search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Badugayam"

    • இந்த சாலை அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியாகவே காணப்படும்.
    • போலீசார் சாலையை சீர்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பட்டுக்கோ ட்டை சாலையில் அரசு மருத்துவமனை எதிரில் ஒரு அரசு வங்கி மற்றும் தனியார் வங்கி மேலும் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் மற்றும் பல வகையான கடைகள் இயங்கி வருகிறது. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசு மருத்துவமனை சாலையிலே வாகனங்கள் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி யாகவே இருந்து வருகிறது.

    பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் ஸ்ரீமுகி (வயது 30). இவர் பேராவூரணி அண்ணா சிலை அருகில் உள்ள மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடையின் வேலையாக வங்கிக்கு சென்று வேலை யை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கடைக்கு புறப்படும் போது அரசு பேருந்து ஒன்று பட்டுக்கோ ட்டையிலிருந்து அந்த மருத்துவமனை சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வங்கி மற்றும் தனியார் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தியிரு ந்ததால் ஸ்ரீ முகி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சென்டர் மீடியனுக்கும் பேருந்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் ஸ்ரீமுகி படுகாயம் அடைந்தார்.

    இதைத் தொடர்ந்து பேருந்தை டிரைவர் உடனே நிறுத்தியுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்தப் பெண்ணை மீட்டு தனியார் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவ ரத்தை சரி செய்தனர்.

    பேராவூரணி நகர் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பு மற்றும் நடை பாதை ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தி மேலும் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • 7 பேர் படுகாயமடைந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் தினமும் சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால் எப்போதுமே இந்த பஸ் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மேலூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் மேலூரை அடுத்துள்ள வஞ்சிநகரம் ஊராட்சியை சேர்ந்த நெல்லுகுண்டுபட்டி அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள கண்மாய்க் கரையில் கவிழ்ந்தது. இதில் பஸ் டிரைவர் ஜீவானந்தம், பயணிகள் சாந்தி,ராஜேஸ்வரி, பத்மா, பாணு உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி, தனிப்பிரிவு ஏட்டு விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு காய மடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் 108 ஆம்புலன்சில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்று சென்ற பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
    • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புல்லகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் காளியப்பன். அதிமுக கிளை செயலாளரான இவரது ஏற்பாட்டில் நேற்று மதுரையில் நடந்த மாநாட்டிற்கு வேனில் கட்சியினர் சென்றனர். இரவு மாநாடு முடித்து விட்டு அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

    விருதுநகர் அருகே சூலக்கரை சாத்தூர் ரோட்டில் மருளுத்து பகுதியில் சென்ற போது அங்குள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் ஒரு கார் மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. இதை கவனிக்காத வேன் டிரைவர் கார் மீது பயங்கரமாக மோதினார்.

    இதில் வேனில் இருந்த புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த துளசியம்மாள் (75), ராஜம்மாள்(75), சுப்புலட்சுமி (57), சாரதா(37), கவிதா (37), ஜெயமணி (67), சீனிவாசன் (60), தாயம்மாள் (72), துரைராஜ் (72), சிபியோன் ராஜ் (18) ஆகிய 10 பேர் படுகாயமடைந்தனர்.

    இவர்கள் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கி டையில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான காரில் இருந்த 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்து விசாரித்த போது பணி ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்பட 2 பேர் விபத்தில் சிக்கி காய மடைந்திருப்பது தெரிய வந்தது.

    இந்த விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மணி தியாகதுருகத்தில் உள்ள தனியார் கடையில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார்.
    • பின்னால் வந்த அரசுபஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது .

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணி (வயது 20). இவர் தியாகதுருகத்தில் உள்ள தனியார் கடையில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று கடையி லிருந்து மோட்டார் சைக்கி ளை பெட்ரோல் போடுவதற்காக எடுத்துச் சென்றார். அப்போது பெட்ரோல் பங்க் எதிரே திரும்பிய போது அவருக்கு பின்னால் வந்த அரசுபஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது .

    இதில் படுகாயம் அடைந்த மணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக் குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது தாய் பாஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் தியாகதுருகம் அருகே பிரதிமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (49) மீது தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ்-சரக்கு வேன் மோதியதில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
    • சிலர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழசெல்வனூரில் இருந்து இன்று காலை விவசாய கூலி வேலைக்காக ஆட்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் சாயல்குடிக்கு புறப்பட்டது.

    அதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் நின்று கொண்டே பயணம் செய்தனர். கிழக்கு கடற்கரை சாலை மலட்டாறு அருகே வந்து கொண்டிருந்த போது சாயல்குடியில் இருந்து ராமநாதபுரம் சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சரக்கு வேன் மோதி பயங்கரமாக உரசியது.

    இந்த விபத்தில் சரக்கு வேனில் நின்று பயணம் செய்த கீழசெல்வனூரை சேர்ந்த முருகேசன் மனைவி பூமா (45), சோமு மனைவி ஞானசுந்தரி, ராஜலிங்கம் மனைவி முனியம்மாள், சண்முகம் மனைவி லட்சுமி, நாராயணன் மனைவி ஆபிதா ஆகிய 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதில் அவர்களுக்கு கைகளில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. சிலர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • வானூர் அருகே இன்று விபத்து வேன் கவிழ்ந்து 17 பெண் தொழிலாளர்கள் படுகாயம் நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • இந்த சாலை புதுவைக்கு வரக்கூடிய முக்கிய பகுதியாகும். வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆரோபுட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிஸ்கெட் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் வானூர், தைலாபுரம், திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக கம்பெனி வேன்கள் ஆட்களை ஏற்றி, இறக்கிவிட்டு சென்றுவருகிறது. அதன்படி இன்று காலை தைலாபுரத்தில் இருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று ஆரோபுட் நோக்கி வந்தது. இந்த வேனில் 18 பெண் தொழிலாளர்கள் இருந்தனர். வேனை டிரைவர் ராஜா ஓட்டினார்.  இந்த வேன் காட்ராம்பாக்கம் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக நின்ற வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த சாலை புதுவைக்கு வரக்கூடிய முக்கிய பகுதியாகும். வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 17 பேர் படுகாயத்துடன் அலறி துடித்தனர்.

    அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். தகவல் அறிந்த வானூர் மற்றும் ஆரோவில் போலீசார் அங்கு விரைந்து சென்று காயமடைந்த 17 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் விபத்தில் படுகாயம் அடைந்த பெண்களின் உறவினர்கள் ஒன்று திரண்டனர். காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் அங்கு விரைந்தனர். மறியல் செய்தவர்களு டன், இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    ×