search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ்"

    • மாணவர்கள் அவதி
    • சீராக உள்ளதா என கண்காணித்து எடுத்து வர பயணிகள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த வரதலம் பட்டு பகுதியில் இருந்து அப்புக்கல், இளவம்பாடி வழியாக வேலூர் செல்லக்கூடிய அரசு டவுன் பஸ் இளவம்பாடி அடுத்த பொய்கை மோட்டூர் பகுதியில் இன்று காலை சென்று கொண்டிருந்தது.

    இதில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பஸ் பழுதாகி பாதி வழியிலேயே நின்றது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டனர்.

    அந்த வழியாக வந்த பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சிலர் சென்றனர். நடுவழியில் நின்ற பஸ்சை ஒரு மணி நேரம் பழுது பார்த்து எடுத்துச் சென்றனர்.

    இனி இதுபோல சம்பவங்கள் ஏற்படாமல் பஸ் சீராக உள்ளதா என கண்காணித்து எடுத்து வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்பாராத விதமாக ரோட்டின் இடது புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
    • காயமின்றி தப்பித்த பய ணிகள் 9 பேரையும் கோபி கிளைக்கு தகவல் தெரிவித்து வேறு பஸ்ஸில் அனுப்பி வைத்தனர்

    நம்பியூர்

    ஈரோடு மாவட்டம் கோபி கிளைக்கு உட்பட்ட அரசு பஸ் ஒன்று நேற்று இரவு கோயம்புத்தூரில் இருந்து 9 பயணிகளுடன் கோபி நோ க்கி வந்து கொண்டி ருந்தது. பஸ்சை செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.

    பஸ் கெட்டி செவியூர் சுள்ளிக்கரடு பிரிவு பள்ளிக்கூடம் அருகில் வந்துகொ ண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்பாராத விதமாக ரோட்டின் இடது புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த நடத்துனர் பரிஸ் பாட்ஷா என்பவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.

    பின்னர் இச்சம்பவம் அறிந்து வந்த அருகிலுள்ள திருப்பூர் மாவட்ட குன்ன த்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாகன சோதனை சாவடி யில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து காயம் அடைந்த வரை கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து நம்பியூர் காவல் நிலையத்தி ற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நம்பியூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து காயமின்றி தப்பித்த பய ணிகள் 9 பேரையும் கோபி கிளைக்கு தகவல் தெரிவித்து வேறு பஸ்ஸில் அனுப்பி வைத்தனர்.

    போக்குவரத்து கழக பொது மேலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ராணி தோட்டத்தில் உள்ள திருநெல்வேலி கோட்ட பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தியை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி. பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்கும், மக்கள் வெளியிடங்களுக்கு பயணிக்கவும், மருத்துவமனைகளுக்கு செல்லவும், அரசு பேருந்துகளை நம்பி உள்ளனர். மக்கள்தொகை பெருகி வருவதால் இப்போதுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மற்றும் முக்கிய நகரங்களை கிராமங்களுடன் இணைக்கும் வகையில் பேருந்து வசதிகள் போதிய அளவு இல்லாத நிலை உள்ளது. ஆகையால் அனைத்து ஊர்களில் இருந்தும் நாகர்கோவில் செல்லவும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்லவும் அதிக பேருந்து சேவைகள் தேவை.

    ஏராளமான வழித்தடங்களில் இயங்கி வந்த பேருந்துக்குள் தக்க காரணமின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். குறிப்பாக மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதிகள் தடையின்றி கிடைக்க ஆவன செய்ய கேட்டுகொண்டார். கடற்கரை கிராமங்களை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையோடு இணைக்கும் வகையில் புதிய பேருந்துக்களின் தேவையை விளக்கினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான நோயாளிகள் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி, ஆர்.சி.சி., ஸ்ரீ சித்திரை மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளுக்கு சிகிச்சை தேடி செல்கின்றனர். அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து பேருந்து மாற வேண்டிய கட்டாயம் தற்பொழுது உள்ளது. நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு நேரடி பேருந்து வசதி செய்து தர வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, கோவை, திருச்சி போன்ற மாநகரங்களுக்கும், வேளாங்கண்ணி, பழனி போன்ற சுற்றுலா தலங்கள் செல்லவும் போதிய பேருந்து வசதிகள் இல்லை. அதற்கு ஆவன செய்ய வேண்டுமென கோரிக்கைகள் முன்வைத்தார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் பேருந்துங்கள் பழுதடைந்த நிலையில் சாலைகளில் பயணிக்கிறது. அதற்கு பதிலாக நல்ல நிலையில் இயங்கும் பேருந்துங்கள் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    • மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
    • இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்ப்பாடி பகுதியை சேர்ந்தவர் திருமேனி மகன் அசோக்குமார் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் மதுரை வீரன். இவர்கள் இருவரும் திருச்சுழி-அருப்புக் கோட்டை சாலையை மோட்டார் சைக்கிளில் வேகமாக கடக்க முயன்று உள்ளனர்.

