உணவுக்காக ஓட்டலுக்கு சென்ற கடமான்: வைரல் வீடியோ

திரைப்படங்களின் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் எடுத்துள்ளனர்.இப்பகுதியில் கேரளா வனத்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்
உணவுக்காக ஓட்டலுக்கு சென்ற கடமான்: வைரல் வீடியோ
Published on

பொள்ளாச்சி:

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி, உலக அளவில் பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அருவியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறைனர் அனுமதி அளித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களின் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் இந்த நீர்வீழ்ச்சியில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை கடமான் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று உணவு கேட்டு நிற்கும் வீடியோ வெளியாகி உள்ளது. சுற்றுலா பயணிகள் எடுத்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இப்பகுதி பாதுகாக்கபட்ட பகுதி என்பதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் நிறைந்த பகுதி என்பதாலும் கேரளா வனத்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com