search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு துப்பாக்கி"

    • உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே ஒருவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்.பி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் ஏட்டு ராம்குமார் சேதுபதி மற்றும் போலீசார் போடி புதூர் ரெயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் கார்த்திக் (வயது 42) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    இதில் உரிமம் இன்றி நாட்டுத்துப்பாக்கியை கார்த்திக் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர் எதற்காக இதனை பதுக்கி வைத்திருந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனையில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் நெக்கினி மலை கிராமம் அருகே உள்ள ஏரிக்கொள்ளை கிராமத்தில் வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்தி ருப்பதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 40) என்பவரின் வீட்டில் சோதனை செய்த போது அங்கு உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கிகள் வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    பின்னர் 2 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிந்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.

    • உரிமம் இன்றி சரவணன் ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது.
    • பல்லடம் மது ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் சரவணன் (வயது 48). இவர் தொட்டம்பட்டியில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கி வியாபாரம் செய்து வருகிறார். பல்லடம் மது ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தொட்டம்பட்டியில் உள்ள சரவணன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் உரிமம் இன்றி சரவணன் ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்லடம் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புல்லூர் காப்புகாடு பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • வனவிலங்குகளை வேட்டை ஆடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திருந்ததாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை இடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகண்யா, தலைமை போலீஸ் ஏட்டு சத்தியராஜ் மற்றும் போலீசார் இடைக்கல் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட புல்லூர் காப்புகாடு பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக 5 பேர் நாட்டுதுப்பாக்கியுடன் வந்தனர். அவர்களை பார்த்த போலீசார் உடனே அவர்கள் 5 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில் அவர்கள் எறையூர் பகுதியை சேர்ந்த சூசை (வயது 45), தென்போஸ்கோ (23), அந்துவான் கிருஸ்துராஸ் (25), அந்துவான் சான்பீட்டர் (19), மற்றும் மே.மாலூர் பகுதியை சேர்ந்த ஜான் எடிசன் (22) ஆகியோர் என்பதும் இவர்கள் காப்பு காட்டு பகுதியில் வனவிலங்குகளை வேட்டை ஆடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திருந்ததாக தெரிகிறது. மேலும் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து நாட்டுதுப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

    • சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை போலீசார் கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நாயக்கன் பட்டி என்ற இடத்தில் ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் நாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிளை அங்கு போட்டு விட்டு தப்பி ஓடியது. போலீசார், இவற்றை பறிமுதல் செய்து, விசாரித்து வந்தனர்.

    விசாரணையில் வேடு காத்தாம்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 23), திருமலைகிரி பச்சா கவுண்டர் தெருவை சேர்ந்த மோகன் ராஜ் (19) ஆகியோர் இந்த துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடியதும், இவர்கள் அடிக்கடி வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார், இவர்களது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

    • காட்டு விலங்குகளான பன்றி முயல் மற்றும் புறா, கொக்கு ஆகியவற்றை வேட்டையாடி வருவது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    திருத்தணி:

    ஆர்.கே. பேட்டையில் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன், ராம்குமார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், சேகர், ரவி என்பது தெரியவந்தது. அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் அவர்களிடம் அனுமதி பெறாத நாட்டு துப்பாக்கி கையில் இருப்பது தெரியவந்தது.

    இவர்கள் காட்டு விலங்குகளான பன்றி முயல் மற்றும் புறா, கொக்கு ஆகியவற்றை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது. இதனை அடுத்து அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 5 பேரை ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வன அலுவலர்கள் கீழ் அரசம்பட்டு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • விட்டுச் சென்ற உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள், ஒரு கார், 2 செல்போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் வனச்சரகம், கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

    நேற்று இரவு ஒரு கும்பல் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் காரில் சென்று உள்ளதாக மாவட்ட வன அலுவலர் கலாநிதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    வன அலுவலர்கள் கீழ் அரசம்பட்டு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் இருந்த 3 மர்ம நபர்கள் வனத்துறையினரை கண்டதும் காரை விட்டு விட்டு தப்பி ஓடினர்.

    வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பிடிபட்ட நபர் திருவண்ணாமலை மாவட்டம் சாரணா குப்பத்தை சேர்ந்த கணேசன் மகன் சுதாகர் (வயது 22) என்பதும் , தப்பி ஓடியவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (29) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள், ஒரு கார், 2 செல்போன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    வனத்துறையினர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தப்பிய ஓடியவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
    • வழக்குப்பதிவு செய்து மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள பகுதிகளில் ஒருவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வத்திராயிருப்பு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயசண்முக நாதன் மற்றும் போலீசார் அந்தப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சரவணன் என்பவரது வீட்டில் நாட்டுக்குழல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்தது. போலீசாரின் விசாரணையில் சரவணன், கூமாபட்டியை சேர்ந்த தனது நண்பர் வனராஜூடன் சேர்ந்து பூப்பாறையை சேர்ந்த விஜேசிடம் துப்பாக்கியை வாங்கியதும், தோட்டாக்களை திண்டுக்கல்லை சேர்ந்த நிகில் என்பவரிடம் வாங்கியதும் தெரியவந்தது. நாட்டு துப்பாக்கியை தோட்டாக்களுடன் பறிமுதல் செய்த போலீசார் சரவணனை கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • கல்வராயன் மலை பகுதியில் அனுமதி பெறாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறி விழுந்ததில் வெடித்தது.
    • இதில் காயம் அடைந்த விவசாயிக்கு சிகிச்சையின்போது கால் அகற்றப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கல்வராயன் மலை பகுதியில் உள்ள செம்பருக்கை கிராமத்தில் அண்ணாமலை மகன் ராஜா (வயது 26) என்பவர் அனுமதி பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாட்டு துப்பாக்கி கையில் இருந்து கீழே தவறி விழுந்ததில், துப்பாக்கி வெடித்து காலில் காயம் ஏற்பட்டது.

    வெளியில் தெரிந்தால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில், வீட்டிலேயே ஒரு மாதம் இருந்ததால் முழங்கால் வரை அழுகியுள்ளது. இது குறித்து தகவலின்பேரில் கரிய கோவில் போலீசார், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கால் அழுகியதால் மேலும் தொற்று பரவி விடாமல் இருக்க விவசாயி ராஜாவின் இடது முழங்கால் வரை அகற்றி, அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • வனத்துறை அதிகாரிகள் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம் அடுத்த ஏரி வட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அனுமதியில்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில், வனச்சரக அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியை சேர்ந்த, அண்ணாமலை (வயது 54) விவசாயி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அண்ணாமலை அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததும், நாட்டுத் துப்பாக்கியின் பயன்பாட்டிற்காக மருந்து பொருட்களை வைத்திருந்த தும் கண்டறி யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். பின்னர் வனத்துறையினர் அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாழப்பாடி அருகே உரிமம் இல்லாமல் 5 நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    • விவசாயியின் தோட்டத்தில் போலீசார் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கூட்டாத்துப்பட்டி செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி முருகன் (வயது 40). இவர், குறிச்சி பகுதியிலுள்ள இவரது தோட்டத்தில் நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம்,21-ந்தேதி முருகனின் தோட்டத்தில் போலீசார் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைத்திருந்த உரிமம் இல்லாத 5 நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். முருகன் தலைமறைவாக இருந்தார்.இதையடுத்து வாழப்பாடி போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இதை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு நேற்று விவசாயி முருகனை போலீசார் கைது செய்தனர். பின்பு முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • பெலாப்பாடி கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த தும்பல் வனத்துறை அதிகாரிகள், நேற்று அருநூற்றுமலை பெலாப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, நாட்டுத் துப்பாக்கியுடன் வந்த ஒருவர், வன அதிகாரிகளை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தார்.

    அந்த நபரை மடக்கி பிடித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அவர், அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் விவசாயி பழனிசாமி (வயது31) என்பதும், அவர் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பழனிசாமியை தும்பல் வனத்துறையினர் காரிப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, பழனிச்சாமியை கைது செய்து, அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

    ×