search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டோனி இல்லை.. இவர்தான் ஒரிஜினல் கேப்டன் கூல்- இந்திய வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்
    X

    டோனி இல்லை.. இவர்தான் ஒரிஜினல் கேப்டன் கூல்- இந்திய வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்

    • ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் ஃபீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும்.
    • அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும்.

    இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி. கடினமான நாட்களிலும் அவரது அமைதியான ஆளுமையின் காரணமாக 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்படுகிறார்.

    இந்நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர், அந்த புனைப்பெயருக்கு மற்றொரு போட்டியாளர் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

    1983 உலகக் கோப்பையில் கபில் தேவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தை நினைவுகூர்ந்த கவாஸ்கர், கபில் தான் அசல் "கேப்டன் கூல்" என்று கூறினார்.

    1983-ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் கிளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அந்த குறைந்த ரன்களை எளிதாக அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் அதிரடியாக 33 (28) ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை கபில் தேவ் நீண்ட தூரம் ஓடிச் சென்று பிடித்தது தான் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதை பயன்படுத்திய இந்தியா மிகச் சிறப்பாக பந்து வீசி வெஸ்ட் இண்டீஸை வெறும் 140 ரன்களுடன் சுருட்டி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது மொத்த இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

    உலக கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் தான் இந்தியாவின் ஒரிஜினல் கேப்டன் கூல் என்று அவரது தலைமையில் விளையாடிய சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.


    இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசியது பின்வருமாறு:-

    அந்த தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய துறைகளில் கபில் அபாரமாக செயல்பட்டார் என்று சொல்லியே தீர வேண்டும். குறிப்பாக ஃபைனலில் அவர் பிடித்த விவ் ரிச்சர்ட்ஸ் கேட்ச் யாராலும் மறக்க முடியாது. அவர் எந்த வகையான சூழலிலும் அசத்தும் அளவுக்கு கேப்டன்ஷிப் செய்யும் பன்முகத்தன்மை கொண்டவர்.

    மேலும் ஒரு வீரர் கேட்ச் தவற விட்டாலோ அல்லது மிஸ் ஃபீல்ட் செய்தாலோ அவருடைய முகத்தில் புன்னகை நிலைத்திருக்கும். அதுவே அவருடைய ஒரிஜினல் கூல் கேப்டனாக காட்டுகிறது. அந்த வகையில் அந்த உலக கோப்பையை நாங்கள் வென்றதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமாகும்.

    இருப்பினும் அந்த சமயத்தில் இருந்த மகிழ்ச்சி ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு போஸ் கொடுக்கும் அளவுக்கு இருந்தது என்று சொல்லலாம். ஏனெனில் அனைத்து இந்திய வீரர்களின் முகத்திலும் புன்னகை இருந்த அந்த தருணத்தை இப்போது திரும்பிப் பார்த்தாலும் நெஞ்சை தொடுவதாக அமையும்.

    என்று அவர் கூறினார்.

    Next Story
    ×