என் மலர்tooltip icon

    இந்தியா

    காத்திருந்து காத்திருந்து.. ஒரு வழியாக முடிவுக்கு வரும் ஜனவரி.. மீம் வெளியிட்ட கூகுள்
    X

    காத்திருந்து காத்திருந்து.. ஒரு வழியாக முடிவுக்கு வரும் ஜனவரி.. மீம் வெளியிட்ட கூகுள்

    • பதிவுகள், மீம்கள் உலகெங்கிலும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
    • கூகுள் தேடலில் 'ஆண்டில் மிக நீண்ட மாதம் எது?' என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது.

    2025 ஜனவரி மாதம் இன்று [31 ஆம் தேதியுடன்] முடிவடைகிறது. இந்த ஆண்டில் 31 நாட்களை கடப்பதற்குள்ளாகவே பலருக்கு போதும் போதும் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

    மிக நீண்ட மாதமாக மக்கள் இதை கருதுகின்றனர். எனவே சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான பதிவுகள், மீம்கள் உலகெங்கிலும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

    எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் உள்ள பயனர்கள் ஜனவரி மாதம் 31 நாட்களுக்குப் பதிலாக 65 நாட்களைக் கொண்டிருப்பதைப் போல் தோன்றுவதாக மலைப்பு தெரிவித்து வருகின்றனர். சிலர் ஜனவரியை நகைச்சுவையாக மாதங்களின் "திங்கட்கிழமை" என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கூகுள் நிறுவனமும் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் மீம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    கூகுள் தேடலில் 'ஆண்டில் மிக நீண்ட மாதம் எது?' என்ற கேள்வுக்கு பதிலாக, 'ஆண்டின் நீண்ட மாதம் ஜனவரி, பிற மாதங்களை போல 31 நாட்களை மட்டுமே கொண்டுள்ள போதும் ஜனவரி முடிவடையாமல் காலாகாலத்துக்கும் நீண்டு கொண்டே செல்கிறது' என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளது. இதை பகிர்ந்து, ஜனவரி முடியவே மாட்டேன் என்கிறது என்று கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது.

    Next Story
    ×