தியாகதுருகத்தில் அரசு பஸ் மோதி மெக்கானிக் படுகாயம்

மணி தியாகதுருகத்தில் உள்ள தனியார் கடையில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். பின்னால் வந்த அரசுபஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது .
தியாகதுருகத்தில்  அரசு பஸ் மோதி மெக்கானிக் படுகாயம்
Published on

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை அருகே மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணி (வயது 20). இவர் தியாகதுருகத்தில் உள்ள தனியார் கடையில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று கடையி லிருந்து மோட்டார் சைக்கி ளை பெட்ரோல் போடுவதற்காக எடுத்துச் சென்றார். அப்போது பெட்ரோல் பங்க் எதிரே திரும்பிய போது அவருக்கு பின்னால் வந்த அரசுபஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது .

இதில் படுகாயம் அடைந்த மணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக் குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது தாய் பாஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவர் தியாகதுருகம் அருகே பிரதிமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (49) மீது தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com