search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்னிபாத்"

    • வன்முறையால் 12 ரெயில்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.
    • அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    பாட்னா:

    ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையானது.

    குறிப்பாக பீகார் மாநிலத்தில்தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற வன்முறையால் 12 ரெயில்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதை அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராணுவத்தில் குறுகியகால ஆள் சேர்ப்பு திட்டம் நாட்டின் இளைஞர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்த திட்டத்துக்கு எதிராக தெருக்களில் போராட்டம் நடத்துபவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சூரக் பஸ்வான் கூறும்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று இன்று கவர்னரை சந்தித்து அன்கினிபத் திட்டத்தை திரும்ப பெற கோரி மனு கொடுக்க உள்ளோம். அக்னிபத் திட்டம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும். இது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கும் என்றார்.

    • நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • ரெயில் நிலைய உள்புறமும், வெளிபுறமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை:

    மத்திய அரசின் அக்னிபத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பீகார் மாநிலம் சமஸ்திபூரில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர்.தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையத்திலும் ரெயில் பெட்டிகளுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவை மாவட்டத்திலும் நேற்று முதல் பல்வேறு அமைப்பினர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவையில் ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளதால் யாரும் கலவரத்தில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதால் கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ரெயில்வே இன்ஸ்பெக்டர் தலைமையில் 10க்கும் அதிகமான போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் அனைவரையும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். நுழைவு வாயில் முன்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலைய உள்புறமும், வெளிபுறமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசினார்.
    • சனாதன தர்மபடி பொருளாதாரம், அரசியலில் நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிழ்ச்சிகளில் கலந்துகொள்ள 2 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி. சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார்.

    விமான நிலையத்தில் அவரை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். பின்னர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு சென்ற கவர்னர் அங்கு நடைபெற்ற வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசினார்.

    விழாவில் வ.உ.சி. குறித்த புத்தகத்தை கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    அக்னிபாத் திட்டம் முக்கியமான திட்டம். 4 வருட பணியினால் ஒழுக்கம் மிக்கவர்களாக மாறுவார்கள். சனாதன தர்மபடி பொருளாதாரம், அரசியலில் நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. விரைவில் உலகத்திற்கே வழிகாட்டியாக இந்தியா விளங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    விவேகானந்தா கேந்திரா சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற சோகோ கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தஞ்சை ராமகிருஷ்ணா மடத்தலைவர் சுவாமி விமூர்தானந்தா, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர துணைத்தலைவர் நிவேதிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் 1 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் நெல்லை வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகை வந்தார். அங்கு மாலை 3.30 மணி வரை ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தென்காசி மாவட்டம் செல்கிறார். கடையம் அருகே கோவிந்தபேரியில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினரும், சோகோ டெக்னாலஜிஸ் நிறுவனரு மான ஸ்ரீதர்வேம்புவை சந்தித்து பேசுகிறார்.

    அதன் பிறகு அருகில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் வளாகத்தில் கிராம மக்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு குற்றாலம் செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி இரவில் அங்குள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

    கவர்னர் வருகையையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பீகார் மாநிலத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முைறயில் ஈடுபட்டுள்ளனர்.
    • நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    பாட்னா:

    ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையானது.

    குறிப்பாக பீகார் மாநிலத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் வன்முைறயில் ஈடுபட்டுள்ளனர்.

    பீகார், உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் போராட்டம் பரவி உள்ளது.

    நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. தெலுங்கானாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். போராட்டம் காரணமாக 340-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை பாதிக்கப்பட் டது. 234 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது.

    இந்த போராட்டம் இன்று 4-வது நாளாக வட மாநிலங்களில் நீடித்தது.

