search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியை"

    • நகை பறிப்பில் ஈடுபட்டது கேரள கொள்ளையர்கள்?
    • 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

    நாகர்கோவில்:

    நித்திரவிளை முக்காட்டு விளை பகுதியைச் சேர்ந்த வர் ஆஸ்டின். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பிரமிளா (வயது 30).

    இவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வரு கிறார். நேற்று மாலை கிராத்தூர் பெருமாவிளை பகுதியிலுள்ள தனது தாயார் வீட்டிற்கு பிரமிளா மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கிராத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் பிரமிளா கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் நகையை பறித்தனர்.

    இதில் பிரமிளா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.பின்னர் அந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து நித்திரவிளை போலீசில் பிரமிளா புகார் செய்தார். புகாரின் பேரில் நித்திர விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பிரமிளாவிடம் கொள் ளையர்கள் குறித்து அடை யாளங்களை கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சி களை ஆய்வு செய்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் மற்றும் முககவசம் அணிந்திருந்த நபர்கள் பிரமிளாவிடம் நகை பறிப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட் எதுவும் இல்லை. கொள்ளையர்கள் கேரளா நோக்கி தப்பி சென்றுள்ளனர். எனவே அந்த கொள்ளை கும்பல் கேரளாவை சேர்ந்தவர் களாக இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள்.கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    • சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கண்டித்தும் ஆசிரியை தனது பழக்கத்தை மாற்றவில்லை
    • பள்ளிக்கு வருகை தந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் குடிபோதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் துமாகூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியையான கங்கா லக்ஷ்மம்மா என்பவர், பள்ளியில் மதுபாட்டிலைக் கொண்டு வந்து, மது அருந்தியபடி பாடம் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கண்டித்தும், அதனை கங்கா லக்ஷ்மம்மா கண்டுகொள்ளவில்லையாம். தொடர்ந்து மது குடித்துவிட்டு பாடம் எடுத்து வந்ததால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கு வருகை தந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும், கங்கா லக்ஷ்மம்மாவின் வகுப்பறைக்கு சென்ற அவர்கள், வகுப்பறையில் சோதனை செய்தனர். அப்போது, மேசை டிராயரில் மதுபாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அவரும் குடிபோதையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்த கல்வித்துறை அதிகாரிகள், பின்னர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    • பரமக்குடி அருகே ஆசிரியை கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர் மீது புகார் செய்யப்பட்டது.
    • தனது தோழியின் திருமணத்திற்க்கு செல்வதாக கூறி சென்ற பொன்மாரி பின்னர் வீடு திரும்பவில்லை.

    ராமநாதபுரம்

    பரமக்குடி அருகே எமனேஸ்வரம் ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் கவிதா(வயது 59). இவர் நயினார்கோவில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது.

    2-வது மகள் பொன்மாரி செல்வி எம். ஏ.,பி.எட் படித்து விட்டு எமனேஸ்வரம் தனியார் பள்ளியில் ஆசிரியர் பயிற்சிக்கு சென்று கொண்டு இருந்தார்.

    இந்த நிைலயில் கடந்த 5-ந் தேதி தனது தோழியின் திருமணத்திற்க்கு செல்வதாக கூறி சென்ற பொன்மாரி பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கவிதா எமனேஸ்வரம் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எதிர் வீட்டில் வசித்து வந்த அருள் ராஜா மகன் ராஜா (வயது25) என்பவர் திருமணம் செய்யும் நோக்கத்துடன் கட்டாயபடுத்தி மகளை கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறார்.
    • ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிறந்தநாள் பரிசளிப்பு திட்டத்தை தொடங்கி உள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட காதர் பேட்டையில் நகராட்சி நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் விசாலாட்சி. இவர் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறார். இந்தநிலையில்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிறந்தநாள் பரிசளிப்பு திட்டத்தை தன் சொந்த முயற்சியில் தொடங்கி உள்ளார்.

    இந்த திட்டமானது மழலையர்களின் பிறந்தநாளன்று சிறிய தொகுப்பில் பென்சில், அளவுகோல்,ரப்பர் ,சார்ப்னர் போன்ற கல்வி உபகரணங்கள் கொண்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும்.

    தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியை விசாலாட்சி முயற்சி எடுத்துள்ளார். அவரது செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • அரசு பள்ளிக்கல்வித்துறை, கல்வி முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
    • பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

     பல்லடம் :

    அரசு பள்ளிக்கல்வித்துறை, கல்வி முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பள்ளி மேலாண்மை குழு பணி, 'எமிஸ்' இணையதள பதிவுகள் என, பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

    மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருவதை மறந்து, மொபைல் போனும், இணைய தளமுமாக பணியாற்ற வேண்டியுள்ளது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர். இதன்படி அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.அதில் அவர் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று நான் எழுதுவதா, நாளை பள்ளி செல்வதற்கு தயார்படுத்துவதா, சமையல் செய்வதா, அம்மாவை கவனிப்பதா, இந்த வாரத்தின் துணிகளை துவைப்பதா?நாளை, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். என்ன செய்வது என்றே தெரியவில்லை.இவ்வாறு கண்ணீர் விட்டு அழுதபடி, தன் செல்போனில் செல்பி எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதை, பல்வேறு சமூக வலைதளக்குழுக்களிலும் பகிர்ந்து வரும் ஆசிரியர்கள், இது தான் ஆசிரியர்களின் நிலை,கண்ணீர் விடும் நிலைக்கு பள்ளி கல்வித்துறை எங்களைத் தள்ளியுள்ளது என்று கூறுகின்றனர்.இந்த வீடியோ பல்லடம் பகுதியில் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    • கள்ளக்குறிச்சி அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியையை காணவில்லை.
    • பாபு தினமும் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று அண்ணா நகரில் உள்ள பள்ளியில் விடுவதும், மீண்டும் மாலையில் அழைத்து வருவதும் வழக்கம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே க.மாமானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 40) இவரது மனைவி அபிமாபீ (28) பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு முகமது ராஷீத் (10) என்ற மகனும், ஆலியா (8) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பாபு தினமும் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று அண்ணா நகரில் உள்ள பள்ளியில் விடுவதும், மீண்டும் மாலையில் அழைத்து வருவதும் வழக்கம். 

    அதன்படி நேற்று முன்தினம் மாலை தனியார் பள்ளிக்கு சென்று மனைவியை அழைத்துவர மோட்டார் சைக்கிளில் காத்திருந்தார். ஆனால் மனைவி வெகுநேரம் ஆகியும் வரவில்லை. பள்ளியில் சக ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள், அக்கம், பக்கத்தில் விசாரித்ததில் மனைவி காணவில்லை. இதுகுறித்து பாபு கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்
    • களியக்காவிளை பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள நெடுங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பிரகாஷ். இவருடைய மனைவி உஷாமேரி.

    இவர் பனங்காலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.தினமும் மாலை பள்ளி முடிந்த பிறகு களியக்கா விளை பஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம்.

    நேற்று மாலை உஷாமேரி பஸ்சில் களியக்காவிளை பஸ் நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வந்தனர்.

    அவர்கள் உஷாமேரியின் அருகில் வந்து முகவரி கேட்பது போல் ஒரு பேப்பரை காட்டி உள்ளனர். அதனை வாங்கி பார்த்த போது மர்ம நபர்களில் ஒருவன் உஷாமேரியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உஷாமேரி திருடன்....திருடன்... என கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் நகையுடன் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் நிலைய த்தில் உஷாமேரி புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த களியக்காவிளை போலீசார் ஆசிரியையிடம் நகை பறித்த மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். களியக்காவிளை பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்க ளால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    • ரோட்டின் மறு புறத்திற்கு குப்பையை கொட்ட சென்ற காளியம்மாள் மீது டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.
    • விபத்து பற்றி தகவல் அறிந்ததும், போலீசார் விரைந்து சென்று காளியம்மாளை மீட்டு சிவகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் இளங்குமரன். இவரது மனைவி காளியம்மாள் (வயது 80).

    ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் குப்பையை கொட்ட ரோட்டின் மறு புறத்திற்கு சென்றார்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக காளியம்மாள் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு சப்- இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று காளியம்மாளை மீட்டு சிவகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரியை திண்டுக்கல் மாவட்டம் டி.பாறைப்பாட்டி காலனி தெருவைச் சேர்ந்த முருகன் (50) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர் மதுரை கப்பலூரில் இருந்து டேங்கர் லாரியில் டீசல் ஏற்றி சென்று செங்கோட்டை யில் உள்ள பங்கில் இறக்கி விட்டு திரும்பி கொண்டி ருந்த போதுதான் விபத்து நடந்துள்ளது.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×