search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world record"

    • தேவிபட்டினம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளியில் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது.
    • சிலம்பம் பயிற்சி பள்ளி செயலாளர், சிலம்ப மாஸ்டர்கள் தங்க குரு நாதன், கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேவிபட்டினம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சாலையில் உள்ள கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது. ஹேமநாதன் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மதுரை 4-ம் தொழிற்சங்கத்தின் தலைவர் ராஜா கே.பி.எம் நாகேந்திர சேதுபதி, கிருஷ்ணா இண்டர் நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், தலைமை ஆசிரியர் முத்துக் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட னர். செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா, எம்.ஜி. பப்ளிக் பள்ளி தாளாளர் ஹர்சவர்தன், விளையாட்டு ஆசிரியர் சுந்தரராஜன், துணை வட்டாட்சியர்(ஓய்வு) கருப்பையா, கிராமிய கலைக்குழு வீரவேல், ஒயி லாட்ட கலைக்குழு தலைவர் வரதராஜ், ராமநாதபுரம் மாவட்ட சிலம்பு ஆசிரியர் நலச்சங்க தலைவர் பொரு ளாளர் வருசை கனி,

    ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு பயிற்சியாளர் நலச்சங்கம் செயலாளர் கண்ணன், பொருளாளர் செந்தில்குமார், உலக சாதனை நிர்வாகிகள் வினோத், பரணிதரன், பரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் 18 மாணவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு கட்டைக்காலில் நின்று இரட்டை கம்புகளுடன் 2 மணி நேரம் 15 நிமிடமும், ஐஸ் கட்டி மேல் நின்று 2 கம்புகளுடன் 3 மணி நேரமும், 6 பானைகள் மேல் நின்று ஒற்றைக்கம்பு சிலம்பமும், மான் கொம்பு வீச்சு, கண்ணை கட்டிக் கொண்டு இரட்டை சுருள்வாள் சுற்றுவதும், ஆணி மேல் நின்று ஒற்றை தீப்பந்தத்துடன் 3 மணி நேரம் சுற்றுவதையும் செய்து காட்டினர். இது உலக சாதனையாக அமைந்தது.

    ஏற்பாடுகளை இந்நிகழ்ச்சிக் கான ஏற்பாட்டினை நிகழ்ச்சி யின் ஒருங்கிணைப்பாளர், மாஸ்டர் ஹேமநாதன் சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவனர் தலைவர் கின்னஸ் உலக சாதனை யாளர் என்.ஹேமநாதன் செய்திருந்தார்.

    சிலம்பம் பயிற்சி பள்ளி செயலாளர், சிலம்ப மாஸ்டர்கள் தங்க குரு நாதன், கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.
    • மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.

    சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (வயது 15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால், மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்த சாஹல், தனது பெற்றோரிடம் அவற்றை நீக்கி விடும்படி கேட்டிருக்கிறார்.

    ஆனால் வளர்ந்ததும், அதன்மீது தனி கவனம் செலுத்த தொடங்கியதுடன், தலைமுடி தன்னில் ஒரு பகுதி என்ற உணர்வும் சாஹலுக்கு ஏற்பட்டது. சீக்கிய மதத்தினை சார்ந்த சாஹல், மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.

    சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில், சாஹலின் நீண்ட தலைமுடியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.

    இதுபற்றிய வீடியோ ஒன்றை கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சாஹல், தன்னுடைய தலைமுடி பராமரிப்பு பற்றி பேசியுள்ளார். தலைமுடியை அலசி, சுத்தம் செய்து, எப்படி தலைமுடியை வாருவது என்பது பற்றி சாஹலின் தாயார் உதவி செய்திருக்கிறார். அப்படி அவர் உதவவில்லை எனில், நாள் முழுவதும் அதற்காக செலவிட வேண்டி இருக்கும் என சாஹல் கூறுகிறார்.

    அப்படி தலைமுடியை அலசாமல் அல்லது காய வைக்காமல் இருக்கும்போது, சீக்கிய முறையை பின்பற்றுபவர்களிடையே காணப்படுவது போன்று, அதனை உருண்டையாக சுற்றி வைத்து, டர்பன் அணிந்து கொள்கிறார். இந்த சாதனையை பற்றி மற்றவர்களிடம் கூறும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் பொய் கூறுகிறேன் என நினைத்துவிட்டனர். அதன்பின்பு, அவர்களை நம்ப வைக்க சில சான்றுகள் தேவைப்பட்டன என அந்த வீடியோவில் கூறுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2024-ல் தன்னுடைய சாதனையும் ஒரு பகுதியாக இருப்பதற்காக சாஹல் அதிக மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

    • ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டத்தில் ஆடி அசத்தினர்.
    • வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்றத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வாக சுமார் 2000 கலைஞர்கள் பங்கு பெற்ற பவள கொடி கும்மியாட்டம் நடைபெற்றது .

    இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சக்தி கலை குழு ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பவளக்கொடி கும்மி ஆட்டத்தில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்படம், தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் பாடினர். குறிப்பாக ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டத்தில் ஆடி அசத்தினர். சிறு வயது முதல் 50 வரையிலான ஆண்கள், பெண்கள் உலக சாதனை நிகழ்ச்சிக்காக பாரம்பரியமான உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடிய வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். வள்ளி கும்மியாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    • அதிக பயிற்சியும், திறனும் தேவைப்படும் ஆபத்தான விளையாட்டாக கருதப்படுகிறது
    • 10 மாதங்களுக்கு முன்புதான் அக்டோபர் 2022ல் பயிற்சியை தொடங்கினார்

    கொச்சியில் உள்ள என்டைமென்ஷன்ஸ் ஸொல்யூஷன்ஸ் (Ndimensionz Solutions) எனும் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜித்தின் விஜயன் (41).

    அதிக பயிற்சியும், திறனும் தேவைப்படும் ஆபத்தான விளையாட்டான ஸ்கை டைவிங்கில் இவர் உலக சாதனை படைத்துள்ளார்.

    ஜூலை 1 ஆம் தேதி அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள வைட்வில் பகுதியில் தனது மிக சமீபத்திய ஜம்ப் மூலம் வெளிப்புற ஃப்ரீஃபால் எனப்படும் வானில் இருந்து குதிக்கும் விளையாட்டில் 2:47 நிமிடங்களில் செய்து காட்டி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

    மிக உயரமான உயரத்தில் இருந்து குதிக்கும் விளையாட்டில் 42,431 அடிகளிலிருந்து குதித்ததற்காகவும், பாதுகாப்பு கவசமின்றி குதிக்கும் விளையாட்டில் 36,929 அடிகளிலிருந்து குதித்ததற்காகவும் இவர் 2 ஆசிய சாதனைகளையும் படைத்துள்ளார்.

    மவுண்ட் எவரெஸ்டின் உயரமான 29,030 அடிகளை விட 42,431 அடி உயரத்தில் இவர் நம் இந்திய தேசிய கொடியை பறக்க விட்டு புது கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    உலக வான் விளையாட்டுக்களுக்கான கூட்டமைப்பை (World Airsports Federation) சேர்ந்த அதிகாரி ஒருவரால் இந்த பதிவுகள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டன.

    இதன்படி ஜித்தின் ஸ்கை டிவிங்கின் செய்த மொத்த கால அளவு 7 நிமிடங்களுக்கு மேல் உள்ளது.

    ஸ்கை டைவிங் விளையாட்டு பயிற்சியை ஜித்தின் ஒரு வருடத்திற்கும் குறைவாக 10 மாதங்களுக்கு முன்புதான் அக்டோபர் 2022ல் தொடங்கினார் என்பது இவரது சாதனைகளில் மற்றொரு கூடுதல் சிறப்பு. இந்த 10 மாதங்களுக்குள், அவர் தனது 148 முறை குதித்திருக்கிறார்.

    இந்தியாவில் ஸ்கை டைவிங் செய்தவர்களை விட எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தவர்களே அதிகம் என கூறும் விளையாட்டு நிபுணர்கள், இதிலிருந்தே இந்தியர்கள் இவ்விளையாட்டை எவ்வளவு ஆபத்தானதாக கருதுகிறார்கள் என்பதையும், இந்தியாவில் ஆர்வலர்கள் குறைவாக இருப்பதற்கான காரணத்தையும் கண்டறியலாம் என கூறுகின்றனர்.

    • கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் விளையாடி மாணவி உலக சாதனை படைத்தார்.
    • சிலம்பம் விளையாட பயிற்சியாளர் ஈஸ்வரன் குழுவினர் கடந்த 3 மாதமாக பயிற்சி அளித்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் செயல்பட்டு வரும் சிலம்ப பயிற்சி நிறுவனம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலம்பப் போட்டிைய நடத்தியது. உலக சாதனை படைக்க நோபல் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் விளையாட பயிற்சியாளர் ஈஸ்வரன் குழுவினர் கடந்த 3 மாதமாக பயிற்சி அளித்தார். இந்த நிலையில் இன்று டி.கல்லுப்பட்டி-கள்ளிக்குடி சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 110 மாணவ-மாணவிகள் பங்கேற்று கண்கள், கால்களை கட்டிக்கொண்டு 30 நிமிடம் தொடர் சிலம்பம் விளையாடும் நிகழ்ச்சி நடந்தது.

    சிலம்ப கலையின் உள் சுத்து வெளிச்சுத்து, கிறுக்கி, பகிழ் உடான், நாலடி, தலை வெட்டு முன் கம்புபின்னல் பிரித்தல், பின்கம்பு பின்னல் பிரித்தல், உள்சுத்துகை மாற்றுதல், வெளிச்சுத்து கை மாற்றுதல், நான்கடி கைமாற்றுதல், தொடு முறை சுற்றுதல் என பல்வேறு கலைகளை 30 நிமிடத்தில் செய்து காண்பித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர். உலக சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் சார்பில் வினோத் குமார், புளியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிகண்டன் ஆகியோர் சான்றிதழும், கேடயமும் வழங்கினர்.

    • 73 நாட்கள் நீருக்கடியில் வசித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.
    • தண்ணீரில் 30 அடி ஆழத்தில் 100 சதுர அடி வீடு அமைத்து அங்கு தங்கி உள்ளார்.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    உலக சாதனை படைக்க ஒவ்வொருவரும் பல்வேறு செயல்களில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் 73 நாட்கள் நீருக்கடியில் வசித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இதனை முறியடிக்க அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜோடிடுரி என்பவர் முடிவு செய்தார். அவர் 100 நாட்கள் நீருக்கடியில் இருக்கபோவதாக கூறியுள்ளார்.

    இதற்காக கடந்த மாதம் 1-ந்தேதி கீ லார்கோவில் உள்ள ஜூல்ஸ் அண்டர்சீயில் இந்த சாதனையை தொடங்கி உள்ளார். தண்ணீரில் 30 அடி ஆழத்தில் 100 சதுர அடி வீடு அமைத்து அங்கு தங்கி உள்ளார்.

    • மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.
    • விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரையில் ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக 1200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த சிலம்பாட்ட கழக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அபுல்கலாம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி ராஜ், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாணவ-மாணவிகள் கடற்கரையில் நீண்ட வரிசையில் நின்றபடி தொடர்ந்து 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.

    இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் புதுவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சிலம்பாட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

    • இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார்.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் ஷுப்மன் கில்

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். முதல் போட்டியில் 208 ரன்களும், இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 40 ரன்களும் எடுத்தார். இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 112 ரன்கள் குவித்தார்.

    இதன்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமின் உலக சாதனையுடன் (360 ரன்) இணைந்துள்ளார். இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார்.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.

    அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஷுப்மன் கில்லைத் தொடர்ந்து வங்காளதேச வீரர் இம்ரல் கயீஸ் (349), தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் (342), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (330) ஆகியோர் உள்ளனர். 

    • கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகள் முன்பு கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களை தொங்கவிடுவது வழக்கம்.
    • 100 கிலோ எடையிலான தங்க முலாம் பூசப்பட்ட பிரமாண்ட கேக் ஒன்று பாளையில் உள்ள தனியார் ஓட்டலில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது

    நெல்லை:

    கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந் தேதி கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகள் முன்பு கிறிஸ்துமஸ் நட்சத்தி ரங்களை தொங்கவிடுவது வழக்கம்.

    வீடுகள் மட்டுமின்றி தேவாலயங்கள், கடைகளிலும் ஸ்டார்கள் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு வரை வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்.

    கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களையும் விதவிதமான வண்ணங்களில் வீடுகளில் வைப்பது வழக்கம்.

    ஒவ்வொரு தேவாலயங்களில் இருந்தும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் பாதிரியார் தலைமையில் பங்கு மக்கள் வீடுகளுக்கு ஊர்வலமாக சென்று பரிசுபொருட் களையும், வாக்குத்தத்தம் அட்டைகளையும் வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்வார்கள்.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் உள்ளிட்ட அலங்கார பொருட்களின் விற்பனை நெல்லையில் சூடுபிடித்துள்ளது.

