search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபாயம்"

    • மதுரையில் சாலை விதிகளை பின்பற்றாத ஷேர் ஆட்டோக்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.
    • போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் பொது போக்குவரத்துக்கு அரசு பஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. மதுரை மாநகரில் மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் மாற்று போக்கு வரத்துக்கான தேவை அதிகளவில் உள்ளது. இதனால் பொது மக்கள் ஷேர் ஆட்டோக்களை அதிகளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஷேர் ஆட்டோக்களில் செல்வோர் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. நினைத்த இடத்தில் இறங்கிக் கொள்ளலாம் என்ற வசதி இருப்பதால் தான் பொதுமக்களும் ஷேர் ஆட்டோக்கள் நாடி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை நகரில் குறுகிய அளவிலான சாலைகளே அதிகளவில் உள்ளது. இதில் ஷேர் ஆட்டோக்கள் நடுவழியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் கடும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் உள்ளது.

    குறிப்பாக ஷேர் ஆட்டோக் களில் அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிகளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதை சர்வசாதாரணமாக காணலாம். போக்குவரத்து போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது யாரேனும் பயணி அழைத்தால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் எந்தவித சிக்னலும் இல்லாமல் நிறுத்தி அந்தப் பயணியை ஏற்றுகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மோதி விபத்தில் சிக்குவது நடக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் தட்டிக்கேட்டால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தகராறு செய்வதும் வாடிக்கையாக உள்ளது. அத்துடன் பல இடங்களில் பயணிகள் இறங்கிய பின்பு கூடுதல் கட்டணம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெரியார் பஸ் நிலையம், காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நிலையம், கீழவாசல், பைபாஸ் ரோடு, குரு தியேட்டர், தெற்குவாசல், காமராஜர் சாலை, பரவை உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தங்களி லேயே நெடுநேரம் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணி களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்கின்றனர்.

    மேலும் சாலை குறுகலாக உள்ள வில்லாபுரம், அவனியாபுரம் சிக்கந்தர் சாவடி, முடக்குசாலை, தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் போக்கு வரத்து கண்காணிப்பு மையங்களில் இருந்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தும், அறிவுறுத்தியும் அதனை கண்டு கொள்வதில்லை.

    தற்போது பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களில் இளம் வயதினரே டிரைவராக உள்ளனர். அவர்கள் விதி முறைகள் குறித்த எவ்வித அக்கறையோ, அச்சமோ இல்லாமல் தாறுமாறாக ஆட்டோக்களை இயக்குகின்றனர். மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக ஒருவரை ஒருவர் முந்திச் செல்கின்றனர்.

    அதிகளவில் பயணிகள் இருக்கும் போது ஆட்டோக்கள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் மிக்க காலை, மாலை வேளைகளில் ஷேர் ஆட்டோக்கள் சாலையை மறித்துச் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் சிறுவர்கள் ஷேர் ஆட்டோக்களை இயக்கி சவாரி செல்வதாக புகார் எழுந்துள்ளன. எனவே இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இளம் டிரைவர்களுக்கு போக்குவரத்து விதிகள், பயணிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது.
    • ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று செல்கிறது. இந்த பாலம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கடலூர் மாநகரத்திற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் கடலூர் செம்மண்டலம் மற்றும் கடலூர் ஜவான்பவன் சாலை வழியாக அனைத்து கனரக வாகனங்களும் இந்த பாலம் வழியாக தான் சென்று வருகின்றது. இதன் காரணமாக இவ்வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த பாலமானது கம்மியம்பேட்டை பாலத்தின் இருபுறமும் விபத்து ஏற்படாத வகையில் சிமெண்ட் தடுப்பு கட்டைகள் அமைத்து இருந்தன.

    ஆனால் தற்போது சிமெண்ட் கட்டைகள் பெயர்ந்து வருகின்றது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிகமான அதிர்வுகள் ஏற்படுவதால் சிமெண்ட் காரைகள் சாலையில் விழுந்தும், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது. இதனால் ெபரிய அளவிலான விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், சமூக அலுவலர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பெரிய அளவிளான சேதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் இதில் தலையிட்டு பாலத்தின் சிமெண்ட் தடுப்பு கட்டைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • கழிவு நீர் ரோட்டில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் கொசு உற்பத்தியாகிறது.
    • பலருக்கு மலேரியா போன்ற மற்றும் தொற்று நோய் ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிபாளையம் கிராமத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்ப ங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் விவசாயிகள். வண்டிபாளையம் கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் வசிப்ப வர்கள் தினந்தோறும் விளைநிலத்திற்கு செல்வது வழக்கம் அந்த பகுதி விநாயகர் கோவில் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் இல்லை. எனவே கழிவு நீர் ரோட்டில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் கொசு உற்பத்தியாகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் பலருக்கு மலேரியா போன்ற மற்றும் தொற்று நோய் ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறார்கள். எனவே மரக்காணம் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக அந்த பகுதியை சீரமைக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பெருமளவில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது.
    • இந்த நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பெருமளவில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர்,மகேஸ்வரி ஆகியோரிடம் ஈகார் கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி நகராட்சி சார்பாக இன்று காலை முதல் தெருகளில் சுற்றி திரிந்த 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை உயிருடன் பிடித்து அருகிலிருந்த வனத்துறைக்கு சொந்தமான சமூக காட்டில் விட்டனர் இந்த நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
    • அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகிறார்கள்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மொன்னையன் பேட்டை கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.அந்த சாலை பள்ளம் மேடாக இருப்பதால் சாக்கடை நீர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாக அங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒரு சிலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் தெரிகிறது.

