மனவைி நஸ்ரின் பானு உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முகமது பரீத்துக்கு கடன் கொடுத்து மிரட்டிய நபர்கள் யார் என்பது குறித்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கடன் பிரச்சினையால் பள்ளி ஆசிரியர், தனது 17 வயது மகளை கொன்று தற்கொலை செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×