    நெல்லை, பாளை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் மற்றும் விளக்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. காகிதத்தால் ஆன நட்சத்தி ரங்கள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நட்சத்தி ரங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    விதவிதமான நட்சத்திரங்கள், டிராகன், லோட்டஸ், சொரூபம், கிரேப்ஸ் பந்து உள்ளிட்ட வடிவங்களில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கிறிஸ்த வர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    இதேபோல் கிறிஸ்துமஸ் மரங்களும், பொம்மைகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே உலக சாதனை முயற்சியாக 100 கிலோ எடையிலான தங்க முலாம் பூசப்பட்ட பிரமாண்ட கேக் ஒன்று பாளையில் உள்ள தனியார் ஓட்டலில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கில் 400 மில்லி கிராம் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோல் 5 கிலோ எடையிலான சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 250 மில்லி கிராம் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும் 4 அடியில் பிரமாண்ட தோசை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 100 மில்லி கிராம் தங்கம் சேர்க்க ப்பட்டுள்ளது. இவற்றை தயாரிப்பதற்காக 100 கிலோ கேக்கிற்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரமும், 5 கிலோ சாக்லேட்டிற்கு ரூ.1 லட்சமும், தோசைக்கு ரூ.22ஆயிரத்து 230ம் செலவிடப்பட்டுள்ளது.

    இந்த தோசை பாளையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.100 கிலோ கேக், 5 கிலோ சாக்லேட் கிறிஸ்துமஸ் பண்டிகை வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. பள்ளி மாணவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
    • இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிவகங்கைச் சீமை சிலம்பக் குழுவால் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் 20 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றிக்கொண்டே நடைபயணம் செய்யும் சாகசம் நடந்தது. காரைக்குடி சூடாமணிபுரம் 120 அடி சாலையில் இந்த சாதனை பயணத்தை சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். 190 பள்ளி மாணவ- மாணவிகள் இதில் கலந்துகொண்டு தேவர் சிலை, ராஜீவ்காந்தி சிலை, கல்லூரி சாலை வழியாக சென்று அழகப்பா கல்வி குழும மைதானத்தில் சிலம்பம் சுற்றியபடி 20 கி.மீ. தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சோழன் உலக சாதனை புத்தக தலைவர் சண்முகநாதன் வழஙகிய சாதனை பட்டயத்தை அழகப்பா கல்வி குழும மேலாளர் காசி விசுவநாதன் மாணவர்களுக்கு வழங்கினார். சிலம்பாட்டக்குழு தலைவர் முனியாண்டி நன்றி கூறினார்.

    • உலகளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இது முதல் முறை.
    • இத்தொடரில் தொடர்ந்து 5 சதமடித்து தமிழக கிரிக்கெட் அணி வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார்.

    பெங்களூரு:

    38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன்மூலம் தமிழக அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    நேற்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 506 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், என்.ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக ஆடினர். தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகள் பறந்தன.

    ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர் உள்பட 277 ரன்களையும், சாய் சுதர்சன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 406 ரன்களைக் குவித்தது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    இதையடுத்து, 507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை துரத்திய அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தமிழ்நாடு அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

    உலக அளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுதான் முதல் முறையாகும்.

    இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் அணியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதுவரை 2,800 உணவு பைகளை வரிசைப்படுத்தியதே உலக சாதனையாக உள்ளது.
    • உலக சாதனை நிகழ்த்தியதாக இதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமான நிலைய ஆணையத்துடன், மயிலாப்பூர் ரவுண்ட் டேபிள் இந்தியா, மயிலாப்பூர் லேடீஸ் சர்க்கிள் ஆகிய பெண்கள் தன்னார்வ அமைப்பு இணைந்து விழிப்புணர்வு வார விழாவை நடத்தி வருகிறது. இதுவரை 2,800 உணவு பைகளை வரிசைப்படுத்தியதே உலக சாதனையாக உள்ளது.

    அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் 3,500 பைகளில் அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கெட் மற்றும் உப்பு போன்ற மளிகை பொருட்கள் வைக்கப்பட்டு, அந்த பைகள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டன.

    இதில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், ஆற்காடு நவாப் முகமது ஆசிப் அலி, மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர். 3,500 உணவு பைகளை வரிசைப்படுத்தி உலக சாதனை நிகழ்த்தியதாக இதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. உணவு பொருட்கள் அடங்கிய இந்த பைகளை, சென்னை முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பெண்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×