என் மலர்
உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவானாசூர்கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எறையூரில் இருந்து அதையூர் செல்லும் சாலையில் காட்டு கோவில் அருகே போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சித்தார். அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் எறையூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் லியோ பிரகாஷ் (வயது 26) என்பதும் அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
Next Story






