search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

    'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

    • மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. எனவே இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
    • ஸ்மார்ட் சிட்டி முறைகேடு சம்பந்தமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விசாரணையை தீவிரப்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் இன்று போராட்டம் நடத்தினர்.

    நெல்லை

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. எனவே இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது ஆற்று மணல் முறைகேடாக கடத்தப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்றது.

    ஆனால் இந்த விசாரணை தற்போது கிடப்பில் உள்ளது. முறைகேடு சம்பந்தமாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விசாரணையை தீவிரப்படுத்தி சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், பொது செயலாளர் சொக்கலிங்க குமார், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ், நிர்வாகிகள் தனசிங் பாண்டியன், காவேரி, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×