search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுழைவு கட்டணம்"

    • கடந்த ஆண்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்
    • மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான சுற்றுலா தலங்களில் மாத்தூர் தொட்டிப் பாலமும் ஒன்று.

    இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிகாலத்தில் இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டது.

    1240 அடி நீளம், 103 அடி உயரம் கொண்ட இந்த பாலம் கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    மாத்தூர் தொட்டிப்பா லத்தைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    தொட்டிப்பாலத்தின் முகப்பு பகுதி அருவிக்கரை ஊராட்சியில் உள்ளது. அருவிக்கரை ஊராட்சிக்கு வருமானம் தரும் ஒன்றாக மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளது. ஆண்டு தோறும் சுற்றுலாபயணிகள் தொட்டிப்பாலத்திற்கு வரும்போது கார்கள் மற்றும் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது ஏலம் விடப்படுகிறது.

    கடந்த ஆண்டுக்கான குத்தகை காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைவதால் 2023-ம் ஆண்டுக்கான ஏலம் அருவிக்கரை ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஏலத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் கார்பார்க்கிங் ரூ.23 லட்சத்து 65 ஆயிரத்து 900,-க்கும், நுழைவு கட்டணம், வீடியோ கேமரா கட்டணம் ரூ.17 லட்சத்து 85 ஆயிரத்திற்கும், என மொத்தம் ரூ.41 லட்சத்து 50 ஆயிரத்து 900-க்கும் ஏலம் போனது.

    கடந்த ஆண்டு இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது.கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக தொகைக்கு இந்த ஆண்டு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    மாத்தூர் தொட்டி பாலத்தின் மேல் சென்று தொட்டிப்பாலத்தை சுற்றிப்பார்த்து வர ரூ.5 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதுபோல மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5, ஆட்டோவுக்கு ரூ.15, கார்களுக்கு ரூ.40, மினி வேன், வேன்களுக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.75, வீடியோ கேமராவுக்கு ரூ.25, புகைப்பட கேமராவுக்கு ரூ5 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

    • சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையம் விவேகானந்தபுரம் சந்திப்பில் அமைந்து உள்ளது
    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஏலம் விடப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்கள் ஊழியர்களை வைத்து நுழைவுக் கட்டணம் வசூலித்து

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையம் விவேகானந்தபுரம் சந்திப்பில் அமைந்து உள்ளது. இந்த நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமையை பேரூராட்சி நிர்வாகம் தனியாருக்கு டெண்டர் மூலம் குத்தகை விட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஏலம் விடப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்கள் ஊழியர்களை வைத்து நுழைவுக் கட்டணம் வசூலித்து வந்தது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கட்டணம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு ஏலம் விட்டது. இதனை மாதவபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ஏலம் எடுத்தார்.

    இதையடுத்துநுழைவுக் கட்டண வசூல் மையத்தை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் திறந்து வைத்தார். மேலும், முதல் வாகன கட்டண வசூலையும் அவர் தொடங்கி வைத்தார்.இந்தநிகழ்ச்சியில்பேரூராட்சிவார்டு கவுன்சிலர்சி.எஸ்.சுபாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகபட்சமாக பஸ், வேன், கார், ஜீப் மற்றும் டிரக்கர் போன்ற வாகனங்களில் சுற்றுலா வருவது வழக்கம்.

    இங்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலித்து வருகிறது. பஸ் ஒன்றுக்கு தலா ரூ. 100 வீதமும் வேன் ஒன்றுக்கு தலா ரூ. 70 வீதமும் கார் ஒன்றுக்கு தலா ரூ. 50 வீதமும் இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்க ளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமையை ஆண்டுதோறும் கன்னி யாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் தனியாருக்கு ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகைக்கு விட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க உரிமம் ஏலம் விடப்படாமல் இருந்து வந்தது. அதற்கு பதிலாக கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்களது ஊழியர்களை வைத்து சுற்றுலா வாகன ங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலித்து வந்தது.

    இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் உத்தரவின் பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம் தனியாருக்கு ஏலம் விடுவதற்கான நிகழ்ச்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த ஏலம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலையில் நடந்தது.

    இந்த ஏலம் மற்றும் டெண்டரில் மொத்தம் 6 பேர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை கன்னியாகுமரி மாதவபுரத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் ரூ.67 லட்சத்து 11 ஆயிரத்து 111க்கு ஏலம் எடுத்துள்ளார்.

    ×