search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"

    • பதிவுகள், மீம்கள் உலகெங்கிலும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
    • கூகுள் தேடலில் 'ஆண்டில் மிக நீண்ட மாதம் எது?' என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது.

    2025 ஜனவரி மாதம் இன்று [31 ஆம் தேதியுடன்] முடிவடைகிறது. இந்த ஆண்டில் 31 நாட்களை கடப்பதற்குள்ளாகவே பலருக்கு போதும் போதும் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

    மிக நீண்ட மாதமாக மக்கள் இதை கருதுகின்றனர். எனவே சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான பதிவுகள், மீம்கள் உலகெங்கிலும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

    எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் உள்ள பயனர்கள் ஜனவரி மாதம் 31 நாட்களுக்குப் பதிலாக 65 நாட்களைக் கொண்டிருப்பதைப் போல் தோன்றுவதாக மலைப்பு தெரிவித்து வருகின்றனர். சிலர் ஜனவரியை நகைச்சுவையாக மாதங்களின் "திங்கட்கிழமை" என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கூகுள் நிறுவனமும் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் மீம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    கூகுள் தேடலில் 'ஆண்டில் மிக நீண்ட மாதம் எது?' என்ற கேள்வுக்கு பதிலாக, 'ஆண்டின் நீண்ட மாதம் ஜனவரி, பிற மாதங்களை போல 31 நாட்களை மட்டுமே கொண்டுள்ள போதும் ஜனவரி முடிவடையாமல் காலாகாலத்துக்கும் நீண்டு கொண்டே செல்கிறது' என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளது. இதை பகிர்ந்து, ஜனவரி முடியவே மாட்டேன் என்கிறது என்று கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது.

     

    • மொத்தம் 7 பேரின் நெற்றியிலும் குங்குமம் பூசும் காட்சிகள் உள்ளது.
    • புனிதமான திருமண மரபுகளை இதுபோன்று கேலி செய்வது கண்டனத்திற்குரியது என பதிவிட்டனர்.

    திருமண விழாவின் போது நடைபெறும் சில வித்தியாசமான சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. அது போன்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. திருமணத்தின் போது மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைப்பது வழக்கம். ஆனால் இந்த வீடியோவில், பாரம்பரிய முறைப்படி திருமணம் நடக்கிறது.

    இதற்காக திருமண மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. மணமேடையில் திருமண சடங்குகள் நடைபெறுகிறது. அப்போது மணமகன் மணப்பெண்ணுக்கு குங்குமம் வைக்கிறார். தொடர்ந்து அவரது அருகே இருக்கும் மணப்பெண்ணின் சகோதரிகள் 6 பேர் மற்றும் சகோதரர் ஒருவர் என மொத்தம் 7 பேரின் நெற்றியிலும் குங்குமம் பூசும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 1.13 கோடி பார்வைகளை குவித்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் மணமகனின் செயலை விமர்சித்து பதிவிட்டனர். புனிதமான திருமண மரபுகளை இதுபோன்று கேலி செய்வது கண்டனத்திற்குரியது என பதிவிட்டனர்.



    • வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த பெண்ணிடம் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார்.
    • வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒரு பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் செல்போனுடன் சேர்த்து அந்த பெண்ணையும் இழுத்து சென்ற அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    அதில், ஒரு இளம்பெண் செல்போனில் பேசிக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். இதை நோட்டமிட்ட வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த பெண்ணிடம் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார். அவர் கொடுக்க மறுக்கவே, போனுடன் அந்த பெண்ணையும் சேர்த்து இழுக்கிறான்.

    அப்போதும் அந்த பெண் செல்போனை விடாமல் பிடித்து கொள்ள திருடன் தனது மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை இழுத்து செல்கிறான். பின்னர் அந்த பெண்ணை விட்டுவிட்டான். அதன் பிறகு பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் காட்சிகள் உள்ளன. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.