    இந்த நிலையில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகில இந்தி மாணவர்கள் அமைப்பு 24 மணி நேர பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த முழு அடைப்பின் போது பீகாரில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இன்று காலை போராட்டக்காரர்கள் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை தீவைத்து எரித்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதே போல போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பீகாரில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    ஜெகனாபாத்தில் போலீஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அங்கு போலீசார் மீதும் கல்வீச்சும் நடந்தது. இந்த முழு அடைப்பு காரணமாக கயா, புக்சர், ஜெகனாபாத் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 12 மாவட்டங்களில் இணைய தள சேவை முடக்கப்பட்டு இருந்தது. முன்கர் பகுதியில் மாணவர்கள் டயர்களை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதை அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் ஜெகதானந்த் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'ராணுவத்தில் குறுகியகால ஆள் சேர்ப்பு திட்டம் நாட்டின் இளைஞர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்த திட்டத்துக்கு எதிராக தெருக்களில் போராட்டம் நடத்துபவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராஜ் பஸ்வான் கூறும்போது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று இன்று கவர்னரை சந்தித்து அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற கோரி மனு கொடுக்க உள்ளோம். அக்னிபாத் திட்டம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கும். இது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கும் என்றார்.

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்றைய போராட்டத்தின் போது ரெயில் நிலையம் சூறையாடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இதே போல அரியானாவில் 15 பேர் கைதாகி உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஜவுன்பூரில் போராட் டக்காரர்கள் பஸ்கள் மற்றும் போலீஸ் வேன்களை தாக்கி தீ வைத்து எரித்தனர்.

    பஞ்சாப் மாநிலத்திலும் இன்று வன்முறை பரவியது. லுதியானாவில் ரெயில் நிலையத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கினார்கள். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    • அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
    • நாடு முழுவதும் சுமார் 220 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    மத்திய அரசு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு பணியில் சேர்த்துக் கொள்ளும் 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

    இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஓய்வூதியம் கிடைக்காது. சலுகைகள் ரத்தாகும் என்று ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் கருதுகிறார்கள்.

    பீகார் மாநிலத்தில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மளமளவென மற்ற மாநிங்களுக்கும் பரவியது.

    போராட்டத்தால் வன்முறை ஏற்பட்டது. இளைஞர்கள் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். இன்று 4-வது நாளாக பல்வேறு மாநிலங்களிலும் வன்முறை நீடித்தது.

    அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று மேலும் சில ரெயில்கள் தாக்குதலுக்குள்ளானது.

    தீ வைக்கப்பட்ட 12 ரெயில்களில் சுமார் 60 ரெயில் பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகிவிட் டன. நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதம் அடைந்துவிட்டன. இதையடுத்து நாடு முழுவதும் சுமார் 220 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இளைஞர்கள் நடத்தி வரும் வன்முறை சம்பவங்களால் ரெயில்கள் மட்டுமின்றி இன்று காலை பீகார் உள்பட சில மாநிலங்களில் லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டன.

    இதன் காரணமாக ரூ.170 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரெயில்கள் ரத்து காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    • மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • வடமாநிலங்களில் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் கல்வீச்சு.

    புதுடெல்லி:

    அக்னிபாத் ராணுவ திட்டத்துக்கு பீகார் மாநிலத்தில் தான் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு அது பக்கத்து மாநிலங்களிலும் பரவியது.

    கடந்த 3 நாட்களாக வட மாநிலங்களில் அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்தது. இன்று 4-வது நாளாக போராட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

    15 மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் இன்று ஏராளமான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைமை செயலகம் அருகே அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வடமாநிலங்களில் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க முற்பட்ட போது போலீசார் ஒருவர் பலியா னார். இந்த நிலையில் பீகாரில் நேற்று ஒரு ரெயிலுக்கு தீவைக்கப்பட்ட போது ரெயில் பெட்டிக்குள் ஒரு பயணி சிக்கிக் கொண் டார்.

    புகை மூட்டத்துக்குள் இருந்து தப்ப முடியாத அவர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். 40 வயதான அவர் சிறிதுநேரத்தில் அந்த ரெயில் பெட்டுக்குள்ளேயே உயிரிழந்தார்.

    இதனால் போராட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந் துள்ளது.

    • அக்னிபாத் திட்டத்தை ஒத்திவைத்து விட்டு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.
    • தரம், செயல் திறன் மற்றும் பொருளாதாரம் ஆகிய 3 விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

    சென்னை:

    மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அக்னிபாத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஆபத்தானது என்று இளைஞர்கள் அஞ்சுவதால் தான் தன்னெழுச்சியோடு இன்றைக்குத் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    எனவே, அக்னிபாத் திட்டத்தை ஒத்திவைத்து விட்டு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். தரம், செயல் திறன் மற்றும் பொருளாதாரம் ஆகிய 3 விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்யாமல், தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தாக்குதலில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதையே அக்னிபாத் திட்டம் வெளிப்படுத்துகிறது.

    இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள். அவர்கள் எதிர்காலம் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலை வாய்ப்பின்றி அல்லாடும் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் 'அக்னிபாத்' என்னும் திட்டத்தை மோடி அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    'அக்னிபாத்' என்ற மோசடி திட்டத்தை உடனடியாக மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல எஞ்சியுள்ள இந்த இரண்டு ஆண்டுகளிலாவது ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வர வேண்டும்.

    அக்னிபாத் என்னும் இந்து விரோத-வெகுமக்கள் விரோத ஆளெடுப்புத் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், பிற மாநிலங்களிலும் இந்தக் கிளர்ச்சி மாபெரும் புரட்சியாக வெடிப்பதை எவராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்டம் தொடர்பான நிலை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்
    • தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் அக்னிபாத் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்

    புதுடெல்லி:

    ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ககும் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். ரெயில்களுக்கு தீ வைப்பு, ரெயில் நிலையங்கள் சூறை என பல்வேறு போராட்டங்களால் ரெயில் சேவைகள் முடங்கி போய் உள்ளன.

    இந்நிலையில், வன்முறை போராட்டங்களை விசாரிப்தற்கு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டம் மற்றும், வன்முறையால் ரெயில்வே சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கும்படி, மத்திய அரசு, உத்தர பிரதேசம், தெலுங்கானா, பீகார், அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருக்கிறார். 


    அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம்

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம்

    போராட்டம் தொடர்பான நிலை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

    மேலும், அக்னிபாத் திட்டமானது, தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் விஷால் திவாரி தனது மனுவில் கூறி உள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அக்னிபாத்துக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நாளை சத்யாகிரக போராட்டத்தை நடத்துகிறது.
    • ஜந்தர்மந்தரில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் புதிய திட்டமான அக்னிபாத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    4 ஆண்டுக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணி என்ற இந்த திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

    இந்த நிலையில் அக்னிபாத்துக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நாளை சத்யாகிரக போராட்டத்தை நடத்துகிறது.

    ஜந்தர்மந்தரில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் கூறும்போது, "அக்னிபாத் திட்டம் நாட்டின் இளைஞர்களை கோபப்படுத்தியதால் அவர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே காங்கிரஸ் கட்சி சத்யாகிரக போராட்ட முடிவை எடுத்துள்ளது" என்றார்.

    • திருப்பூர் ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.

    திருப்பூர்:

    இந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய 'அக்னிபாத்' ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.

    இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

    4 ஆண்டு கால சேவை முடிந்த பின் அக்னி வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். அரசின் அக்னிபாத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பீகார் மாநிலம் சமஸ்திபூரில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையத்திலும் ரெயில் பெட்டிகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பூர் ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.

    திருப்பூரில் பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பதால் கலவரத்தில் யாரும் ஈடுபட முயற்சி செய்துவிட கூடாது என்பதால் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்திற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட பயணிகளை முழுமையாக சோதனை செய்த பின்னர் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

    ரெயில் நிலைய நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒவ்வொருவராக உள்ளே செல்லும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ரெயில் நிலையம் உள்புறமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் வடக்கு போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ரெயில்கள் தாக்கப்பட்டதால் பல ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஒருவர் காயம் அடைந்தார்.
    • பீகாரில் உள்ள ஜகான பாத், பக்சர், கதிகார், போஜ்பூர், கைமூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பாட்னா:

    ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் "அக்னிபாத்" திட்டத்தை பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார்.

    இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் வீரர்களில் பெரும்பாலானோருக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்டாய ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடையாது.

    இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பீகாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் நேற்று முன்தினத்தில் இருந்து போராட்டத்தில குதித்தனர்.

    மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது. நேற்று பெரும்பாலான இடங்களில் இளைஞர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

    பீகாரில் இளைஞர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது. அவர்கள் ரெயில்களுக்கு தீ வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பஸ்கள் மீது கல் வீசப்பட்டது. டயர்களை தீ வைத்து கொளுத்தினர். போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது.

