search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகத்தியர்"

    • அடியவர்களின் வினைகளை தீர்க்கின்ற முகம் ஒன்று.
    • பன்னீர் இலையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது

    நமது உடலில் அமைந்துள்ள ஆதாரங்கள் ஆறு. அவை முறையே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை. இந்த ஆறு ஆதாரங்களிலும் முருகன் வீற்றுள்ளான்.

    மூலாதாரம்-திருப்பரங்குன்றம்

    சுவாதிஷ்டானம்-திருச்செந்தூர்

    மணிபூரகம்-திருவாவினன்குடி

    அநாகதம்-திருவேரகம்

    விசுத்தி-குன்று தோறாடல் (திருத்தணி)

    ஆக்ஞை-பழமுதிர்சோலை

    ஆறுமுகம்

    முருககப் பெருமானை ஆறுமுகம் என்று சொல்லு வோம். அந்த ஆறுமுகம் என்னென்ன?

    1. சிவனுக்கு ஞானமொழியாக, ஓங்காரத்தில் பொருளை விளக்கிய பேசும் முகம் ஒன்று.

    2. வள்ளியைத் திருமணம் செய்ய வந்த முகம் ஒன்று.

    3. அடியவர்களின் வினைகளைத் தீர்க்கின்ற முகம் ஒன்று.

    4. குன்றில் சம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று.

    5. சூரனை வதைத்த முகம் ஒன்று.

    6. வாகனமான மயில் மீது ஏறி விளையாடும் முகம் ஒன்று.

    பன்னீர் இலை பிரசாதம்

    திருச்செந்தூரில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப் பெருமானின் திருக்கோவிலில் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும்.

    இத் தலத்தில் நான்கு வேதங்களும் பன்னீர் மரங்களாக மாறிச் செந்தில் முருகனை வழிபடுவதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. அதற்கேற்றாற் போல பன்னீர் மரங்கள் மிகுந்த அளவில் இங்குண்டு. விஸ்வாமித்திரரைப் பிடித் திருந்த குன்ம நோய் இந்த பன்னீர் இலை விபூதியால் குணமானதாக நம்பப்படுகிறது.

    முருகன் கண்ட பாக்கிய சாலிகள்

    அகத்தியர், நக்கீரர், சிகண்டி முனிவர், நல்லியக்கோடன், ஒளவையார், முருகம்மையார், பொய்யாமொழிப் புலவர், சிதம்பர சுவாமிகள், ஞாவைரோதயர், பகழிக்கூத்தர், கவிராஜ பிள்ளை, குமரகுருபரர், மார்க்க சகாயதேவர், குணசீலர், ராமலிங்க அடிகள், முருகதாச சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்பர், வாரியார் சுவாமிகள்.

    • தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார்.
    • நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

    வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

    ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சிஅவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்தியமகன் வேண்டும் என வேண்டினான்.

    அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்! நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்றுசாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

    மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

    எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன். அங்கு தொடங்கியது பிரச்சனை.

    மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர். தேவர்கள், மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான் அவனை சம்ஹாரம் செய்யதகுந்தவள் மகாசக்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

    மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

    தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.

    அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

    அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள்அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவிமணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

    இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. 

    • அகத்தியர் சிலைக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் அகத்தியரை மனமுருகி வணங்கினர்.

    தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. பொதிகைமலையில் உற்பத்தியாகி புன்னக்காயலில் கடலில் கலக்கும் நதி. இந்த நதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய தேவைகளை பூர்த்தி செய்கிறது.

    இந்த நிலையில் பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தாமிரபரணி நதியின் உப நதியான கடனா ஆறு, மணிமுத்தாறு, பச்சையாறு, சிற்றாறு உள்பட ஆறுகளும் வறண்டு விட்டன.

    இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி வறண்டு போனால் மே மாதம், பொதிகை மலையில் அகத்தியருக்கு பூஜை செய்வது வழக்கம். எனவே இந்த வருடமும் அதுபோன்ற பூஜை நடத்த ஏற்பாடு செய்தனர்.

    இதற்காக செய்துங்க நல்லூரில் இருந்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், பஞ்சாயத்து எழுத்தர் சங்கர பாண்டியன், உச்சிமகாளி சுவாமி உள்பட 16 பேர் கொண்ட குழுவினர் கடந்த 26-ந்தேதி மாலை கிளம்பினர்.

