பல்லடம் அருகே உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

உரிமம் இன்றி சரவணன் ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. பல்லடம் மது ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டு துப்பாக்கி வைத்திருந்த சரவணன்.
நாட்டு துப்பாக்கி வைத்திருந்த சரவணன்.
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் சரவணன் (வயது 48). இவர் தொட்டம்பட்டியில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கி வியாபாரம் செய்து வருகிறார். பல்லடம் மது ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தொட்டம்பட்டியில் உள்ள சரவணன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் உரிமம் இன்றி சரவணன் ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்லடம் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com