என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சங்கடமா இருக்குங்க..! வீடியோ வெளியிட்டு நடிகர் பெஞ்சமின் வேதனை
    X

    சங்கடமா இருக்குங்க..! வீடியோ வெளியிட்டு நடிகர் பெஞ்சமின் வேதனை

    • நடிகர் பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
    • நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கியுள்ளார்.

    இயக்குனர் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான திருப்பாச்சி படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு நண்பராக நடிகர் பெஞ்சமின் நடித்துள்ளார்.

    அந்த படத்திற்கு பிறகு பெஞ்சமின் புகழ்பெற்று பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

    இதனை மறுத்து நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கியுள்ளார்.

    இதுகுறித்து வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைத்தளங்களில் என் புகழை கலங்கப்படுத்துவதற்காக என்னை பற்றி தவறுதலான செய்திகளை போடுகிறார்கள்.

    இது 4வது முறை. திருப்பாச்சி பட நடிகர் பெஞ்சமின் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    இது மிகவும் சங்கடமாக உள்ளது. மக்கள் என்னுடைய வீட்டிற்கு சென்று என் மனைவியிடம் விசாரித்து வருகிறார்கள்.

    நான் தற்போது பரமத்தி வேலூரில் கோரைக்காரன் என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்.

    ஒரு சில நண்பர்கள் தங்கள் சேனலுக்கு வியூவர்ஸ் வரவேண்டும் என்பதற்காக பெஞ்சமின் இறந்துவிட்டார் என்று செய்தியை பரப்புகின்றனர்.

    இது கஷ்டமாக இருக்கிறது. இப்படி செய்தி பரவினால் என் வீட்டில் யாருக்காவது அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது என்றால் நான் என்ன செய்வது.

    என் வீட்டில் ஏற்கனவே 4 பேர் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துள்ளனர். நானும் ஹார்ட் அட்டாக் வந்து பிழைத்திருக்கிறேன்.

    இப்படி செய்தியை பரப்பி வியூவர்சை கொண்டு வரவேண்டும் என்கிற அவசியம் உங்களுக்கு வேண்டாம். தயவு செய்து இதுபோன்று செய்திகளை பரப்பாதீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×