    அப்போது ராமேசுவ ரத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அசோக்குமார், மதுரைவீரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொது மக்கள் 70-க்கும் மேற்பட் டோர் திருச்சுழி-அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் மணி கண்டன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரி சுந்தர பாண்டி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது திருச்சுழி- அருப்புக்கோட்டை சாலை தமிழ்ப்பாடி பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும், இதனால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் வலி யுறுத்தினர். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த தையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    • பஸ் கண்டக்டரை டெப்போவிற்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடலூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மெய்யனூர் கிளையில் டிரைவராக சத்யமூர்த்தி, கண்டக்டராக எஸ்.நேரு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று இவர்களுக்கு சேலம்-சிதம்பரம் வழித்தடத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பஸ் காலை 5.55 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டது. பஸ் நெய்வேலிக்கு 4 கிலோ மீட்டருக்கு முன்பு ஊமங்கலம் என்ற பகுதியில் சென்றபோது விழுப்புரம் போக்குவரத்து கழக கடலூர் மண்டல உதவி மேலாளர் தலைமையிலான டிக்கெட் பரிசோதகர்கள் குழு பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது தலைவாசல் பஸ் நிலையத்தில் ஏறிய பயணிகளுக்கு வழங்கப்பட்ட 2 நூறு மற்றும் 2 ரூ.10 மதிப்புள்ள பயணச் சீட்டுகள் நேற்றைய தேதியில் வழங்கிய பயணப்பட்டியலில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் அந்த பயணச்சீட்டுகள் இதே கண்டக்டரால் ஏற்கனவே இவருடைய முந்தைய பணியில் பயணிகளுக்கு விற்கப்பட்டவை என தெரிந்தது.

    கண்டக்டர் நேரு ஏற்கனவே அவரால் விற்கப்பட்ட பயணச் சீட்டை வைத்திருந்து மீண்டும் பயணிகளுக்கு மறுவிற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கண்டக்டர் நேரு பணி தொடராமல் பணிநிறுத்தம் செய்யப்பட்டார். மேலும் கண்டக்டர் நேருவை சேலம் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாற்று கண்டக்டர் ஏற்பாடு செய்யப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் மாதந்தோறும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் அலுவலர்களால் கண்டக்டர்களின் பணப்பை மற்றும் லாக்கர்கள் திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது சேலம் போக்குவரத்துக் கழகத்தில் வழக்கமாக நடைமுறையில் உள்ளது.

    • பாவளி பண்டிகையை யொட்டி கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • கடந்த ஆண்டை விட 1.33 லட்சம் கி.மீ.. கூடுதலாக இயக்கி 65.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைத்து பணியா ளர்களின் கூட்டு முயற்சியே இத்தகைய இலக்கை அடைய முடிந்தது

    சேலம்:

    சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-

    தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அத்துடன் மாற்று பஸ்கள், வழித்தட பஸ்கள், தட நீட்டிப்பு, கூடுதல் நடைகளும் இயக்கப் பட்டன. இதன்மூலம் 4 நாட்களில் டவுன் பஸ்களில் 39 லட்சம் பயணிகள், புறநகர் பஸ்களில் 23 லட்சம் பயணிகள் என மொத்தம் 62 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

    தினமும் சராசரியை விட டவுன் பஸ்களில் கூடுதலாக 45 ஆயிரம் பேர், புறநகர் பஸ்களில் 56 ஆயிரம் பேர் என மொத்தம் 1 லட்சத்து ஆயிரம் பேர் கூடுதலாக பயணித்து உள்ளனர். அவர்களுக்காக 39 லட்சம் கி.மீ. பஸ்கள் இயக்கப்பட்டு 11.03 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட 1.33 லட்சம் கி.மீ.. கூடுதலாக இயக்கி 65.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைத்து பணியா ளர்களின் கூட்டு முயற்சியே இத்தகைய இலக்கை அடைய முடிந்தது என அவர் அதில் கூறி உள்ளார்.

    • பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • பள்ளி மாணவர்கள், பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இரணியல், நவ.9-

    கருங்கல், திங்கள் நகர், இரணியல், தோட்டியோடு வரை உள்ள நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலை யில் இருந்து வந்தது. தற்போது மழைக்காலம் தொடங்கிய பின்னர் இந்தச் சாலைகள் மேலும் மோச மடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் பல்லாங் குழி சாலை யாக உள்ளது. இரணி யல் மேலத்தெரு, ஆமத்தான் பொத்தை, காற்றாடி மூடு ஆகிய இடங்களில் ஆங்காங்கே மரணக்குழிகள் காணப்படுகிறது.

    இந்த நிலையில் கருங்கலில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ், திங்கள் நகர் ரவுண்டானா பகுதியில் வந்த போது, எதிரே வந்த லாரிக்கு வழி விட முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் பஸ் சரிந்து விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அதில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள், பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் மோசமான நிலையில் உள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, கருங்கல், திங்கள் நகர், இரணியல் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக கூடுதலாக பஸ்களை இயக்க உள்ளோம்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சொந்த ஊர் செல்ல பொது மக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்வதில் ஆர்வமாக உள்ளனர்.

    சென்னையில் இருந்து செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பிவிட்டதோடு சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் இல்லை. இதனால் அரசு பஸ்களை நாடி மக்கள் செல்கின்றனர்.

    சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 60 ஆயிரம் பேர் செல்ல முன்பதிவு செய்தனர். பெரும்பாலானவர்கள் 10-ந் தேதி பயணம் செய்ய ஆர்வமாக உள்ளனர்.

    அதனால் தீபாவளிக்கு முந்தைய வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பயணம் செய்ய தென் மாவட்ட பஸ்களில் இடமில்லை. 9 மற்றும் 11-ந் தேதி பயணிக்க இடங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 64 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து இருந்தனர்.

    ஆனால் இந்த ஆண்டு இதுவரையில் 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை, நெல்லை, நாகர்கோ வில், தூத்துக்குடி மற்றும் கோவை செல்லக்கூடிய பஸ்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. அதனால் பிற போக்குவரத்துக் கழக பஸ்களை முன்பதிவு செய்ய இணைத்து வருகிறோம்.

    முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக கூடுதலாக பஸ்களை இயக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அரசு பஸ்களை போல ஆம்னி பஸ்களிலும் நிரம்பிவிட்டன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் 1250 ஆம்னி பஸ்களில் 10-ந் தேதிக்கான இடங்கள் நிரம்பிவிட்டன.

    • தவறுதலாக விட்டுச்சென்ற பணமா? அல்லது யாராவது அதனை மறைத்து கொண்டு வந்ததா? என்று சந்தேகம் ஏற்பட்டது
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பஸ் மற்றும் பல்வேறு வாகனங்களில் வருகின்றனர். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அவர்கள் வந்து செல்கின்றனர்.

    நேற்று மாலை பெங்களூரூவில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் இன்று காலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச்சென்றதும், பணிமனைக்கு செல்ல டிரைவர் மற்றும் கண்டக்டர் புறப்பட்டனர்.

    அதற்கு முன்னதாக பஸ்சுக்குள் யாராவது இருக்கிறார்களா? ஏதேனும் பொருட்களை விட்டுச்சென்றுள்ளார்களா? என அவர்கள் சோதனை செய்தனர். அப்போது, பஸ்சின் கடைசி சீட்டுக்கு அருகே உள்ள டூல்ஸ் பாக்சை (பழுது உபகரணங்கள் வைக்கும் பெட்டி) திறந்து பார்த்தனர்.

    அங்கு 500 ரூபாய் நோட்டுகள் 4 கட்டுகள் இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை எடுத்து எண்ணி பார்த்தபோது ரூ.2 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பணத்தை பார்வையிட்டனர்.

