search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agnipath"

    • ராணுவத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் அக்னி வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
    • அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    புதுடெல்லி:

    இந்திய ராணுவத்தில் தற்காலிகமாக பணியாற்ற வழிவகை செய்யும் அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள். ராணுவத்தில் இருந்து வெளியேறும்போது ரூ.11 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

    ஆண்டுக்கு 50 ஆயிரம் அக்னி வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்த அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினர் பயிற்சியை தொடங்க உள்ளனர்.

    இந்நிலையில், அக்னிபாத் வீரர்கள் முதல் குழுவினர் மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறுகையில், நமது ஆயுதப்படையை வலுப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை தயார் செய்யவும், இந்த முன்னோடி கொள்கை முக்கியத்துவம் பெற்று விளங்கும். இளைய அக்னி வீரர்கள் ஆயுதப்படையை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் ஆக்குவார்கள் என தெரிவித்தார்.

    • இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவில் இருந்து தொடங்க உள்ளது.
    • 17 ½ வயதில் இருந்து 22 வயது வரை உள்ள இளைஞர்கள் அக்னி பத் திட்டம் மூலம் கலந்து கொள்ள உள்ளனர்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அணைபுதூர் டீ-பப்ளிக் பள்ளியில் அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் இன்று நள்ளிரவில் இருந்து தொடங்க உள்ளது.

    இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில்நுட்ப பணி, கிளர்க்,ஸ்டோர் கீப்பர்உள்ளிட்ட பதவிகளுக்கு 17 ½ வயதில் இருந்து 22 வயது வரை உள்ள இளைஞர்கள் அக்னி பத் திட்டம் மூலம் கலந்து கொள்ள உள்ளனர்.

    நாளை தொடங்கி வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் கோவை,ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல்,மதுரை,தேனி ,நீலகிரி,நாமக்கல்,தர்மபுரி கிருஷ்ணகிரி, சேலம் என 11 மாவட்டங்களில் இருந்து தினமும் 3 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அவிநாசி வட்டாட்சியர் ராஜேஷ் முகாம் இறுதி கட்டப்பணிகளை ஆய்வு செய்தார். முகாம் நடைபெறும் இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    • வேலூர் காவல் பணி சேர்ப்பு பள்ளியில் 27ந்தேதி முதல் 29 வரை முகாம்.
    • இணைய தளம் வழியாக விண்ணப்பிப்போர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பெண்கள் சேர்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து இந்திய ராணுவத்திற்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர் பணியில் பெண்களை சேர்ப்பதற்கான ஆள் தேர்வு முகாம் வேலூரில் உள்ள காவல் பணிசேர்ப்பு பள்ளியில் வரும் 27ந்தேதி தொடங்கி 29ந்தேதிவரை நடைபெற உள்ளது.

    இணைய தளம் வழியாக விண்ணப்பிப்போர் மட்டுமே முகாமில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். நவம்பர் 1, 2022 முதல் அனுமதி அட்டைகள் இணைய வழியாக வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்வதற்கான தேதி அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும். நவம்பர் 1ந்தேதிககு பிறகு www.joinindianarmy.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பதாரர் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பு நடைமுறை முழுவதும் நேர்மையானதாக வெளிப்படைத் தன்மையானதாக இருக்கும். முறைகேடுகளில் ஈடுபடுவதை விண்ணப்பதாரர்கள் தவிர்க்க வேண்டும். கடின உழைப்பு மற்றும் தயார்நிலை ஆகிய தகுதியின் அடிப்படையே உங்களுடைய தேர்வினை உறுதி செய்யும்.

    விண்ணப்பதாரர்கள் ஆட்கள் தேர்வு செய்வது தொடர்பான தங்களுடைய சந்தேகங்களை, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தை 044-25674924 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
    • இத்திட்டத்தை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    புதுடெல்லி:

    அக்னிபாத் திட்டம் குறித்த பிரதமரின் புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

    ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அதில் வெறும் 3,000 பேருக்குத்தான் அரசு வேலை கிடைக்கிறது. 4 வருடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் ஆயிரக்கணக்கான அக்னி வீரர்களின் எதிர்காலம் என்ன?

