search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமம்"

    • 6-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
    • வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று 6-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் , கனிமவளத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் ஒன்றியம் ,கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் விதிகளை மீறி கல்குவாரி செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு முடிவடைந்த பின்னர் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமாரிடம் " கல்குவாரியில் ஆய்வு செய்துள்ளோம்.ஆகவே உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். எனினும் பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாத விஜயகுமார் "கோடங்கிபாளையம்பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தார். தற்போது தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சமீபத்தில் பல்லடம் எம்.எல்.ஏ.,எம்.எஸ்.எம்.ஆனந்தன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி விஜயகுமாரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயி விஜயகுமாரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாளை 5-ந்தேதி( திங்கட்கிழமை ) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் விவசாயிகள் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் பெண்கள் விடுதிகள் கண்டிப்பாக உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும்.
    • 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகளை சமூகநலத்துறையின் மூலம் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் 2014-ன் கீழ் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள் மற்றும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.

    பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் http://tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்து அதன் நகலினை இணைத்து உரிய ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர், மேலாளர் ஆகியோருக்கு சட்டப்பிரிவின் படி, 2 ஆண்டு காலம் வரை சிறைதண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

    மேலும் பதிவு உரிமம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்: 04562-252701-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் விடுதி மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பதிவிற்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகினை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும்.
    • இருசக்கர வாகனத்தில் செல்லும் மாணவர்கள் தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்து.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நெடுஞ்சாலை மருத்துவம் மற்றும் போக்கு வரத்து துறை இதர அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் 11 பேர் ஜூலை மாதம் உயிரிழந்துள்ளனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது இதை தடுக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர்ஆகியோர் உத்தரவின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் காவல்து றையினர் இணைந்து வாகன சோதனை செய்தனர்.

    சோதனையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி அபராதம் செலுத்திய பிறகு விடுவிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, நாகை நகர இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், வின்சென்ட் ராஜ், லோகநாதன், செல்வராஜ் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • சட்டம், 2014”, பிரிவு 4-ன்படி உரிமம் பெற வேண்டும் .
    • வழிமுறைகள் குறித்து விவரம் அறிய மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் மூலம் நடத்தப்படும் விடுதிகள் "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (நெறிமுறைப்படுத்தும்) சட்டம், 2014", பிரிவு 4-ன்படி உரிமம் பெற வேண்டும் .அவ்வாறு உரிமம் பெறாது நடத்தும் விடுதிகள் மேற்படி சட்டப்பிரிவு 20-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆதலால் அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகையான விடுதிகளும் உரிமம் பெற்று நடத்திட விடுதி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் வழிமுறைகள் குறித்து விவரம் அறிய மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , மாவட்ட ஆட்சியர் வளாகம், தளம்-6, அறை எண் : 627, பல்லடம் ரோடு , திருப்பூர். தொலைபேசி : 0421 - 2971198, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்)கைபேசி எண் : 6382614880.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • பட்டாசுக்கடை உரிமம் பெற இன்று முதல் அக்டோபா் 8 ந் தேதி வரையில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • உரிமக் கட்டணம் ரூ.1200-ஐ கருவூலகத்தில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, திருப்பூா் மாநகரில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இன்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாநகர காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி தற்காலிகமாக பட்டாசுக்கடை உரிமம் பெற இன்று முதல் அக்டோபா் 8 ந் தேதி வரையில் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    இதில் விண்ணப்பிக்க விண்ணப்பப் படிவம் ஏ 5ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமக் கட்டணம் ரூ.1200-ஐ கருவூலகத்தில் செலுத்தியதற்கான சலான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (சலான் மாநகர காவல் அலுவலகத்தில் கிடைக்கும்), பட்டாசுகளை இருப்புவைத்து விற்பனை செய்யப்படவுள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்களுடன், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிட்டிருப்பதுடன், மனுதாரா் தனது கையொப்பம் இட்டிருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்தக் கட்டடமாக இருந்தால் 2022 -23 ஆம் ஆண்டுக்கான சொத்துவரி ரசீது இணைக்கப்பட வேண்டும். வாடகை கட்டடமாக இருந்தால் சொத்து வரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டட உரிமையாளருடன் ரூ. 20க்கான முத்திரைதாளில் வாடகை ஒப்பந்த ஆவணத்தையும் இணைக்க வேண்டும்.

    மேலும் கடை அமையவுள்ள இடங்களைப் பாா்வையிட்டு விசாரணைக்கு பின் காவல் துறை, தீயணைப்புத் துறை ஆய்வில் திருப்தியடைந்தால் மட்டும் பட்டாசு உரிமம் வழங்கப்படும். அதேவேளையில் குறித்த காலக்கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தள்ளுபடி செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகபட்சமாக பஸ், வேன், கார், ஜீப் மற்றும் டிரக்கர் போன்ற வாகனங்களில் சுற்றுலா வருவது வழக்கம்.