    அதனை வைத்துச்சென்றது யார்? என்ற விவரம் தெரியவில்லை. தவறுதலாக விட்டுச்சென்ற பணமா? அல்லது யாராவது அதனை மறைத்து கொண்டு வந்ததா? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் ஒரு வாலிபர் அங்கு வந்து பஸ்சில் தான் வந்தபோது, சிம்கார்டை தொலைத்து விட்டதாக கூறி பஸ்சுக்குள் ஏறி தேடினார். அவரது நடவடிக்கை சந்தேகத்திற்கிடமாக இருந்தது. இந்நிலையில் பணத்தை விட்டுச்சென்றதாக அவர் கூறினார். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரையும், பஸ்சில் கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சத்தையும் போக்குவரத்து துறையினர், கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள், விசாரணை நடத்தியபோது, வாலிபர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் என்றும், சுசீந்திரம் கோவிலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பணத்தை கொண்டு வந்தது ஏன்? அது அவருடையது தானா? என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • 7 பேர் படுகாயமடைந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் தினமும் சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால் எப்போதுமே இந்த பஸ் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மேலூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் மேலூரை அடுத்துள்ள வஞ்சிநகரம் ஊராட்சியை சேர்ந்த நெல்லுகுண்டுபட்டி அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கண்மாய்க் கரையில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் ஜீவானந்தம், பயணிகள் சாந்தி,ராஜேஸ்வரி, பத்மா, பாணு உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி, தனிப்பிரிவு ஏட்டு விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு காய மடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் 108 ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்டக்டரை சரமாரியாக தாக்கினார்
    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    திருச்செந்தூரில் இருந்து திங்கள்நகருக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. நள்ளிரவு 11.30 மணிக்கு பஸ் வடசேரி பஸ் நிலையத்தை வந்த டைந்தது.

    இதையடுத்து பஸ் நிலை யத்தில் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். அப்போது கண்டக்டர் அவரிடம் டிக்கெட் கேட்ட போது வெட்டூர்ணிமடம் செல்லவேண்டும் என்று டிக்கெட் எடுத்துள்ளார். பஸ் நிலையத்திலிருந்து பஸ் புறப்பட்டு சென்றது. வெட்டூர்ணிமடம் பஸ் நிறுத்தத்தை விட்டு சிறிதுதூரம் தாண்டி பஸ் நிறுத்தப்பட்டதாக தெரி கிறது. இதனால் பஸ்சில் இருந்த வாலிபருக்கும், கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    வாலிபர் போதையில் இருந்ததால் கண்டக்டரை திடீரென சரமாரியாக தாக்கினார். இதனால் கண்டக்டர் நிலை குலைந் தார். இதையடுத்து போதை வாலிபர் பஸ்சை விட்டு கீழே இறங்கினார். ரோட்டோரத்தில் கிடந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கண்டக்டர் தாக்கப்பட்டது குறித்து வடசேரி போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த இடம் தனது எல்லைக்குட்பட்ட பகுதி வராது என்றும், நேச மணி நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி என்று கூறினார்கள். உடனே நேசமணி நகர் போலீசார் அங்கு வந்தனர். அவர்களும் தங்களுக்கும் எல்லைபகுதி கிடையாது வடசேரி போலீஸ் நிலை யத்துக்குட்பட்ட பகுதி என்று கூறினார்கள்.

    வடசேரி, நேசமணிநகர் போலீசார் என எல்லை பிரச்சினை ஏற்பட்டது. ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததையடுத்து நேசமணி நகர் போலீசார் உடைக்கப்பட்ட பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போதை வாலிபர் தாக்குதலில் படுகாயம் அடைந்த கண்டக்டரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பஸ் கண்டக்டரை தாக்கி விட்டு தப்பி ஓடிய வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஓடும் பஸ்சில் கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பயணிகள் உயிர் தப்பினர்
    • போக்குவரத்து ஊழியர்கள் சரி செய்து அங்கு இருந்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு அரசு பஸ் 20 பயணிகளுடன் கோவளம் நோக்கி புறப்பட்டது. பஸ் நிலையத்தில் இருந்து வெளியே திரும்பும் போது "திடீர்"என்று ஏற்பட்ட எந்திர கோளாறு காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

    உடனே பஸ்சில் இருந்த 20 பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு பஸ்சில் இருந்து வெளியே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து பெரும் விபத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்றினர். அதன்பிறகு பழுதடைந்து நின்ற பஸ்சை போக்குவரத்து ஊழியர்கள் சரி செய்து அங்கு இருந்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்

    ×