    இவர்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட தாமிரபரணி ஆர்வலர்கள் வழி அனுப்பி வைத்தனர். இவர்களை போலவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பொதிகைமலை யாத்திரைக்கு வருகை தந்தனர். கேரள வனத்துறைக்கு உட்பட்ட விதுரா வழியாக கானித்தலம் வந்து, அங்குள்ள சோதனை சாவடியில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு போனக்காடு என்ற பகுதிக்கு வந்தனர்.

    அங்கு தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, அங்கிருந்து கரடு முரடான பயணத்தினை தொடங்கினர். அவர்கள் தங்கர் பச்சான் கோவில், லாத்தி மோட்டா, கருமேனியாறு, வாலை பிந்தியாறு, அட்டையாறு, புல்வெளி, ஏழுமடங்கு, ஏ.சி. காடு வழியாக அத்திரிமலை பங்களா வந்து அடைந்தனர்.

    அங்கு இரவு ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் காலை மீண்டும் பயணத்தினை தொடங்கினர். அவர்கள் மதிமயக்கும் சோலை, தாமரைக்குளம், பொங்கலா பாறை, சங்குமுத்திரை, வழுக்கு பாறை, இடுக்கு பாறை ஆகிய மூன்று இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றை பிடித்து ஏறி பொதிகை மலை உச்சிக்கு சென்றனர்.

    அங்கு அகத்தியர் சிலைக்கு பால், நெய், விபூதி, சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம் நடந்தது. பின்னர் தாமிரபரணி நதி வற்றாமல் இருக்கவும், பருவ காலங்களில் மழை பெய்யவும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    அங்கு வந்த பக்தர்கள் அகத்தியரை மனமுருகி வணங்கினர். அவர்கள் வேண்டுதல் நடத்தும் போதே மழை பொழிந்தது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை முடிந்து கீழே இறங்கியவுடன் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கீழே இறங்கி அத்திரி பங்களாவில் இரவு தங்கி விட்டு, 3-வது நாள் கீழே இறங்கி வந்தனர். பொதிகை மலை உச்சியில் கடந்த 1996-க்கு பிறகு தமிழ்நாடு வனத்துறை பாதை அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. ஆனாலும் கேரள வனத்துறை சார்பில் அனுமதி பெற்று அகத்தியரை தரிசனம் செய்ய மக்கள் செல்கிறார்கள். இவர்கள் வேண்டுதல் நிறைவேறி மழை பெய்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற பக்தர்கள் நம்பிக்கை நிறைவேறட்டும்.

    • சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி.
    • சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம்.

    சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும் பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப்படுகிறது. சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப்படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.

    இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம். நம்புவதற்கு சற்று சிரமமான தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் எனக்கு கிடைத்த ஒரு தகவலை இங்கே பகிர்கிறேன்.

    அகத்தியர் அருளிய "அகத்திய பூரண சூத்திரம்" என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிக்கும் முறை கூறப்பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

    பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு

    பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக

    ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்

    இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து

    மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி

    மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு

    தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்

    சிவசிவா மனதுபூ ரணமாய்நில்லே.

    - அகத்தியர்.


    நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா

    நிஸ்பயமாய் லிங்கிலிசிம் மென்றுஓது

    சொல்லந்த மானகுரு நாதன்றானும்

    சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு

    நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டா

    நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு

    சொல்லந்தச் சோதிதனைக் கண்டால்மைந்தா

    தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.

    - அகத்தியர்.

    சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து, திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். உடலையும் மனதையும் தளர்த்திய பின்னர் கண்களை மூடி புருவ மத்தியில் மனதினை ஒருமைப்படுத்தி, தியான நிலையில் இருந்து "லிங் கிலி சிம்" என்கிற மந்திரத்தினை தொடர்ந்து செபிக்க வேண்டுமாம்.

    இவ்வாறு தினசரி செபித்து வந்தால் பரமகுருவான நந்திதேவர் நம் இதயத்தில் சோதிவடிவாகக் காட்சி கொடுப்பார் என்றும், அவர் தரிசனத்தினைக் கண்டால் அட்ட சித்துக்களும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

    ×