    இங்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து வருகிறது. பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்க ளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமையை ஆண்டுதோறும் கன்னி யாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் தனியாருக்கு ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகைக்கு விட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது. அதற்கு பதிலாக கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்களது ஊழியர்களை வைத்து சுற்றுலா வாகன ங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலித்து வந்தது.

    இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாருக்கு ஏலம் விடுவதற்கான நிகழ்ச்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த ஏலம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் நடந்தது.

    இந்த ஏலம் மற்றும் டெண்டரில் மொத்தம் 6 பேர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை கன்னியாகுமரி மாதவபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ரூ.67 லட்சத்து 11 ஆயிரத்து 111க்கு ஏலம் எடுத்துள்ளார்.

    • வாழப்பாடி அருகே உரிமம் இல்லாமல் 5 நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    • விவசாயியின் தோட்டத்தில் போலீசார் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கூட்டாத்துப்பட்டி செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் (வயது 40). இவர், குறிச்சி பகுதியிலுள்ள இவரது தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம்,21-ந்தேதி முருகனின் தோட்டத்தில் போலீசார் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைத்திருந்த உரிமம் இல்லாத 5 நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். முருகன் தலைமறைவாக இருந்தார்.இதையடுத்து வாழப்பாடி போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இதை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு நேற்று விவசாயி முருகனை போலீசார் கைது செய்தனர். பின்பு முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சிறப்பு முகாம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் நடைபெற்றது.
    • மக்களுக்கு உணவு பாதுகாப்பாக வழங்க வேண்டும்

    மாரண்டஅள்ளி,

    தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்களும் 100 சதவீதம் உணவு பாதுகாப்பு உரிமை மற்றும் பதிவு சான்றிதழ் பெற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சான்றிதழ் பெற்றிட சிறப்பு முகாம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் நடைபெற்றது.

    இந்த முகாமில் மாரண்டஅள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள வணிகர்கள் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு உரிமம் பெற விண்ணப்பம் வழங்கினார்கள்.

    இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானு சுஜாதா பேசும் போது மக்களுக்கு வழங்க உணவு பாதுகாப்பாக வழங்க வேண்டும் சிக்கன் மற்றும் உணவு பொருள்களுக்கு கலர் பவுடர்கள் சேர்த்தல், மேலும் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக் கூடாது உணவு பாக்கெட்டுகளில் சரியான முத்திரை இருக்க வேண்டும்.

    உணவு பொருட்கள் விற்பனை செய்ய உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், செயல் அலுவலர் சித்திரை கனி, மற்றும் 50-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற்றனர்.

    • ஒற்றை சாளர தீர்வுமுறையில் குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உரிமங்கள் பெற இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
    • ஒற்றை சாளரதீர்வுமுறையில்இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர் லால் குமாவத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குறு,சிறுமற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள்,தொழில் முனைவோர் ஆகியோர் பல்வேறுதுறைகளில் உரிமங்கள் பெறுவதுதொடர்பாகஒற்றைசாளரதீர்வுமுறையில்இணையவழியாகவிண்ணப்பிக்கலாம்.

    குறு,சிறுமற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையானதீயணைப்புத் துறை, தொழிற்சாலை பாதுகாப்புத் துறை,மாசுக் கட்டுப்பாட்டுவாரியம்,நகர்புறஊரமைப்புத் துறைகளில் உரிமங்கள் பெறுவதற்கும்,மாசுக்கட்டுப்பாட்டுவாரியஒப்புதல்,மின்இணைப்புபெறுவதற்குஒற்றைச் சாளரதீர்வுமுறைசெயல்படுத்தப்பட்டுவருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட அளவில் ஒற்றைச் சாளரதீர்வு குழு கலெக்டரை தலைவராக கொண்டு பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கியஒருதீர்வுக் குழு செயல்பட்டுவருகிறது. இந்த குழு ஒற்றைச் சாளர தீர்வு முறையில்விண்ணப்பங்களைமாதந்தோறும் ஆய்வுமேற்கொண்டு உரிமங்களைபெற்று தரும்.

    மேற்கண்ட ஒற்றைச் சாளர முறையில் தொழில் தொடங்க அனைத்துதொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் உரிமங்கள் மற்றும் ஒப்புதல் பெற இணையதளமுகவரியான www.tnswp.com வழியாகமட்டுமேவிண்ணப்பிக்கவேண்டும்.

    தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் இந்த வழியை பயன்படுத்தி பலன் பெற வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமேலாளர், மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நேரிலோ அல்லது அல்லது தொலைபேசி எண்.04567-230497 மூலமாகவோ தொடர்புகொண்டுவிபரம் அறியலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×