search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர் அழுத்த மின்கம்பி"

    • அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கின்றன.
    • உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இந்த ஆபத்தான மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த மெதூர் துணை மின் நிலையத்தில் இருந்து அச்சிரம்பள்ளம் கிராமத்திற்கு உயர்அழுத்த மின்கம்பம் செல்கிறது.

    இந்தநிலையில் அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கின்றன.தாவிப்பிடித்தால் எட்டும் உயரத்தில் இருப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இந்த ஆபத்தான மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லவே அச்சம் அடைந்து வருகிறோம்.

    சிறுவர்கள் குளத்தில் குளிக்க செல்லும் போது விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் இந்த தாழ்வான மின் கம்பியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கடலூரில் பரபரப்பு சாலையில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பி பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள்.
    • மின்கம்பி அறுந்து விழுந்த இடத்தில் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் நகரத்தின் மையப் பகுதியாக மஞ்சகுப்பம் நேதாஜி சாலை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்களும் நடை பாதைசாரிகளும் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் ஒரு தனியார் கடை உள்ளது. இக்கடையின் கட்டிடம் மீது உயரத்தில் விளம்பரப் பலகை இருந்ததால் மாநகராட்சி ஊழியர்கள் விபத்து ஏற்படும் அபாயம் கருதி உடனடியாக அகற்ற வேண்டும் என கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.

    அதன் பேரில் இன்று காலை கட்டிடத்தின் மேலே இருந்த விளம்பர பலகையை கடை ஊழியர்கள் அகற்ற முயற்சி செய்தனர். அப்போது எதிர்பாராமல் விளம்பரப்பலகை உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்தது. இதன் காரணமாக மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது பொதுமக்கள் இதனை பார்த்து அலறி அடித்து ஓடினார்கள். மேலும் மின்கம்பி அறுந்து விழுந்த இடத்தில் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தை மீது விழாமல் அருகாமையில் விழுந்ததால் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    பின்னர் மின்சாரத்துறை உதவி பொறியாளர் (பொறுப்பு) கணேசன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×