    • செல்போன் பேசியபடியே நடந்து செல்லும் பெண் பேனரை கவனிக்காமல் செல்கிறார்.
    • செல்போனுக்கு அடிமையானதன் விளைவு என பலரும் பதிவிட்டனர்.

    செல்போனை அனைவருமே பயன்படுத்தி வரும் நிலையில், சிலர் போனுக்கு அடிமையாகும் சம்பவங்களையும் காண முடிகிறது. நடக்கும் போது தொடங்கி வாகனம் ஓட்டும் போதும் கூட சிலர் செல்போன் பேசியபடியே செல்வதும், இதனால் அவர்கள் விபத்துக்குள்ளான சம்பவங்களும் நடந்துள்ளது.

    அது போன்ற ஒரு சம்பவம் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்துள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை கையில் வைத்து கொண்டு செல்போன் பேசியபடியே நடந்து செல்கிறார். அப்போது சாலையோரம் ஒரு பாதாள குழி உள்ளது. அதில் பொது மக்கள் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக பேனரும் வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் செல்போன் பேசியபடியே நடந்து செல்லும் பெண் பேனரை கவனிக்காமல் செல்கிறார். திடீரென அவர் குழந்தையுடன் அந்த பாதாள குழிக்குள் விழுவது போன்று அதிர்ச்சியான காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த தாயை விமர்சித்தனர். செல்போனுக்கு அடிமையானதன் விளைவு என பலரும் பதிவிட்டனர்.



    • வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வலைத்தளவாசிகளிடம் சிரிப்பை வரவழைத்தது.
    • இப்படி தேவையற்ற யோசனைகளை யாரும் செயல்படுத்தாதீர்கள் என்று பலரும் கருத்துகளை பதிவிட்டனர்.

    சமூக வலைத்தளங்களில் எளிய தீர்வுகள் என்ற பெயரில் ஏராளமான யோசனைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் பல பயனளிப்பதில்லை என்பதை அனுபவத்தில்தான் உணர முடியும். அப்படி ஒரு பெண், எளிமையான முறையில் முடியை நேராக்க யுத்தி சொல்வதாக கூறி, ஆபத்தை சந்தித்தார்.

    அவர் வீட்டில் சமையல் அறையில் பயன்படுத்தும் இரும்பு இடுக்கியைக் கொண்டு முடியை நேராக்கலாம் என்ற யோசனையை செயல்படுத்தினார். இரும்பு இடுக்கியை அடுப்பில் சூடாக்கிவிட்டு அதை முடியை நேராக்கும் எலக்ட்ரிக் கருவி போல பயன்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சி சோதனையில் முடிந்தது. சூடான இடுக்கி முடியை நேராக்குவதற்குப் பதிலாக கத்தையாக முடியை துண்டாக்கிவிட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் பதற்றம் அடைந்தபடியே இடுக்கியை மீண்டும் நெருப்பில் காட்ட, கத்தரிக்கப்பட்ட முடி பற்றி எரியத் தொடங்கியது. பதறிப்போன அவர், அதை தூக்கிப்போட்டதும் வீடியோ முடிவடைகிறது.

    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வலைத்தளவாசிகளிடம் சிரிப்பை வரவழைத்தது. இப்படி தேவையற்ற யோசனைகளை யாரும் செயல்படுத்தாதீர்கள் என்று பலரும் கருத்துகளை பதிவிட்டனர். வீடியோ 3½ லட்சம் பேரின் விருப்பங்களை பெற்றதோடு, மேலும் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.



    • இரவு நேர ரெயிலில் நெருக்கியடித்து ஏறி வீடு திரும்பினர்.
    • வீடியோவாக வெளியிட அதை சமூக வலைத்தள ரசிகர்களும் வைரலாக்கினர்.

    மும்பையில் ரெயில் கூட்ட நெரிசலை பயணிகள் கச்சேரி பாடி மகிழ்ச்சியாக மாற்றினர். இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் ராக் என்ற இசைக்குழு மும்பையில் 3 நாட்கள் இசைக் கச்சேரி நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்கள், இரவு நேர ரெயிலில் நெருக்கியடித்து ஏறி வீடு திரும்பினர்.

