search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Overwork"

    • அரசு பள்ளிக்கல்வித்துறை, கல்வி முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
    • பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

     பல்லடம் :

    அரசு பள்ளிக்கல்வித்துறை, கல்வி முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பள்ளி மேலாண்மை குழு பணி, 'எமிஸ்' இணையதள பதிவுகள் என, பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

    மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தருவதை மறந்து, மொபைல் போனும், இணைய தளமுமாக பணியாற்ற வேண்டியுள்ளது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர். இதன்படி அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.அதில் அவர் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று நான் எழுதுவதா, நாளை பள்ளி செல்வதற்கு தயார்படுத்துவதா, சமையல் செய்வதா, அம்மாவை கவனிப்பதா, இந்த வாரத்தின் துணிகளை துவைப்பதா?நாளை, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். என்ன செய்வது என்றே தெரியவில்லை.இவ்வாறு கண்ணீர் விட்டு அழுதபடி, தன் செல்போனில் செல்பி எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதை, பல்வேறு சமூக வலைதளக்குழுக்களிலும் பகிர்ந்து வரும் ஆசிரியர்கள், இது தான் ஆசிரியர்களின் நிலை,கண்ணீர் விடும் நிலைக்கு பள்ளி கல்வித்துறை எங்களைத் தள்ளியுள்ளது என்று கூறுகின்றனர்.இந்த வீடியோ பல்லடம் பகுதியில் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    ×