    பிரதமரின் இந்த புதிய ஆராய்ச்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

    • அக்னிபாத் வீரர்களுக்கு எதிர்காலம் இருக்குமா? என வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.
    • அதற்கு மத்திய பாதுகாப்பு இணை மந்திரி அஜய் பட் கொடுத்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

    மதுரை

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அக்னிபாத் இளைஞர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ள விரும்பினேன். நாடாளுமன்றத்தில் 'முன்னாள் ராணுவத்தினருக்கு எத்தனை சதவீதம் மறு வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது? அரசு பணியிடங்களில் மறு வேலை வாய்ப்பு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் எத்தனை சதவீதம் உள்ளனர்?" என்று கேள்வி எழுப்பினேன்.

    அதற்கு மத்திய பாதுகாப்பு இணை மந்திரி அஜய் பட் கொடுத்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

    மத்திய அஞ்சல் சேவை, ஆயுதப் படையில் குரூப் "சி''- 10 சதவீதம், குரூப் டி-20 சதவீதம், மத்திய ஆயுதப் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் வரை நேரடி நியமனங்களில் 10 சதவீதம், மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகளில் குரூப் சி - 14.5 சதவீதம், குரூப் டி - 24.5 சதவீதம் என்ற அளவில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    இதன் அடிப்படையில் 2014-ம் ஆண்டு - 2322 பேர், 2015-ல் 10,982 பேர், 2016-ல் 9086 பேர், 2017-ல் 5638 பேர், 2018-ல் 4175 பேர், 2019-ல் 2968 பேர், 2020-ல் 2584 பேர், 2021-ல் 2983 பேர் என்று முன்னாள் ராணுவத்தினர் பணி நியமனம் பெற்று உள்ளனர்.

    குறிப்பாக 2015, 2016 ஆகிய 2 ஆண்டுகளில் கிடைத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கையோடு, 2017 - 2021 ஆகிய 5 ஆண்டுகளின் விவரங்களை ஒப்பிடும் போது பெரும் சரிவு தென்படுகிறது. கடந்த 2015-களில் 10 ஆயிரத்தை தாண்டி இருந்த வேலை வாய்ப்புகள், 2019- 2021க்கு இடைப்பட்ட 3 ஆண்டுகளில் தலா 3 ஆயிரத்தை கூட தாண்டவில்லை.

    அரசு நிர்ணயித்த இடஒதுக்கீடு எவ்வளவு சதவீதம் நிரப்பப்பட்டு உள்ளது? என்று பார்த்தால், அந்த தகவல்கள் அதிர்ச்சியின் உச்சமாக உள்ளது.

    மத்திய சிவில் சேவைகள்-அஞ்சல் துறையில் குரூப் சி-1.39 சதவீதம், குரூப் டி-2.77 சதவீதம், மத்திய பொது நிறுவனங்களில் குரூப் சி-1.14 சதவீதம், குரூப் டி- 0.37 சதவீதம், பொதுத் துறை வங்கிகளில் குரூப் சி - 9.10 சதவீதம், குரூப் டி-21.34 சதவீதம், மத்திய ஆயுதப் படையில் குரூப் "ஏ"-2.20 சதவீதம், குரூப் "பி"-0.87 சதவீதம், குரூப் "சி"-0.47 சதவீதம், குரூப் "டி"-0.00 சதவீதம் என்று உள்ளது.

    அரசு வங்கிகள் தவிர மற்ற இடங்களில் முன்னாள் ராணுவத்தினரின் அதிகபட்ச சதவீதம் 3 கூட தாண்டவில்லை. ஜீரோ சதவீதமாக உள்ளது. ஏற்கெனவே உள்ள முன்னாள் ராணுவத்தினர் நிலை இப்படித்தான் உள்ளது. மறு வேலை வாய்ப்பு இல்லை.

    ராணுவப் பணியின் கடைசி ஊதியம், புதிய பணி நியமனத்தில் பாதுகாக்கப்படுவது இல்லை. 20 ஆண்டு ராணுவப்பணி முடித்து வந்தவர்களின் நிகழ்கால கதியே இது என்றால் 4 ஆண்டு ஒப்பந்த அக்னிபாத் வீரர்கள் எதிர்காலம்தான் என்ன?

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அக்னிவீரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்
    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்

    புதுடெல்லி:

    சிஆர்பிஎப், பிஎஸ்எப் போன்ற மத்திய ஆயுதக் காவல் படைகளில், அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டம் தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் மாநிலங்களவையில் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.

    'மத்திய ஆயுத காவல் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் கான்ஸ்டபிள்கள் (பொதுப் பணி) மற்றும் ரைபிள்மேன் பதவிக்கான ஆட்சேர்ப்பில், முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் தளர்வு மற்றும் உடல் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்' என்று மத்திய மந்திரி நித்யானந்த ராய் கூறினார்.

    ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் 17 மற்றும் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களை பணியமர்த்தும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு ஜூன் 14ம் தேதி வெளியிட்டது. 4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் இந்த பணியாளர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிந்த பிறகு, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 25 சதவீதம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

    இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்திய நிலையில், மத்திய ஆயுத காவல் படை அல்லது துணை ராணுவத்தில் ஆட்சேர்ப்பின்போது, காலி பணியிடங்களில் அக்னிவீரர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்கும் பணிகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன.
    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது.

    அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டம் வரும் 11ந் தேதி நடைபெற உள்ளது. இந்த குழுவில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினரிடம் அக்னிபாத் திட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் விளக்கம் அளிக்கிறார். அக்னிபாத் திட்டத்தில் வீரர்கள் சேர்ப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவம், கடற்படையில் சேர இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. 17½ வயது முதல் 21 வரையிலான இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பின்னர் இந்த வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது.

    இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியபோதும், இந்தத் திட்டத்தை வாபஸ் பெறமுடியாது என மத்திய அரசு அறிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆள் எடுக்கும் பணிகளை விமானப்படை கடந்த மாதமே தொடங்கியது.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேர சுமார் 10 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்திய கடற்படையில் முதல் முறையாக வீராங்கனைகள் சேர்க்கப்பட உள்ளனர். இவர்கள் போர்க் கப்பல்களில் பணியாற்ற உள்ளனர்.

    • அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மீஞ்சூரில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    பொன்னேரி:

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மீஞ்சூரில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில துணைத்தலைவர் டிஎல் சதாசிவ லிங்கம், நிர்வாகிகள், மீஞ்சூர்துரைவேல் பாண்டியன், பொன்னேரி கார்த்திகேயன் ஆரணி சுகுமாரன், ஐ என் டி யு சி தாமோதரன், மணவாளன், யுகேந்தர், வில்சன் உட்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • சிந்தாமணி பஞ்சாயத்து கீழ சிந்தாமணியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்பு போன்ற உபகரணங்களை வழங்கினார்.

    நெல்லை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

    இதன் ஒருபகுதியாகவும், நெல்லை சந்திப்பு பழைய பஸ்நிலையத்தை ஸ்மாட்சிட்டி திட்டத்தின் மூலம் புதுப்பிக்கும் போது கிடைத்த ஏராளமான ஆற்று மணலை கொள்ளையடித்த மாநகராட்சி அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யவும், சி.பி.சி.ஐ.டி. விசாரணையை விரைவு படுத்தக்கோரியும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை மூலைக்கரைப்பட்டி பஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் தலைமை தாங்கினார்.

    கோஷங்கள்

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன் மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    உடற்பயிற்சி உபகரணங்கள்

    பாளையங்கோட்டை யூனியன் சீவலப்பேரி பஞ்சா யத்து பொட்டல்நகரில் இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பார், சிங்கள் பார் போன்ற உபகரணங்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வழங்கினார்.

    மேலும் சிந்தாமணி பஞ்சாயத்து கீழ சிந்தாமணியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்பு போன்ற உபகரணங்களை வழங்கினார்.

    மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் செல்லப்பாண்டி, வட்டார தலைவர்கள் சங்கரபாண்டியன், நளன், ரவீந்திரன், மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகி சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர் மரிய பில்லியன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார்.

    மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் பாபு, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் கோபி, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜோதிபாலன், காமராஜ், மணிகண்டன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் வாணி செய்யது இப்ராஹிம், வட்டார தலைவர் சேது பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

    இதே போல் ராமநாத புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் சாா்பில், பரமக்குடி, முதுகுளத்தூா், திருவாடானை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது என்று மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா தெரிவித்தார்.

    • மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. எனவே இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
    • ஸ்மார்ட் சிட்டி முறைகேடு சம்பந்தமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விசாரணையை தீவிரப்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் இன்று போராட்டம் நடத்தினர்.

    நெல்லை

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. எனவே இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது ஆற்று மணல் முறைகேடாக கடத்தப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்றது.

    ஆனால் இந்த விசாரணை தற்போது கிடப்பில் உள்ளது. முறைகேடு சம்பந்தமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விசாரணையை தீவிரப்படுத்தி சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், பொது செயலாளர் சொக்கலிங்க குமார், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ், நிர்வாகிகள் தனசிங் பாண்டியன், காவேரி, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×