    மேலும், அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டி களும் அவதிக்குள்ளாகி றார்கள். இது தொடர்பாக அங்கு வசிப்பவர்கள் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் வாய்க்காலை சிரமைத்து சாலையில் சாக்கடை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளம் மேடாக உள்ள சாலையை புதுப்பித்து தர வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கின்றன.
    • உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இந்த ஆபத்தான மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த மெதூர் துணை மின் நிலையத்தில் இருந்து அச்சிரம்பள்ளம் கிராமத்திற்கு உயர்அழுத்த மின்கம்பம் செல்கிறது.

    இந்தநிலையில் அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கின்றன.தாவிப்பிடித்தால் எட்டும் உயரத்தில் இருப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இந்த ஆபத்தான மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லவே அச்சம் அடைந்து வருகிறோம்.

    சிறுவர்கள் குளத்தில் குளிக்க செல்லும் போது விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் இந்த தாழ்வான மின் கம்பியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தேங்கி கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி முதல் நிலை ஊராட்சியில் மதுரை சாலையில் குடிநீர் குழாய் அருகே திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படு வதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய் அருகே கொட்டப்படும் குப்பைக ளால் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி பொது மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுகிறது. எனவே உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதோடு இதுபோன்று திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையத்தில்வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது.
    • இதனால்,பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையம் மின்சார அலுவலக வீதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இங்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

    இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும். வாய்க்கால்களில் சாக்கடை நீர் தங்கு தடையின்றி செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

    • கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
    • தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் 100-க்கண க்கான வாகனங்கள் மூலமாக பல்வேறு பொரு ட்கள் கொண்டு வரப்பட்டு, கடைகளில் பொருட்களை ஏற்றி, இறக்கி வருகின்றனர் கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர்.  4 மணி நேரமும் வாகனங்கள் மூலம் பொருட்கள் கொண்டுவரும் நிலையில் பணம் வசூலிக்கும் வாலிபர்கள் வாகன டிரைவர்களிடம் சீட்டு வழங்கி அதற்கான கட்டண தொகை வசூல் செய்கின்றனர். கட்டணம் வசூல் செய்யும் வாலிபர்கள் அடாவடியாக வாகன ஓட்டுனர் மற்றும் கடை உரிமையாளர்களிடம் பணம் வசூல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அடா வடியாக வசூல் செய்யும் வாலிபர்களிடம் ஏன்? இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள், பணம் கேட்டால் கண்டிப்பாக வழங்கப்படும். ஆனால் சில நேரங்களில் வேலை பளு காரணமாக சில நிமிடங்கள் காலதாமதமானால் இது போன்ற அடாவடியாக வசூல் செய்வதால் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் தொ டர்ந்து அடாவடிப்போக்கில் கட்டண வசூல் செய்வதால் நாளடைவில் பெரிய அளவிலான சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினருக்குள் வாக்குவாதம் ஏற்படும் சமயத்தில் தகராறாக மாறி கடும் பாதிப்பை ஏற்படும் நிலையும் உருவாக்கி வருகின்றது. இது சம்பந்தமாக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தனி கவனம் செலுத்தி, கட்டணம் வசூல் செய்யும் நபர்களிடம் ஒழுங்கான முறையில் பணம் வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்களும் வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும், இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து அதிகரித்தால் வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப் பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும் நிலை ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
    • கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது.

    ஊட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்களுக்கு வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் ஊட்டி நகரையே பலமுறை சுற்றி வரும் நிலையே காணப்படுகிறது.

    இந்த நிலையில் கோடப்பமந்து கால்வாயின் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி முடிந்த பின்பும், பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் அந்த சாலையில் வாகனங்களை நிறுத்த முடியாமலும், வாகனங்கள் செல்வதற்கும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுத்து அங்கு இருக்கும் கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையை மறித்து சினிமா பேனர்கள் வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேருந்து நிலைய மேம்பாலம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில், சாலையை மறித்து சினிமா பேனர்களை வைத்துள்ளனர்.

    இதனால் அவ்வழியே செல்பவர்கள் போஸ்டரை பார்த்து செல்லும் சமயத்தில் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்தும், நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் மோதும் அபாயமும் உள்ளது.

    அப்பகுதியில் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கடைக்காரர்கள், சினிமா தியேட்டர் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், அதில் சாலையை மறித்து சினிமா பேனர்கள் வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் அருகிலேயே நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் காவேரிப்பட்டினம் ஒன்றிய அலுவலகம் உள்ளது. ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    உடனடியாக இந்த பேனர்களை அகற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குமாரபாளையத்தில் மரம் சாய்ந்து விழும் அபாயத்தால் அதனை அகற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதி இடைப்பாடி சாலையில் பாலம் அருகே உள்ள பேக்கரி முன்பாக உள்ள பழைய மரம் ஒன்று பிடிமானம் இல்லாமல் எந்நேரமும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக, அந்த மரத்தை அகற்ற வேண்டி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து ஊர்க் கவுண்டர் இளங்கோ கூறியதாவது:

    குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் பட்டுப்போன மரம் ஒன்று சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகளுடன் வீட்டில் இருக்கவே அஞ்சும் நிலை உள்ளது.

    பேக்கரி முன்பு இந்த மரம் உள்ளதால் அதிக பொதுமக்கள் இங்கு வந்து செல்லும் போது மரம் சாய்ந்தால் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பேக்கரி கடை மீது மரம் சாய்ந்தாலும் பல ஆயிரம் மதிப்பிலான பொருள் இழப்பும் ஏற்படும். அனைத்து வகையிலும் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை குமாரபாளையம் நகராட்சி நிர்வாகத்தினர் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×