புதுக்கடை அருகே கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

வங்கியில் தவணை செலுத்த முடியாததால் குமரேசன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

புதுக்கடை அருகே குன்னத்தூர் பகுதி சாத்திர விளை என்ற இடத்தை சேர்ந்தவர் குமரேசன் (51).இவருக்கு ஜெயக்குமாரி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். தொழிலாளியான குமரசேனுக்கு மதுப் பழக்கம் இருந்தது.

இந்த நிலையில் அவர், வீடு கட்டுவதற்காக வங்கியில் இருந்து கடன் வாங்கி, கடன் சுமையால் அவதிப்பட்டுள்ளார். வங்கியில் தவணை செலுத்த முடியாததால் குமரேசன் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற குமரேசன் அதே பகுதி பொற்றை என்ற இடத்தில் விஷம் குடித்து பிணமாக கிடந்தார். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமரே சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com