நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். வழக்குப்பதிவு செய்து மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
Published on

விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே உள்ள பகுதிகளில் ஒருவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வத்திராயிருப்பு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயசண்முக நாதன் மற்றும் போலீசார் அந்தப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சரவணன் என்பவரது வீட்டில் நாட்டுக்குழல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்தது. போலீசாரின் விசாரணையில் சரவணன், கூமாபட்டியை சேர்ந்த தனது நண்பர் வனராஜூடன் சேர்ந்து பூப்பாறையை சேர்ந்த விஜேசிடம் துப்பாக்கியை வாங்கியதும், தோட்டாக்களை திண்டுக்கல்லை சேர்ந்த நிகில் என்பவரிடம் வாங்கியதும் தெரியவந்தது. நாட்டு துப்பாக்கியை தோட்டாக்களுடன் பறிமுதல் செய்த போலீசார் சரவணனை கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com