என் மலர்
நீங்கள் தேடியது "Country gun"
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- வனத்துறை அதிகாரிகள் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம் அடுத்த ஏரி வட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அனுமதியில்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த, அண்ணாமலை (வயது 54) விவசாயி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அண்ணாமலை அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததும், நாட்டுத் துப்பாக்கியின் பயன்பாட்டிற்காக மருந்து பொருட்களை வைத்திருந்த தும் கண்டறி யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். பின்னர் வனத்துறையினர் அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
- வழக்குப்பதிவு செய்து மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே உள்ள பகுதிகளில் ஒருவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வத்திராயிருப்பு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயசண்முக நாதன் மற்றும் போலீசார் அந்தப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சரவணன் என்பவரது வீட்டில் நாட்டுக்குழல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்தது. போலீசாரின் விசாரணையில் சரவணன், கூமாபட்டியை சேர்ந்த தனது நண்பர் வனராஜூடன் சேர்ந்து பூப்பாறையை சேர்ந்த விஜேசிடம் துப்பாக்கியை வாங்கியதும், தோட்டாக்களை திண்டுக்கல்லை சேர்ந்த நிகில் என்பவரிடம் வாங்கியதும் தெரியவந்தது. நாட்டு துப்பாக்கியை தோட்டாக்களுடன் பறிமுதல் செய்த போலீசார் சரவணனை கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவானாசூர்கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எறையூரில் இருந்து அதையூர் செல்லும் சாலையில் காட்டு கோவில் அருகே போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சித்தார். அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் எறையூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் லியோ பிரகாஷ் (வயது 26) என்பதும் அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
- சோதனையில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம்அடுத்த வெள்ளக்குட்டை அருகே உள்ள நன்னேரி பகுதியில் வனவிலங்குகளை வேட்டை யாட நாட்டுத்துப்பாக்கியை சிலர் பதுக்கி வைத்திருந்தப்பதாக ஆலங்காயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நன்னேரி பகுதியை சேர்ந்த பழனி என்பவரது வீட்டில் சோதனை செய்த போது உரிய உரிமம் இல்லாமல் வீட்டில் நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிந்து.
உடனடியாக நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த ஆலங்காயம் போலீசார் பழனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உரிமம் இன்றி சரவணன் ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது.
- பல்லடம் மது ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் சரவணன் (வயது 48). இவர் தொட்டம்பட்டியில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கி வியாபாரம் செய்து வருகிறார். பல்லடம் மது ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தொட்டம்பட்டியில் உள்ள சரவணன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் உரிமம் இன்றி சரவணன் ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்லடம் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சி.மெய்யூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்தும் தப்பியோடிவிட்டனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள சி.மெய்யூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே 2 வாலிபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தனர். போலீசாரை கண்ட வாலிபர்கள், மோட்டார் சைக்கிளையும், நாட்டு துப்பாக்கியையும் அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டனர்.
அவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்தும் தப்பியோடிவிட்டனர். உடனடியாக வழக்கு பதிவு செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார், மோட்டார் சைக்கிளையும், நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அதனை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- வாழப்பாடி அருகே உரிமம் இல்லாமல் 5 நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
- விவசாயியின் தோட்டத்தில் போலீசார் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கூட்டாத்துப்பட்டி செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் (வயது 40). இவர், குறிச்சி பகுதியிலுள்ள இவரது தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம்,21-ந்தேதி முருகனின் தோட்டத்தில் போலீசார் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைத்திருந்த உரிமம் இல்லாத 5 நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். முருகன் தலைமறைவாக இருந்தார்.இதையடுத்து வாழப்பாடி போலீசார் அவரை தேடி வந்தனர்.
இதை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு நேற்று விவசாயி முருகனை போலீசார் கைது செய்தனர். பின்பு முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- விருத்தாசலம் அருகே பரபரப்பு: நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த பெண் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்
- முயலை குறி வைத்து சுடும் போது அந்த குண்டு சாந்தகுமாரியின் இடுப்பு பகுதியில் பாய்ந்தி ருப்பது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் காசிபிள்ளை. இவரது மனைவி சாந்த குமாரி (வயது 21).இவர்கள் வயல்வெளி யில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். நேற்று வெளியூர் சென்ற கணவன்- மனைவி இரு வரும் நள்ளிரவில் வீடு திரும்பினர்.அப்போது சாந்தகுமாரி, தனது வீட்டு வாசலில் அமர்ந்து காற்று வாங்கி கொண்டிருந்தார். அப்ேபாது திடீரென சாந்த குமாரி பலத்த சத்தத்துடன் கீழே சுருண்டு விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த காசிபிள்ளை வெளியே வந்தார். அப்போது தனது மனைவி ரத்த வெள்ளத்தில் வேதனையால் துடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந் தார்.உடனடியாக உற வினர்கள் உதவியுடன் சாந்தகுமாரியை விருத்தா சலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப்பட் டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.அப்போது சாந்தகுமாரி யின் இடுப்பு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடக் கூடிய நாட்டு துப்பாக்கி குண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனடியாக அவர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மங்கலம் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வலசை கிராமங்களில் இரவு நேரங்களில் பறவை மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டுத்துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் வருவதுண்டு. அவர்கள் முயலை குறி வைத்து சுடும் போது அந்த குண்டு சாந்தகுமாரியின் இடுப்பு பகுதியில் பாய்ந்தி ருப்பது தெரிய வந்தது.எனவே, துப்பாக்கியால் சுட்ட நபர் யார்? அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






