search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம் எஸ் டோனி"

    • இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள ஹம்பன்டோட்டாவில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.

    அதன்படி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாசும், இப்ராகிம் ஜட்ரனும் வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி தந்தனர். 39 ஓவர்கள் வரை இந்த கூட்டணியை அசைக்க முடியவில்லை. அபாரமாக ஆடிய குர்பாஸ் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

    இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் (39.5 ஓவர்) திரட்டி பிரிந்தனர். இப்ராகிம் ஜட்ரன் 80 ரன்னில் கேட்ச் ஆனார். ரமனுல்லா குர்பாஸ் 151 ரன்கள் (151 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசியதோடு, பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர் டோனி 148 ரன் (2005-ம் ஆண்டு) எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    • இந்திய அணி 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றுள்ளது.
    • டோனியையும் யுவராஜ் சிங்கையும் நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதன் பிறகு அவர்களைப் போன்ற ஒரு வீரர் கிடைக்கவில்லை.

    இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மூலம் ரிங்கு சிங் மற்றும் பிரதிஷ் கிருஷ்ணா ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமானார்கள்.

    ஐபிஎல் தொடர் மூலம் ரிங்கு சிங் இந்திய அணிக்கு தேர்வு ஆகியுள்ளார். அவர் கொல்கத்தா அணிக்காக பினிஷிங் ரோல் செய்தார். ஒரு போட்டியில் ஒரே ஓவரில் 5 பந்துகளை சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இதன் மூலம் தான் இவர் பிரபலமாக காணப்பட்டார்.

    இந்நிலையில் டோனி மற்றும் யுவராஜ் இடத்தை ரிங்கு சிங் பூர்த்தி செய்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன். அவர் 5 அல்லது 6-வது இடத்தில் சிறப்பாக செயல்படுவார். ஒரு சிறந்த ஃபினிஷராகவும் அவரால் இருக்க முடியும். டோனியையும் யுவராஜ் சிங்கையும் நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதன் பிறகு அவர்களைப் போன்ற ஒரு வீரர் கிடைக்கவில்லை.

    நாங்கள் அத்தகைய வீரர்களை உருவாக்க முயற்சித்தோம். ஆனால் அது இதுவரை வேலை செய்யவில்லை. ரிங்கு ஒரு சிறந்த பீல்டரும் கூட. உள்நாட்டு கிரிக்கெட்டிலும் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் நிறைய மேம்பட்டு இருக்கிறார் என்று நான் உணர்கிறேன்.

    ஹர்திக் பாண்டியா ஒரு பேட்டராக மாறி, 3 அல்லது 4-வது வரிசையில் விளையாடுவதால், ஆட்டத்தை முடித்துக்கொடுக்கக்கூடிய ஒருவர் உங்களுக்குத் தேவை. உங்களிடம் அக்சர் படேல் போன்ற ஒருவர் இருக்கிறார், ஆனால் ரிங்கு சிங்தான் அந்த இடத்துக்கு பொறுத்தமானவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த கார் 1980-ம் ஆண்டு வெளிவந்த மாடல் ஆகும்.
    • ஆனால் அதனை டோனி 2021-இல் தான் வாங்கினார்.

    மகேந்திர சிங் டோனி ராஞ்சியில் அவரது வீட்டில் உள்ள பெரிய கேரேஜில் பல ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் விண்டேஜ் பைக்குகள் உயர் ரக கார்கள் மற்றும் பல பழங்கால விண்டேஜ் கார்களும் உள்ளன. அதில் அவரது பிரியமான கார்களில் ஒன்று பழைய ரோல்ஸ் ராய்ஸ் சிவர் ரெய்த் 2 ஆகும்.

    அதை அவர் சமீபத்தில் அவரது சொந்த ஊரான ராஞ்சியின் சாலையில் ஓட்டியதை கண்ட ரசிகர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த கார் 1980-ம் ஆண்டு வெளிவந்த மாடல் ஆகும். ஆனால் அதனை டோனி 2021-இல் தான் வாங்கினார்.

    சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சுனில் ஜோஷி ஆகியோர் டோனியின் பண்ணை வீட்டில் உள்ள கார்களின் பிரமாண்ட தொகுப்பை வீடியோவாக பகிர்ந்து கொண்டனர். அதில் டோனியின் அனைத்து பைக்குகள் மற்றும் கார்களும் இடம்பெற்றுள்ளன.

    • ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் ஃபீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும்.
    • அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும்.

    இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி. கடினமான நாட்களிலும் அவரது அமைதியான ஆளுமையின் காரணமாக 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்படுகிறார்.

    இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர், அந்த புனைப்பெயருக்கு மற்றொரு போட்டியாளர் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

    1983 உலகக் கோப்பையில் கபில் தேவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை நினைவுகூர்ந்த கவாஸ்கர், கபில் தான் அசல் "கேப்டன் கூல்" என்று கூறினார்.

    1983-ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் கிளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அந்த குறைந்த ரன்களை எளிதாக அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் அதிரடியாக 33 (28) ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை கபில் தேவ் நீண்ட தூரம் ஓடிச் சென்று பிடித்தது தான் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதை பயன்படுத்திய இந்தியா மிகச் சிறப்பாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸை வெறும் 140 ரன்களுடன் சுருட்டி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது மொத்த இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

    உலக கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் தான் இந்தியாவின் ஒரிஜினல் கேப்டன் கூல் என்று அவரது தலைமையில் விளையாடிய சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.


    இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசியது பின்வருமாறு:-

    அந்த தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய துறைகளில் கபில் அபாரமாக செயல்பட்டார் என்று சொல்லியே தீர வேண்டும். குறிப்பாக ஃபைனலில் அவர் பிடித்த விவ் ரிச்சர்ட்ஸ் கேட்ச் யாராலும் மறக்க முடியாது. அவர் எந்த வகையான சூழலிலும் அசத்தும் அளவுக்கு கேப்டன்ஷிப் செய்யும் பன்முகத்தன்மை கொண்டவர்.

    மேலும் ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் ஃபீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும். அதுவே அவருடைய ஒரிஜினல் கூல் கேப்டனாக காட்டுகிறது. அந்த வகையில் அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும்.

    இருப்பினும் அந்த சமயத்தில் இருந்த மகிழ்ச்சி ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம். ஏனெனில் அனைத்து இந்திய வீரர்களின் முகத்திலும் புன்னகை இருந்த அந்த தருணத்தை இப்போது திரும்பிப் பார்த்தாலும் நெஞ்சை தொடுவதாக அமையும்.

    என்று அவர் கூறினார்.

    • டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 2 கிலோ பிரியாணியை கொண்டு டோனியின் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஐ.பி.எல். கோப்பையையும் வரைந்து அசத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அறிவழகி.

    ஓவியரான இவர் தேச தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின் போது அவர்களுடைய உருவத்தை தத்ரூபமாக கோலமாவுகளைக் கொண்டு வரைந்து அசத்தியுள்ளார். காந்தியடிகள், டாக்டர் அப்துல் கலாம், டெண்டுல்கர், டோனி ஆகியோரின் உருவங்களையும் ரங்கோலியிலும் வரைந்துள்ளார்.

    அந்த வகையில் இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டி இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. 

    பிரியாணியில் வரையப்பட்ட தோனி ஓவியம்.

    பிரியாணியில் வரையப்பட்ட தோனி ஓவியம்.

    இதில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் டோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அறிவழகி 2 கிலோ பிரியாணியை கொண்டு 2 அடியில் டோனியின் உருவத்தை தத்ரூபமாக உருவாக்கியுள்ளார்.

    இதில் ஐ.பி.எல். கோப்பையையும் வரைந்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • தோற்கும் அணி லக்னோ-மும்பை இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் (குவாலிபையர்-2) மோதும்.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    நேற்று முன்தினம் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    ஐ.பி.எல். போட்டியில் இன்னும் 4 ஆட்டங்களே இருக்கிறது. ஒருநாள் ஓய்வுக்கு பிறகு குவாலிபையர் சுற்று இன்று நடக்கிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும், தோற்கும் அணி லக்னோ-மும்பை இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் (குவாலிபையர்-2) மோதும்.

    இந்நிலையில் குரு சிஷ்யன் காம்போவிற்கு நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? என சிஎஸ்கே அணி டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

     

    அந்த புகைப்படத்தில் ஒரு காரில் டோனி மற்றும் பாண்ட்யா இருக்கிறார்கள். நம்பர் பிளேட்டில் 07vs33 என இருந்தது. 7 என்பது டோனியின் ஜெர்சி நம்பர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 33 ஹர்திக் பாண்ட்யா ஜெர்சி நம்பராகும். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    நான் எப்போதுமே டோனியின் ரசிகன் என ஹர்திக் பாண்ட்யா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 11 பேரை தேர்ந்தெடுக்க மிகவும் கடினமாக இருந்தது.
    • என்ன பொறுத்தவரைக்கும் பேட் கம்மின்ஸ் டாப் கிளாஸ் ஆபரேட்டர்.

    ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறாத நிலையில், இன்று விராட் கோலி சிராஜ் உள்ளிட்ட ஏழு பேர் இங்கிலாந்து புறப்பட்டு விட்டனர்.

    இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இணைத்து ஒரு லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார். அந்த அணியில் அஸ்வின், புஜாராவுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

    அந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜடேஜா, அலேக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், முகமது ஷமி.

    11 பேரை தேர்ந்தெடுக்க மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால், அஸ்வின் தலைசிறந்த உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர். அதேபோல் ஹசில்வுட், புஜாராவும் மிரட்டக் கூடியவர்கள். ஆகவே, அது எளிதானது அல்ல.

    என்ன பொறுத்தவரைக்கும் பேட் கம்மின்ஸ் டாப் கிளாஸ் ஆபரேட்டர். முகமது ஷமி வின்டேஜே் போன்றவர். அவர் மேலும் மேலும் சிறந்த ஆட்டத்தை பெற்று வருகிறார். நாம் ஐ.பி.எல். போட்டியில் அதை பார்த்திருப்போம். இதனால் அவருக்கு அணியில் இடம் என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

    • போட்டி முடிந்த பிறகும் மைதானத்தில் இருந்த எவரும் நகர்ந்து செல்லாமல் கூட்டம் முழுமையாக அங்கேயே இருந்தது.
    • ரசிகர்களின் இந்த செயல் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பும் சிஎஸ்கே அணிக்கு பிரகாசமாக இருக்கிறது.

    தற்போது 13 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கடைசி லீக் போட்டியை டெல்லி அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கும் செல்வார்கள். மேலும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து நேரடியாக குவாலிபயர்-1-ல் விளையாடும் வாய்ப்பையும் பெரும் அளவிற்கு வலுவாக இருக்கிறது.

    இந்த சீசனின் கடைசி ஹோம் போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. துரதிஷ்டவசமாக இதில் தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த பிறகு டோனி உட்பட அணியின் மற்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இணைந்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தவாறு மைதானத்தை சுற்றி வளம் சென்றனர்.

    அந்த இடத்தில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இருந்தார். அப்போது நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு, டோனிக்கு இது கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கெவின் பீட்டர்சன் கூறியதாவது:-

    டோனி உட்பட பலரும் சேப்பாக்கம் மைதானத்தில் வளம் வந்தபோது நான் அங்கே இருந்தேன். போட்டி முடிந்த பிறகும் மைதானத்தில் இருந்த எவரும் நகர்ந்து செல்லாமல் கூட்டம் முழுமையாக அங்கேயே இருந்தது. ரசிகர்களின் இந்த செயல் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இப்படிப்பட்ட ஆதரவு டோனிக்கு இருக்கும்பொழுது இந்த ஐபிஎல் தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என்று எனக்கு தோன்றவில்லை.

    இந்த வருடம் புதிதாக வந்திருக்கும் இம்பேக்ட் வீரர் விதிப்படி, டோனி அடுத்த வருடமும் ஆடலாம். பேட்டிங்கில் 7-வது 8-வது இடத்தில் இறங்குவதால், அதில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் 20 ஓவர்கள் முழுமையாக அவரால் கீப்பிங் செய்ய முடியும். களத்தில் நின்று கொண்டு முடிவுகளை எடுக்கலாம்.

    அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னரே காலில் இருக்கும் பிரச்சனையை சரி செய்து கொண்டு இந்த வருடம் போலவே கடைசி கட்டத்திலும் பேட்டிங் இறங்கலாம். ஆகையால் டோனி ஓய்வு பெறுவது சரியாக இருக்காது என நம்புகிறேன். நாட்டு மக்கள் இதைதான் எதிர்பார்க்கிறார்கள். வருவார் என நினைக்கிறேன்.

    என்று அவர் கூறினார்.

    • டோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என்று கடந்த 2-3 ஆண்டுகளாக நான் கேள்விப்பட்டு வருகிறேன்.
    • இன்னும் சில சீசன்களில் விளையாடும் அளவுக்கு அவர் தகுதியானவர்.

