search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்சிபி"

    • மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள்
    • மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை

    நேற்று மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 170 இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்அவுட் ஆகி 24 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை மும்பை அணி இழந்துள்ளது.

    இந்நிலையில் மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியுள்ளார். அதில், "மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள். எதிர்கொள்வதற்கு நிறைய பந்துகள் இருந்தும் அவர்கள் அவுட்டானார்கள்.

    மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. பாண்டியா, டேவிட் 7, 8வது இடத்தில் பேட்டிங் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்கள் முன்கூட்டியே களமிறங்கினால் விரைவில் ஆட்டமிழக்கும் அளவுக்கு மோசமான வீரர்களா?

    குஜராத் கேப்டனாக ஹர்திக் பாண்டியா 4வது இடத்தில் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். ஆனால் மும்பை அணியில் என்ன நடந்தது? அதில் நான் குழப்பமடைந்துள்ளேன். மும்பை அணி நிர்வாகம் இந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு என்ன நடந்தது என்று கேள்வியெழுப்ப வேண்டும். அல்லது தங்களுடைய பேட்டிங் வரிசை ஏன் மாறியது என்பதை வீரர்கள் விளக்க வேண்டும். இங்கே கேப்டன், பயிற்சியாளர் ஆகியோர் மீதும் தவறு இருக்கிறது. எனவே உரிமையாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • 11 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • லக்னோ, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்று முறையே 3 மற்றும் 4-வது இடத்தில் உள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டின் லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டன. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?. லீக் சுற்றோடு வெளியேறுவது யார்? போன்ற முடிவுகள் ஏறக்குறைய தெரிந்து வருகிறது.

    நேற்று மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 170 இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்அவுட் ஆகி 24 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இன்னும் 3 போட்டிகளில் விளையாட வேண்டியது உள்ளது. மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மொத்தம் அறு வெற்றிகள் ஆகும்.

    ராஜஸ்தான் 10 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று முதல் இடம் வகிக்கிறது. கொல்கத்தா 10-ல் 7-ல் வெற்றி பெற்றுள்ளது.

    எல்எஸ்ஜி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தலா 6 வெற்றிகள் பெற்றுள்ளன. இந்த அணி இன்னும் 4 போட்டிகளில் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும். தற்போது ஏறக்குறைய பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

    ஆர்சிபி 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்தால் மும்பையை போன்று ஏறக்குறைய பிளுஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும்.

    • வீராட்-அனுஷ்கா RCB நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.
    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    பாலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலியும் காதலித்து வந்தனர்.

    இவர்கள் இருவருக்கும் 2017- ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. 2021 ஜனவரி மாதம் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா, விராட்கோலி விளையாடும் முக்கிய போட்டிகளில் எல்லாம் களத்திற்கு வந்து அவரை

    உற்சாகப்படுத்த என்றுமே தவறியதில்லை. சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் விராட்கோலி தனது 50-வது சதத்தை பூர்த்தி செய்தபோது அனுஷ்கா சர்மா, முத்தங்களை பறக்கவிட்டு உற்சாகத்தை கொடுத்தார். தற்போதும் கூட ஐபிஎல் தொடரில் RCB அணியில் விளையாடும் விராட் கோலியை அவ்வபோது சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

     இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா கடந்த மே- 1ந்தேதி அன்று தனது 36-வது பிறந்த நாளை வீராட் கோலியின் RCB நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் சிறப்பாக ஆடி 84 ரன்களை குவித்தார்.
    • ஸ்வப்னில் சிங், சிராஜ், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 28) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணிக்கு துவக்க வீரர்களான ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஜோடி சுமாரான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 5 மற்றும் 16 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் ஷாருக் கான் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ஷாருக் கான் 30 பந்துகளில் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்களுடனும், டேவிட் மில்லர் 19 பந்துகளில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பெங்களூரு சார்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி 379 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.
    • இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது.

    பெங்களூரு அணி இனி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று, மற்ற ஆட்டங்களின் முடிவு மற்றும் ரன்ரேட் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும். இன்றைய ஆட்டத்திலும் சறுக்கினால், கதை முடிந்து விடும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 379 ரன்கள்) ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.

    இந்நிலையில் ஆர்.சி.பி. ரசிகர்கள் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் விசுவாசம்தான் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆர்.சி.பி. ரசிகர்கள் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் விசுவாசம்தான். அளவுகடந்த ஆதரவு, அர்ப்பணிப்பு, அன்பிற்கு அவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர். எங்கள் ரசிகர்கள் குடும்பத்தின் அங்கமாக உள்ளனர்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 1 ரன்னில் தோல்வியடைந்தது.
    • தோல்வியடைந்ததை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐ.பி.எல். 2024 தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயால் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பெர்குசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆன்ட்ரெ ரசல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆர்சிபி அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி பிளே சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகி உள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர்.

    இந்நிலையில் ஆர்சிபி அணி 1 ரன்னில் தோல்வியடைந்ததை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கு அருகில் இருந்த காவலர் ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நேற்று போட்டியில் நடந்ததா அல்லது மற்ற ஐபிஎல் சீசனில் நடந்ததா என்பது குறித்து முழு விவரம் தெரியவில்லை.

    இதனை பார்க்க எங்களுக்கே கஷ்டமாக உள்ளது என சிஎஸ்கே அணி ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். மேலும் விராட் கோலிக்காகவாவது ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • வில் ஜாக்ஸ் மற்றும் பட்டிதர் ஜோடி அரைசதம் அடித்து அசத்தியது.
    • சிறப்பாக பந்துவீசிய ஆன்ட்ரெ ரசல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரரான பில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்களை குவித்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்.

    இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அங்ரிஷ் ரகுவான்ஷி 3 ரன்களிலும், வெங்கடேஷ் அய்யர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் பொறுப்பாக ஆடினார். ரிங்கு சிங் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    போட்டி முடிவில் கொல்கத்தா 6 அணி விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயால் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பெர்குசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ் ஜோடி சுமாரான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 18 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் மற்றும் பட்டிதர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இந்த ஜோடி அரைசதம் அடித்து அசத்திய நிலையில், ஜாக்ஸ் 55 ரன்களுக்கும், பட்டிதர் 52 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்களையும், லோம்ரோர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், பெங்களூரு அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

    அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இவருடன் விளையாடிய கர்ண் ஷர்மா கடைசி வரை போராடினார். இவர் 7 பந்துகளில் 20 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பெங்களூரு அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆன்ட்ரெ ரசல் மூன்று விக்கெட்டுகளையும், சுனில் நரைன், ஹர்ஷித் ரானா தலா இரண்டு விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • பில் சால்ட் அதிரடியாக ஆடி 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • யாஷ் தயால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரரான பில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்களை குவித்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்.

    இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அங்ரிஷ் ரகுவான்ஷி 3 ரன்களிலும், வெங்கடேஷ் அய்யர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் பொறுப்பாக ஆடினார். ரிங்கு சிங் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    போட்டி முடிவில் கொல்கத்தா 6 அணி விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயால் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பெர்குசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • கொல்கத்தா அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
    • வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி நான்கு போட்டிளில் வெற்றி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    பெங்களூரு அணி ஏழு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி மற்றும் ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அந்த வகையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    • நட்சத்திர வீரர்கள் அடங்கிய பெங்களூரு அணி இந்த முறையும் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது.
    • 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பெங்களூரு அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் அறிமுக தொடரில் இருந்து விளையாடி வரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. நட்சத்திர வீரர்கள் அடங்கிய பெங்களூரு அணி இந்த முறையும் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது. 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பெங்களூரு அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. அந்த அணி நேற்று முன்தினம் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 287 ரன்களை வாரி வழங்கி 25 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பந்து வீச்சு படுமோசமாக இருப்பதால் பெங்களூரு அணி வீரர்கள் தேர்வு விஷயத்தில் தவறு இழைத்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.

    இந்த நிலையில் பிரபல இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியும், பெங்களூரு அணி நிர்வாகத்தை சாடியிருக்கிறார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், 'விளையாட்டின், ஐ.பி.எல். கிரிக்கெட்டின், ரசிகர்களின், வீரர்களின் நலன் கருதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வேறு உரிமையாளரிடம் விற்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். மற்ற அணி நிர்வாகங்கள் எப்படி அணியை சிறப்பாக கட்டமைத்து செயல்படுகிறதோ? அதேபோல் பெங்களூரு அணியையும் சிறப்பானதாக உருவாக்கும் அக்கறை கொண்ட புதிய உரிமையாளரிடம் விற்று விடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அது எட்டுவதற்கு கடினமான ஒன்று.
    • பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்துவீச்சாளர்களின் சமநிலை தவறியது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி வரை இலக்கிற்கு நெருக்கமாக செல்வோம் என்று நினைத்தே விளையாடினோம் என ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெசிஸ் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளனர். டி20 கிரிக்கெட் ஏற்ற மைதானமாக இந்த மைதானம் இருந்தது. கடைசி வரை இலக்கிற்கு நெருக்கமாக செல்வோம் என்று நினைத்தே விளையாடினோம்.

    ஆனால் 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அது எட்டுவதற்கு கடினமான ஒன்று. இருந்தாலும் நாங்கள் நிறைய விசயங்களை இந்த போட்டியில் முயற்சி செய்தோம். அந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவதில் மிக சிரமத்தை சந்தித்தனர். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்துவீச்சாளர்களின் சமநிலை தவறியது.

    எங்களது பந்துவீச்சாளர்கள் அந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பவர்பிளே ஓவர்களில் நாங்கள் ரன் ரேட்டினை மனதில் வைத்து தான் எந்த இடத்திலும் ரன்களை குறைய விடாமல் விளையாடினோம். ஆனால் சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். இந்த போட்டியில் 30 முதல் 40 ரன்கள் வரை நாங்கள் அதிகமாக வழங்கி விட்டோம். அதுவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. இருந்தாலும் எங்கள் பேட்டர்கள் கடைசி வரை நின்று விடாமுயற்சியுடன் வெற்றிக்கு போராடியது மிகவும் மகிழ்ச்சி.

    இவ்வாறு டு பிளெசிஸ் கூறினார்.

    • என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை.
    • நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை.

    17-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 30 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளது. 3 முதல் 10 இடங்கள் முறையே சென்னை, ஐதராபாத், லக்னோ, குஜராத், பஞ்சாப், மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் உள்ளனர்.

    இந்த தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை பெங்களூரு அணி வெளிப்படுத்தி வருகிறது. பெங்களூரு அணி தான் மோதிய 7 ஆட்டத்தில் 6 தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினாமான ஒன்றாக உள்ளது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து சிறிதுகாலம் ஓய்வு எடுத்துக் கொள்வதாக அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை. என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என ஃபாஃப் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறினேன். உடல் மற்றும் மன நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு, இந்த சீசனிலேயே மீண்டும் விளையாடுவேன் என நம்புகிறேன்.

    இவ்வாறு மேக்ஸ்வெல் கூறினார்.

    ×