என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆா்ப்பாட்டம்
  X

  மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் காங்கிரசார் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.

  மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆா்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.
  • ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார்.

  ராமநாதபுரம்

  மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார்.

  மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் பாபு, மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் கோபி, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜோதிபாலன், காமராஜ், மணிகண்டன், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் வாணி செய்யது இப்ராஹிம், வட்டார தலைவர் சேது பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

  இதே போல் ராமநாத புரம் மாவட்டத்தில் காங்கிரஸ் சாா்பில், பரமக்குடி, முதுகுளத்தூா், திருவாடானை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது என்று மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா தெரிவித்தார்.

  Next Story
  ×