துப்பாக்கி வெடித்ததில் காயம்- விவசாயி கால் அகற்றம்

கல்வராயன் மலை பகுதியில் அனுமதி பெறாமல் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறி விழுந்ததில் வெடித்தது.இதில் காயம் அடைந்த விவசாயிக்கு சிகிச்சையின்போது கால் அகற்றப்பட்டது.
துப்பாக்கி வெடித்ததில் காயம்- விவசாயி கால் அகற்றம்
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கல்வராயன் மலை பகுதியில் உள்ள செம்பருக்கை கிராமத்தில் அண்ணாமலை மகன் ராஜா (வயது 26) என்பவர் அனுமதி பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாட்டு துப்பாக்கி கையில் இருந்து கீழே தவறி விழுந்ததில், துப்பாக்கி வெடித்து காலில் காயம் ஏற்பட்டது.

வெளியில் தெரிந்தால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில், வீட்டிலேயே ஒரு மாதம் இருந்ததால் முழங்கால் வரை அழுகியுள்ளது. இது குறித்து தகவலின்பேரில் கரிய கோவில் போலீசார், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கால் அழுகியதால் மேலும் தொற்று பரவி விடாமல் இருக்க விவசாயி ராஜாவின் இடது முழங்கால் வரை அகற்றி, அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com