விமர்சனத்தை ஏற்படுத்திய மணமகனின் செயல்- வீடியோ

மொத்தம் 7 பேரின் நெற்றியிலும் குங்குமம் பூசும் காட்சிகள் உள்ளது. புனிதமான திருமண மரபுகளை இதுபோன்று கேலி செய்வது கண்டனத்திற்குரியது என பதிவிட்டனர்.
விமர்சனத்தை ஏற்படுத்திய மணமகனின் செயல்- வீடியோ
Published on

திருமண விழாவின் போது நடைபெறும் சில வித்தியாசமான சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. அது போன்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. திருமணத்தின் போது மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைப்பது வழக்கம். ஆனால் இந்த வீடியோவில், பாரம்பரிய முறைப்படி திருமணம் நடக்கிறது.

இதற்காக திருமண மண்டபம் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. மணமேடையில் திருமண சடங்குகள் நடைபெறுகிறது. அப்போது மணமகன் மணப்பெண்ணுக்கு குங்குமம் வைக்கிறார். தொடர்ந்து அவரது அருகே இருக்கும் மணப்பெண்ணின் சகோதரிகள் 6 பேர் மற்றும் சகோதரர் ஒருவர் என மொத்தம் 7 பேரின் நெற்றியிலும் குங்குமம் பூசும் காட்சிகள் உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 1.13 கோடி பார்வைகளை குவித்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் மணமகனின் செயலை விமர்சித்து பதிவிட்டனர். புனிதமான திருமண மரபுகளை இதுபோன்று கேலி செய்வது கண்டனத்திற்குரியது என பதிவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com