என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நாகர்கோவிலில் அரசு பஸ்சை கல்வீசி உடைத்த போதை வாலிபர்
- கண்டக்டரை சரமாரியாக தாக்கினார்
- சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
நாகர்கோவில் :
திருச்செந்தூரில் இருந்து திங்கள்நகருக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. நள்ளிரவு 11.30 மணிக்கு பஸ் வடசேரி பஸ் நிலையத்தை வந்த டைந்தது.
இதையடுத்து பஸ் நிலை யத்தில் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். அப்போது கண்டக்டர் அவரிடம் டிக்கெட் கேட்ட போது வெட்டூர்ணிமடம் செல்லவேண்டும் என்று டிக்கெட் எடுத்துள்ளார். பஸ் நிலையத்திலிருந்து பஸ் புறப்பட்டு சென்றது. வெட்டூர்ணிமடம் பஸ் நிறுத்தத்தை விட்டு சிறிதுதூரம் தாண்டி பஸ் நிறுத்தப்பட்டதாக தெரி கிறது. இதனால் பஸ்சில் இருந்த வாலிபருக்கும், கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
வாலிபர் போதையில் இருந்ததால் கண்டக்டரை திடீரென சரமாரியாக தாக்கினார். இதனால் கண்டக்டர் நிலை குலைந் தார். இதையடுத்து போதை வாலிபர் பஸ்சை விட்டு கீழே இறங்கினார். ரோட்டோரத்தில் கிடந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கண்டக்டர் தாக்கப்பட்டது குறித்து வடசேரி போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த இடம் தனது எல்லைக்குட்பட்ட பகுதி வராது என்றும், நேச மணி நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி என்று கூறினார்கள். உடனே நேசமணி நகர் போலீசார் அங்கு வந்தனர். அவர்களும் தங்களுக்கும் எல்லைபகுதி கிடையாது வடசேரி போலீஸ் நிலை யத்துக்குட்பட்ட பகுதி என்று கூறினார்கள்.
வடசேரி, நேசமணிநகர் போலீசார் என எல்லை பிரச்சினை ஏற்பட்டது. ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததையடுத்து நேசமணி நகர் போலீசார் உடைக்கப்பட்ட பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போதை வாலிபர் தாக்குதலில் படுகாயம் அடைந்த கண்டக்டரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பஸ் கண்டக்டரை தாக்கி விட்டு தப்பி ஓடிய வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஓடும் பஸ்சில் கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்