    ரெயில்கள் தாக்கப்பட்டதால் பல ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஒருவர் காயம் அடைந்தார்.

    பீகாரில் உள்ள ஜகான பாத், பக்சர், கதிகார், போஜ்பூர், கைமூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் பொதுமக்கள் காயம் அடைந்தனர். உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, ஜம்மு உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டம் நடந்தது.

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. இன்றும் பல இடங்களில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

    இன்று மேலும் 4 ரெயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

    பீகார் மாநிலம் லக்கிசராய் ரெயில் நிலையத்தில் இளைஞர்கள் ஜம்முதாவி-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீ வைத்தனர். அந்த ரெயிலின் 2 பெட்டிக்கு கும்பல் தீ வைத்தது. இதில் தீ மளமளவென்று பரவியது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

    இதே போல் சமாஸ்டிபூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சம்பர்க்கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை தீ வைத்தனர்.

    இதேபோல ஆரா பகுதியில் உள்ள குகாதியா ரெயில் நிலையத்திலும் ஒரு ரெயிலுக்கு தீவைக்கப்பட்டது. பீகாரில் 3 ரெயில்களில் 20 பெட்டிகளுக்கு வன்முறை கும்பல் தீ வைத்தது.

    வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டம் தென் மாநிலங்களுக்கும் பரவியது. அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானாவில் இன்று ரெயிலுக்கு தீவைக்கப்பட்டது.

    செகந்திராபாத் ரெயில் நிலையத்துக்குள் மிகப்பெரிய கும்பல் நுழைந்தது. அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு ரெயில் நிலையத்தை அடித்து உடைத்து சூறையாடினார்கள்.

    ரெயில் நிலையத்தில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கினார்கள். பின்னர் அங்கு நின்ற பயணிகள் ரெயிலின் பார்சல் பெட்டிக்கு தீவைத்தனர்.

    பீகாரில் உள்ள பிகியா ரெயில் நிலையத்தில் ஏராளமானவர்கள் திரண்டு வந்து ரெயில்களை மறித்தனர். இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 2 ரெயில்வே ஊழியர்கள் காயம் அடைந்தனர். இதே போல் பீகாரின் பல நகரங்களிலும் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்தினுள் நுழைந்தனர்.

    பீகார் மாநில துணை முதல்-மந்திரி ரேணு தேவியின் வீடு பெட்டியா நகரில் உள்ளது. அவரது வீடு மீது தாக்குதல் நடந்தது. ஏராளமான இளைஞர்கள் திரண்டு அவரது வீட்டை அடித்து நொறுக்கினார்கள்.

    இதுதொடர்பாக துணை முதல்-மந்திரி ரேணுதேவி மகன் கூறும்போது, 'எங்களது வீடு பெட்டியாவில் உள்ளது. இந்த வீடு கடுமையாக சேதம் அடைந்தது. அவர் (ரேணு தேவி) தற்போது பாட்னாவில் உள்ளார்' என்றார்.

    இதேபோல பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகளும் தாக்கப்பட்டன.

    இதே போல பா.ஜனதா ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இன்று போராட்டம் நீடித்தது.

    உத்தரபிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்துக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அந்த கும்பல் ரெயில் நிலையத்தை அடித்து உடைத்து சூறையாடியது. அங்கு நின்ற ரெயிலையும் அவர் தாக்கினார்கள்.

    சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் ரெயில் நிலையத்தை சூறையாடி விட்டு சென்றது.

    ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாலையில் இருந்தே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பஸ்களை கல்வீசி தாக்கினார்கள். இதில் பஸ்கள் சேதம் அடைந்தன.

    அரியானா மாநிலம் பில்வால் மாவட்டத்தில் ஏற்பட்ட போராட்டம் வன்முறையானது. அதிக அளவில் கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த வன்முறை காரணமாக உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் சில இடங்களில் இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துப்பாக்கி சூட்டில் 8 பேர் காயமடைந்த நிலையில், சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
    • கலவர கும்பல் கல்வீசியதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இன்று போராட்டக்காரர்கள் ரெயிலுக்கு தீ வைத்தனர்.

    வன்முறை கும்பலை கலைக்க போலீசார் 15 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர்.

    அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. கலவர கும்பல் கல்வீசியதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

    ×