என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சேலம் கோட்ட அரசு பஸ்களில் ரூ.11 கோடி வசூல்
- பாவளி பண்டிகையை யொட்டி கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- கடந்த ஆண்டை விட 1.33 லட்சம் கி.மீ.. கூடுதலாக இயக்கி 65.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைத்து பணியா ளர்களின் கூட்டு முயற்சியே இத்தகைய இலக்கை அடைய முடிந்தது
சேலம்:
சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-
தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அத்துடன் மாற்று பஸ்கள், வழித்தட பஸ்கள், தட நீட்டிப்பு, கூடுதல் நடைகளும் இயக்கப் பட்டன. இதன்மூலம் 4 நாட்களில் டவுன் பஸ்களில் 39 லட்சம் பயணிகள், புறநகர் பஸ்களில் 23 லட்சம் பயணிகள் என மொத்தம் 62 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
தினமும் சராசரியை விட டவுன் பஸ்களில் கூடுதலாக 45 ஆயிரம் பேர், புறநகர் பஸ்களில் 56 ஆயிரம் பேர் என மொத்தம் 1 லட்சத்து ஆயிரம் பேர் கூடுதலாக பயணித்து உள்ளனர். அவர்களுக்காக 39 லட்சம் கி.மீ. பஸ்கள் இயக்கப்பட்டு 11.03 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட 1.33 லட்சம் கி.மீ.. கூடுதலாக இயக்கி 65.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைத்து பணியா ளர்களின் கூட்டு முயற்சியே இத்தகைய இலக்கை அடைய முடிந்தது என அவர் அதில் கூறி உள்ளார்.