search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide attempts"

    • அனுமந்தை ஊராட்சியில் சங்கம் அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட குளிர்சாதன வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • பார்த்திபன் தனது வீட்டிற்கு தெரியாமல் எலிமருந்தை வாங்கி குடித்தார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே அனுமந்தை, கீழ் பேட்டை, ஆட்சிக்காடு,ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடற்கரை ஓரம் இறால் குஞ்சு பொரிப்பாக தொழிற்சாலைகள் உள்ளது இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடங்களுக்கு இறால் குஞ்சுகள் ஏற்றுமதி செய்ய அனுமந்தை ஊராட்சியில் சங்கம் அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட குளிர்சாதன வேன்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தைப் போல் ஆலப்பாக்கம் ஊராட்சியிலும் தற்போது சங்கம் அமைத்து வேன்கள் இயக்கப்படுகிறது இதன் காரணமாக அனுமந்தையில் உள்ள சங்கத்திற்கும் ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சங்கத்திற்கும் கடந்த மாதம் பிரச்சனை ஏற்பட்டது .இது சம்பந்தமாக இரண்டு சங்கத்தினர் தரப்பிலும் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு சங்கங்களையும் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர் மேலும் இரு தரப்பை அழைத்து சமாதான கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் இரண்டு சங்கங்களுக்கும் மேற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஆலப்பாக்கம்ஊராட்சியில் உள்ள குளிர்சாதன வேன்கள் கடந்த 4 மாதமாக இயக்கப்படவில்லை. இதனால் ஆட்சிக்காடு பகுதியில் உள்ள வேன் உரிமையாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.

    இந்நிலையில் ஆட்சிக்காடு கிராமம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் வயது( 48 )இவரும் இறால் குஞ்சுகளை ஏற்றி செல்லும் குளிர்சாதன வேன் வைத்துள்ளார். இந்த வேனை வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக4 மாதத்திற்கு மேலாக பார்த்திபன் தனது வேனுக்கு கடன் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தார்.

    இதன் காரணமாக பார்த்திபன் தனது வீட்டிற்கு தெரியாமல் எலிமருந்தை வாங்கி குடித்துவிட்டு வீட்டின் அருகில் மயங்கி கிடந்து உள்ளார். இதனைப் பார்த்த அவரது உறவினர்கள் மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு டாக்டர்கள் பார்த்திபனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர் .

    கடன் தொல்லையால் வேன் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் சமாதான கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது .ஆனால் இரு சங்கங்களும் முட்டுக்கட்டை போட்டு பேச்சுவார்த்தைடிய ஒத்துக்கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் இரு சங்கங்களையும் அழைத்து பேசி சமரசம் செய்யப்படும் என மரக்காணம் தாசில்தார். கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

    ×