VIDEO: செல்போனுடன் பெண்ணையும் இழுத்து சென்ற திருடன்

வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த பெண்ணிடம் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
VIDEO: செல்போனுடன் பெண்ணையும் இழுத்து சென்ற திருடன்
Published on

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒரு பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் செல்போனுடன் சேர்த்து அந்த பெண்ணையும் இழுத்து சென்ற அதிர்ச்சி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அதில், ஒரு இளம்பெண் செல்போனில் பேசிக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். இதை நோட்டமிட்ட வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த பெண்ணிடம் செல்போனை பறிக்க முயற்சிக்கிறார். அவர் கொடுக்க மறுக்கவே, போனுடன் அந்த பெண்ணையும் சேர்த்து இழுக்கிறான்.

அப்போதும் அந்த பெண் செல்போனை விடாமல் பிடித்து கொள்ள திருடன் தனது மோட்டார் சைக்கிளில் அந்த பெண்ணை இழுத்து செல்கிறான். பின்னர் அந்த பெண்ணை விட்டுவிட்டான். அதன் பிறகு பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் காட்சிகள் உள்ளன. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com