நாட்டு துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

போலீசார் ரோந்து பணியில் சிக்கினார் வனத்துறை அதிகாரிகள் விசாரணை
நாட்டு துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது
Published on

வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம் அடுத்த ஏரி வட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அனுமதியில்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த, அண்ணாமலை (வயது 54) விவசாயி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அண்ணாமலை அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததும், நாட்டுத் துப்பாக்கியின் பயன்பாட்டிற்காக மருந்து பொருட்களை வைத்திருந்த தும் கண்டறி யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். பின்னர் வனத்துறையினர் அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com