    2023 ஐபிஎல் போட்டிக்காக டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தாண்டுதான் டோனியின் கடைசி ஐபிஎல் என பலரும் கூறிவருகின்றனர். வாட்சன் உள்பட சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்கள் டோனியின் பயிற்சியை பார்த்துவிட்டு இவர் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என கூறினர்.

    இந்நிலையில் எம்எஸ் டோனி இன்னும் 2-3 சீசன் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என இந்திய அணியின் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    டோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என்று கடந்த 2-3 ஆண்டுகளாக நான் கேள்விப்பட்டு வருகிறேன். இன்னும் சில சீசன்களில் விளையாடும் அளவுக்கு அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். இதுதான் அவருக்கு கடைசி வருடம் என சொல்ல முடியாது.

    அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு இன்னும் சில சீசன்கள் விளையாட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    என்று ரோகித் சர்மா கூறினார்.

    • டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டி என்று கேள்விப்பட்டேன். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.
    • டோனியின் ஆட்டத்தை போலவே அவரது தலைமையும் சிறப்பாக உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்பவர் டோனி. அவர் 4 முறை (2010, 2011, 2018, 2021) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார்.

    மேலும் 5 முறை சி.எஸ்.கே. 2-வது இடத்தை பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் அதிக முறை 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த ஆண்டுக்கான 16-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 31-ந்தேதி தொடங்கு கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட் டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்சை எதிர்கொள்கிறது.

    41 வயதான டோனி இந்த ஐ.பி.எல். போட்டி யோடு ஓய்வு பெறுகிறார். அவர் ஏற்கனவே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

    இந்த நிலையில் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்கு போதுமான உடல் தகுதியுடன் டோனி இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரருமான வாட்சன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டி என்று கேள்விப்பட்டேன். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. டோனியால் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விளையாட முடியும். அவர் இன்னும் உடல் தகுதியுடன் இருக்கிறார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் மிகவும் நன்றாக இருக்கிறார்.

    டோனியின் ஆட்டத்தை போலவே அவரது தலைமையும் சிறப்பாக உள்ளது. உடற்தகுதி மற்றும் ஆட்டத்தை நன்றாக உள்வாங்கி கொள்வது அவரை நல்ல கேப்டனாக்கியது. மைதானத்தில் அவரது திறமை அபாரமானது. சி.எஸ்.கே வெற்றி பெற அவர் ஒரு முக்கிய காரணமாகும்.

    இவ்வாறு வாட்சன் கூறி உள்ளார்.

    • பயிற்சியில் இருந்த மற்ற வீரர்கள் கீப்பிங் செய்யும் போது டோனியின் ஸ்டைலைப் பின்பற்றுமாறு பராக்கைக் கேட்டுக் கொண்டனர்.
    • இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக், முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோனியை பயிற்சி ஆட்டத்தின்போது இமிடேட் செய்துள்ளார். அதை இந்திய கிரிக்கெட் உலகம் ரசித்துப் பாராட்டி வருகிறது. இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், "ரியான் பராக் எம்எஸ் டோனியை நேசிக்கிறார்!" என்று தலைப்பிட்டுள்ளது.

    21 வயதான பராக் கையுறைகளை அணிந்து ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்று பயிற்சியாளரிடம் இருந்து குறிப்புகளை எடுத்துக்கொள்கிறார். பயிற்சியில் இருந்த மற்ற வீரர்கள் கீப்பிங் செய்யும் போது டோனியின் ஸ்டைலைப் பின்பற்றுமாறு பராக்கைக் கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து டோனி செய்வது போல் பராக் தோள்களை அசைக்கிறார். இதனை அனைவரும் ரசிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • விராட் கோலி, கபில் தேவ், ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், ஹர்திக் பாண்ட்யா, யுவராஜ் சிங் ஆகியோரின் குழந்தை பருவ புகைப்படமும் உள்ளது.
    • பிரபலமான இந்திய வீரர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    பிரபலமான இந்திய வீரர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இதனை ஐதராபாத்தை சேர்ந்த சூர்யா தெஜா காண்டுகுரி என்ற புகைப்பட கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதில் விராட் கோலி, எம் எஸ் டோனி, கபில் தேவ், ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், ஹர்திக் பாண்ட்யா, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோரின் குழந்தை பருவ புகைப்படங்கள் உள்ளது.





















     


     


     


     


     


     


     


     

    ×