அரசு பஸ் கவிழ்ந்து விபத்து; 7 பேர் படுகாயம்

அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 7 பேர் படுகாயமடைந்தனர்.
கவிழ்ந்து கிடக்கும் அரசு பஸ்.
கவிழ்ந்து கிடக்கும் அரசு பஸ்.
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூரில் தினமும் சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால் எப்போதுமே இந்த பஸ் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மேலூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் மேலூரை அடுத்துள்ள வஞ்சிநகரம் ஊராட்சியை சேர்ந்த நெல்லுகுண்டுபட்டி அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கண்மாய்க் கரையில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் ஜீவானந்தம், பயணிகள் சாந்தி,ராஜேஸ்வரி, பத்மா, பாணு உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி, தனிப்பிரிவு ஏட்டு விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு காய மடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் 108 ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com