என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

அக்னிபாத்துக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை போராட்டம்

- அக்னிபாத்துக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நாளை சத்யாகிரக போராட்டத்தை நடத்துகிறது.
- ஜந்தர்மந்தரில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
புதுடெல்லி:
ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் புதிய திட்டமான அக்னிபாத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
4 ஆண்டுக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணி என்ற இந்த திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் அக்னிபாத்துக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நாளை சத்யாகிரக போராட்டத்தை நடத்துகிறது.
ஜந்தர்மந்தரில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் கூறும்போது, "அக்னிபாத் திட்டம் நாட்டின் இளைஞர்களை கோபப்படுத்தியதால் அவர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே காங்கிரஸ் கட்சி சத்யாகிரக போராட்ட முடிவை எடுத்துள்ளது" என்றார்.