    இருக்கை கிடைக்காமல், நெரிசலில் நின்று வந்த பயணிகளில் ஒருவர் இசைக் கச்சேரியில் கேட்ட பாடல்களை செல்போனில் ஒலிக்கச்செய்து பாட ஆரம்பிக்க, அசதி தெரியாமல் பயணிக்க மற்ற பயணிகளும் கூட்டு சேர்ந்து 'கோரஸ்' பாட, பயணமே புதிய கச்சேரியாக களைகட்டியது.

    இதை பயணி ஒருவர் தனது வலைத்தள பக்கத்தில் வீடியோவாக வெளியிட அதை சமூக வலைத்தள ரசிகர்களும் வைரலாக்கினர். நெரிசலான பயணத்தை நெகிழ்ச்சியாக மாற்றிய அந்த வீடியோ 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் விரும்பப்பட்டு, 20 லட்சத்துக்கும் மேலானவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது.



    • இதுவரை சுமார் 8.81 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
    • மக்கள் அவருடன் செல்பி எடுக்க அலைமோதுகின்றனர்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும்.

    இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    இதுவரை சுமார் 8.81 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 54.96 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் வித்தியாசமான துறவிகள் கவனம் பெற்று வருகின்றனர். அதே வெளியில் பாசி மணி மாலைகள் விற்கும் மோனாலிசா போஸ்லே எனும் 16 வயதான பெண் இந்திய அளவில் சமூக ஊடகங்களில் டிரண்ட் ஆகி வருகிறார்.

    திரை நடிகைகளின் போலித்தனங்கள் இல்லமால் எதார்த்தமான அழகுடன் அவர் இருப்பது பலரையும் கவர்ந்துள்ளது. மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் கும்பமேளாவில் பாசி மாலைகள் விற்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனால் பல ஊடகங்கள் அவரிடம் கும்பமேளாவில் வைத்து பேட்டி எடுக்கவும், மக்கள் அவருடன் செல்பி எடுக்கவும் அலைமோதுகின்றனர். பல சமூக ஊடக பயனர்கள் லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்துடன் இவருக்கு இருக்கும் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றனர். 

    • வழக்கமாக இதுபோன்ற அறுவை சிகிச்சை 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும்.
    • அறுவை சிகிச்சை குறித்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரின் துணிச்சலை பாராட்டி பதிவிட்டனர்.

    குடும்ப கட்டுப்பாடு என்று வரும் போது பொதுவாக பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சையில் ஆண்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு செய்யும் அளவுக்கு வந்து விட்டது. ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வாசக்டோமி என்று அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில் தைவானின் தைபே பகுதியை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான சென் வெய்-நாங் என்பவர் தனக்கு தானே வாசக்டோமி அறுவை சிகிச்சை செய்து கொண்டதோடு அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. 3 குழந்தைகளின் தந்தையான டாக்டர் சென் வெய்-நாங் தனது மனைவி மேலும் குழந்தைகளை பெற விரும்பவில்லை. அதோடு மனைவியை மகிழ்விப்பதற்காகவும், ஆண்களின் கருத்தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தனக்குதானே வாசக்டோமி அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறினார்.

    வழக்கமாக இதுபோன்ற அறுவை சிகிச்சை 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். ஆனால் டாக்டர் சென் வெய்-நாங் தனக்குதானே அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் சுமார் 1 மணி நேரம் எடுத்து கொண்டதாகவும், தனக்கு தானே கருத்தடை செய்து கொள்வது விசித்திரமான அனுபவமாக இருந்ததாகவும் கூறினார். அவரது அறுவை சிகிச்சை குறித்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரின் துணிச்சலை பாராட்டி பதிவிட்டனர். 

    • வீடியோ ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர்.

    மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் வாலிபர் ஒருவர் மின்சார காரை பயன்படுத்தி பூரி சுடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    வீடியோவில் கருப்பு நிற மின்சார கார் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அந்த காருக்கு முன்பாக வாலிபர் ஒருவர் அமர்ந்து கொண்டு காருடன் மின்சார அடுப்பை இணைக்கிறார். பின்னர் வீட்டில் சமையலறையில் நின்று சமைப்பதை போல மாவை உருட்டி அடுப்பில் பாத்திரம் வைத்து பூரி சுடும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், மின்சார வாகனங்கள் மாசு கட்டுப்பாடு, பெட்ரோல் தட்டுப்பாட்டை குறைப்பதோடு மட்டுமின்றி சமையல் தேவைக்கும் பயன்படும் என்பதை கண்டுபிடித்துள்ளார் என பதிவிட்டிருந்தார்.



    • பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.
    • மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம்

    ராஜஸ்தான் அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒரு பெண் ஆசிரியையுடன் பள்ளியில் உள்ள தனது அலுவலக அறைக்குள் தகாத செயலில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சலேரா கிராமத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர், பலமுறை அந்த பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.

    மற்றுமொரு காணொளியில், அதிபர் பாடசாலையில் தனது மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம். இந்த வீடியோக்கள் பள்ளி வளாகத்திற்குள் தலைமை ஆசிரியரின் தகாத நடத்தைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

     

    இந்த சம்பவம் குறித்து பதிலளித்த மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திர சர்மா, "முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியை இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்த குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்  

    • தனது பொறுமையை இழந்துவிடாத ஓட்டுநர் அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்
    • குறைகளை நிறுவனத்திடம் கூறுங்கள் என்று ஓட்டுநர் அந்த பெண்ணின் கோபத்தை தணிக்க முயன்றார்.

    7 நிமிடம் தாமதாக வந்ததற்காக கால் டாக்சி ஓட்டுனரை பெண் மோசமாக நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்து திட்டிய அந்த பெண் ஒரு கட்டத்தில் அவர் மீது எச்சில் துப்பியுள்ளார்.

    ஆனால் தனது பொறுமையை இழந்துவிடாத ஓட்டுநர் அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். உங்கள் குறைகளை டாக்சி நிறுவனத்திடம் கூறுங்கள் என்று ஓட்டுநர் அந்த பெண்ணின் கோபத்தை தணிக்க முயன்றார்.

    ஆனால் பெண் அடாவடித்தனமாக நடந்துகொண்டதால் டாக்சியை விட்டுவிட்டு வேறு வழிகளில் பயணத்தைத் தொடருமாறு அந்த ஓட்டுநர் கூறியுள்ளார்.

    இந்த சம்பவத்தை அந்த ஓட்டுநர் வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் அவர்களின் உரையாடல் பதிவாகி உள்ள நிலையில் இணையத்தில் பலர் அந்த பெண்ணின் செய்கையை கண்டித்து வருகின்றனர். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

    • வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்தனர்.
    • வாலிபர் காதலியை பைக்கில் அமர வைத்தவாறே ஓட்டி செல்கிறார்.

    'ரீல்ஸ்' மோகத்தால் இளைஞர்களும், இளம்பெண்களும் செய்யும் சில செயல்கள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கான்பூர் நகரை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று பைக்கில் செல்லும் போது ரீல்ஸ் வீடியோ எடுத்த காட்சிகள் இணையத்தில் பரவின. அதில், வாலிபர் தனது காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் உள்ளது.

    மேலும் அந்த வாலிபர் காதலியை பைக்கில் அமர வைத்தவாறே ஓட்டி செல்கிறார். இருவரும் ஹெல்மெட்டும் அணியவில்லை. மாறாக ஒரு பாடலுக்கு 'ரீல்ஸ்' செய்வதை பார்த்து பலரும் அவர்களை கண்டிப்பது போன்று காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்தனர். அவர் ஏற்கனவே பலமுறை சாலை விதிமீறலில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்த போலீசார் அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ×