search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக சாதனை"

    • காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் ஊக்குவித்து வருகிறது.
    • மாபெரும் கருத்தரங்குகளை நடத்துவது உள்ளிட்ட பணிகளை காவேரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது.

    சுற்றுச்சூழல் வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனையாக, காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாடு முழுவதும் 1.12 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட்டு உலக சாதனை படைத்துள்ளது.

    இதையடுத்து, இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை நடப்பட்ட மரக்கன்றுகளின் மொத்த எண்ணிக்கை 10.9 கோடியாக உயர்ந்துள்ளது.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் விடாமுயற்சியால், ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான கடந்த நிதியாண்டில் 48,748 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 28,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 630 மரக்கன்றுகளை தங்கள் நிலங்களில் நட்டுள்ளனர்.

    உலக பூமி தினமான இன்று (ஏப்ரல் 22) இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் இவ்வியக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் பங்கேற்று கூறியதாவது:-

    காவேரி கூக்குரல் இயக்கம் என்பது சத்குரு அவர்களால் 26 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட விதையாகும். 1998-ம் ஆண்டு முதல் ஈஷா பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளை வெவ்வேறு பெயர்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறது.

    அதில் ஒரு அங்கமாக, தமிழகத்தின் பசுமைப்பரப்பை அதிகரித்தல், நதிகளுக்கு புத்துயிர் அளித்தல், விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் ஊக்குவித்து வருகிறது.

    விவசாயிகளுக்கு தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பது, மரம்சார்ந்த விவசாயம் செய்வதற்கு பயிற்சி அளிப்பது, முன்னோடி விவசாயிகளின் நிலங்களில் மாபெரும் கருத்தரங்குகளை நடத்துவது உள்ளிட்ட பணிகளை காவேரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது.

    இதற்காக, கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு இடங்களில் நாங்கள் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் விநியோகித்து வருகிறோம். கடலூரில் உள்ள ஈஷா நர்சரியானது உலகின் மிகப்பெரிய நர்சரிகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஒரு ஆண்டில் 85 லட்சம் மரக்கன்றுகள் வரை உற்பத்தி செய்ய முடியும். இதுதவிர 39 இடங்களில் விநியோக நர்சரிகளை நடத்தி வருகிறோம். இங்கு தேக்கு, செம்மரம், சந்தனம், ரோஸ்வுட் உட்பட 29 வகையான விலை உயர்ந்த டிம்பர் மரக்கன்றுகளை ரூ.3 என்ற மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

    மேலும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் அளிக்கும் விதமாக, அவர்களே மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான வாய்ப்பையும் நாங்கள் வழங்கி வருகிறோம். அந்த வகையில், கடந்தாண்டு 30 விவசாயிகள் சுமார் 50 லட்சம் மரக்கன்றுகளை தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்து வழங்கி உள்ளனர். இதில் சுமார் 25 சதவீதம் விவசாயிகள் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 12 விவசாயிகள் 12 மாவட்டங்களில் ஈஷா விநியோக நர்சரிகள் மூலம் சுமார் 14 லட்சம் மரக்கன்றுகளை விநியோகம் செய்து அதன்மூலம் கூடுதல் வருமானம் ஈட்டியுள்ளனர்.

    காவேரி கூக்குரல் இயக்கத்தில் மொத்தம் 130 களப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டு 31,400 விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளனர். அங்குள்ள நிலத்தின் மண் மற்றும் நீரின் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப மர விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் 29,800 விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3 மிகப்பெரிய கருத்தரங்குகளையும், 12 மண்டல அளவிலான கருத்தரங்குகளை நடத்தினோம். இதில் சுமார் 6,000 விவசாயிகள் நேரில் பங்கேற்று பயன்பெற்றனர். சத்குருவின் பிறந்த நாள், நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்களில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நடும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதுபோன்ற பல்வேறு வகையான செயல்பாடுகளால் தான் எங்களுடைய 1.12 கோடி மரக்கன்றுகள் நடும் இலக்கு பூர்த்தி ஆகியுள்ளது.

    இந்த மாதம் தொடங்கியுள்ள நடப்பு நிதியாண்டில் (2024 - 25) காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் செய்த 'பேய் கொட்டு
    • பேய் கொட்டு' எனும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் கின்னஸ் சாதனையாளரான S லாவண்யா.

    தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் செய்து 'பேய் கொட்டு'(PEI KOTTU) திரைப்படத்தை உருவாக்கி 10 வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் பல உலக நாடுகளில் இருந்து வாங்கி குவித்துள்ளார். இயக்குனர் S.லாவண்யா 

    தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராஃப்ட்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு. ஆனால் திரையுலகின் 24 கிராஃப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, மேலும் கூடுதலாக ஏழு டிபார்ட்மெண்ட்ஸ் சேர்த்து சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் இன்ஜினியரிங், உள்ளிட்ட துணை பணிகளையும் மேற்கொண்டு இப்படத்தினை ஒற்றை ஆளாக தோளில் சுமந்து மொத்தம் 31 துறைகளில் உருவாக்கி

    பேய் கொட்டு'(PEI KOTTU) எனும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் கின்னஸ் சாதனையாளரான S லாவண்யா.

    அறிமுக இயக்குநர் எஸ். லாவண்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேய் கொட்டு' எனும் திரைப்படத்தில் லாவண்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    எஸ். லாவண்யா- பி. வசந்த் -ஜான் விக்டர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். லாவண்யா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கம் மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் இவரே மேற்கொண்டிருக்கிறார்.

    ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓம் சாய் புரொடக்ஷன்ஸ் (OM SAI PRODUCTIONS) எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லாவண்யா தயாரித்திருக்கிறார்.

    இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இண்டிபெண்டண்ட்  திரைப்பட படைப்பாளியான நான் திரைத்துறையில் இயங்கும் அனைத்து கிராப்டுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன். இதைத்தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், ஃபைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எஃப் எக்ஸ், வி எஃப் எக்ஸ், எஸ் எஃப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன்... ஆகிய 31 கிராப்ட்டுகளையும் சுயமாக கற்று, 'பேய் கொட்டு' எனும் இந்த ஹாரர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

    'பேய் கொட்டு' என்பது தவறுகள் செய்தால் தலையில் கொட்டுவார்கள் அல்லவா... அதே போல் நாம் ஏதேனும் தவறாக நினைத்தால், பேய் நம் தலையில் கொட்டும். இது வித்தியாசமான கதைக்களமாகவும், சுவாரசியமான திரைக்கதையாகவும் உருவாகி இருக்கிறது. '' என்றார்.

     

    இதனிடையே சுயாதீன திரைப்பட கலைஞர் ஒருவர் திரையுலகின் 31 கிராஃப்ட்டுகளையும் கற்றுக்கொண்டு, ஒற்றை ஆளாக முழு நீள திரைப்படத்தை உருவாக்கி இருப்பது தமிழ் திரை உலகில் முதன்முறை என்பதும், இத்தகைய முயற்சி திரையுலகினரையும், ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது என்பதும்,

    'பேய் கொட்டு' எனும் திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு லாவண்யா எனும் பெண்மணியின் சாதனை முயற்சியாக பார்ப்பதால் இதற்கான வெற்றி உறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    1. BOOK OF WORLD RECORDS USA (USA, UK , CANADA, PHILIPPINES, INDIA)

    2. WORLD WIDE BOOK OF RECORDS, (UK)

    3. WORLD ACHIEVERS BOOK (UK)

    4. INFLUENCER BOOK OF WORLD RECORDS (UK)

    5. INDIA'S WORLD RECORDS (INDIA)

    6. UNICORN WORLD RECORDS (UK)

    7. KALAM'S WORLD RECORD

    8. SIGARAM AWARDS 2023 from Director K.Bhagyaraj sir

    9. LONDON BOOK OF WORLD RECORDS for covering 31 departments

    (3 Awards)(LONDON)

    10. LONDON BOOK OF WORLD RECORDS for BEST DIRECTOR & ACTOR

    11. LONDON BOOK OF WORLD

    RECORDS for BEST MUSIC DIRECTOR & PLAYBACK சிங்கர்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நெல்லூர் இன பசுக்கள் கடந்த 1868-ம் ஆண்டு பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.
    • பிரேசில் நாட்டில் 1.60 கோடி நெல்லூர் இன பசுக்கள் உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஓங்கோல் மற்றும் நெல்லுரை சேர்ந்த சில வகை இன மாடுகள் உலக அளவில் பிரபலமாக உள்ளது.

    நெல்லூர் இன வகையான பாஸ் இண்டிகஸ் என்ற இன பசு வெளிப்புறத் தோற்றத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும். இந்த வகை பசு பிரேசில் நாட்டில் நடந்த ஏலத்தில் 4.8 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.

    இது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.40 கோடி ஆகும். ரூ.40 கோடிக்கு விற்பனையாகி உலக சாதனை படைத்தது.

    நெல்லூர் இன பசுக்கள் கடந்த 1868-ம் ஆண்டு பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இந்த வகை பசுக்கள் அதிக அளவில் இனவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி பிரேசில் நாட்டில் 1.60 கோடி நெல்லூர் இன பசுக்கள் உள்ளன.

    இந்த வகை பசுக்கள் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியவை. எளிதில் நோய்கள் தாக்க முடியாத அளவுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகும். 

    • 3 முன்னணி மராத்தான் பந்தயங்களில் பட்டம் வென்றவர் கிப்டம்
    • சிகாகோ மராத்தானில் 02:00:35 மணிக்குள் ஓடி சாதனை படைத்தார் கிப்டம்

    "லாங் டிஸ்டன்ஸ் ரன்னிங்" எனப்படும் நீண்ட தூர ஓட்ட பந்தயங்கள் (3 கிலோமீட்டர்) மற்றும் மராத்தான் (42 கிலோமீட்டர்) பந்தயங்களில் உலகின் முன்னணி வீரர், கென்யாவை சேர்ந்த கெல்வின் கிப்டம் செருயோ (Kelvin Kiptum Cheruiyot).

    உலகின் முன்னணியான 3 மராத்தான் பந்தயங்களில் முதலிடம் பிடித்தவர் கிப்டம்.

    கடந்த 2023 அக்டோபர் மாதம், உலக ஓட்ட பந்தய வரலாற்றிலேயே 02 மணி நேரம் 01 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சிகாகோ மராத்தான் போட்டியை வென்று சாதனை புரிந்தார் கிப்டம்.

    நேற்று இரவு, மேற்கு கென்யாவின் எல்டொரெட் பகுதியில் தனது டொயோட்டா ப்ரீமியோ காரில், பயிற்சியாளர் கெர்வய்ஸ் ஹகிசிமானா (Gervais Hakizimana) மற்றும் வேறொரு நபருடன் கிப்டம் பயணித்தார்.

    காரை கிப்டம் ஓட்டினார்.

    ரிஃப்ட் வேலி எனும் டவுனுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து தாறுமாறாக ஓடி, 200 அடி தொலைவில் இருந்த ஒரு பள்ளத்தில் இறங்கி, ஒரு பெரிய மரத்தில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் கெர்வய்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.

    உடன் பயணித்த மற்றொரு பயணி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இளம் வயதிலேயே பல உலக சாதனைகளை புரிந்து, மேலும் பல உச்சங்களை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிப்டம், 24 வயதில் உயிரிழந்ததற்கு உலக அளவில் தட-கள (track and field) பந்தயங்களை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • ஸ்கந்த ஸபாநாதர் நாட்டிய சேத்ரா சார்பில் நாட்டிய உபசார உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாட்டிய நிகழ்ச்சியானது தொடர்ந்து 20 நிமிடங்கள் நடைபெற்றது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயில் பகுதியில் ஸ்கந்த ஸபாநாதர் நாட்டிய சேத்ரா சார்பில் நாட்டிய உபசார உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதனை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    64 உபசாரங்களில் கடவுளை நேரடியாக சென்றடையும் விதமாக பழனி முருகனுக்கு சுப்ரபாதம், திருப்புகழ், காவடிச்சிந்து ஆகியவை நாட்டியமாக ஆடி முருகனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை கலந்து கொண்ட இந்த நாட்டிய நிகழ்ச்சியானது தொடர்ந்து 20 நிமிடங்கள் நடைபெற்றது.

    நாட்டிய உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிய நாட்டிய கலைஞர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டது. பரிசுகளை கலைமாமணி முரளிதரன் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுந்தரேச குருக்கள், ராமலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். 

    • 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான முறையில் பந்தல்.
    • 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான ஏற்பாடு.

    சேலத்தில் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டையொட்டி சேலம் மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விழாக்கோமாக காட்சியளித்தது.

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் 9 லட்சம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான முறையில் பந்தல் அமைக்கப்பட்டது. மாநாட்டு திடலில் லட்சக்கணக்கானோர் மாநாட்டை கண்டுகளிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் மிகப்பெரிய 'ற்காலிக மாநாட்டு அரங்கம்' என்ற Unique World Records புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

    இந்த அரங்கம் 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெவ்வேறு காலகட்டத்தை நினைவுகூரும் விதமாக எராஸ் டூர் நடத்தி வருகிறார்
    • "2023 ஆண்டிற்கான நபர்" என டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார்

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி, 34 வயதான டேலர் ஸ்விஃப்ட் (Taylor Swift).

    தனது 14 வயதிலிருந்தே பாடல்கள் எழுத தொடங்கிய டேலர் பல ஆல்பங்களை வெளியிட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர்.

    டேலர், 2024 டிசம்பர் வரை உலகம் முழுவதும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் ஒரு நீண்ட இசை சுற்றுலாவை 2023 மார்ச் மாதம் துவங்கினார்.

    எராஸ் டூர் (Eras Tour) என பெயரிட்டுள்ள இந்த சுற்று பயணத்தில் தனது வாழ்நாளில் இதுவரை அவர் கடந்து வந்த இசை பயணத்தின் வெவ்வேறு காலகட்டத்தை (eras) நினைவுகூரும் விதமாக 44 பாடல்கள் கொண்ட 10 பகுதிகளாக பிரித்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

    ஸ்விஃப்டீஸ் (swifties) என அழைக்கப்படும் அவரது தீவிர ரசிகர்கள் அவர் செல்லும் நாடுகளுக்கெல்லாம் இடைவிடாது சென்று நிகழ்ச்சியை ரசிக்கின்றனர்.

    ஓவ்வொரு இசை நிகழ்ச்சியையும் சுமார் 72 ஆயிரம் பேர் பார்க்க வருகின்றனர். கட்டணம் சுமார் ரூ.19 ஆயிரத்திற்கும் ($238) மேல் நிர்ணயிக்கப்பட்டும் ரசிகர்கள் தயங்காமல் காண வருவதால் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ரூ.141 கோடிகளுக்கும் (17$ மில்லியன்) மேல் வசூல் குவிகிறது.

    கடந்த ஜூலை மாதம், அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் ஒவ்வொரு வருடமும் 8 முறை வெளியிடப்படும் பீஜ் புக் (Beige Book) எனப்படும் "சமகால பொருளாதார சூழல்" குறித்த அறிக்கையில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு ஓட்டல் அறைகளின் முன்பதிவு எராஸ் டூர் நிகழ்ச்சியால் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் புகழ் பெற்ற "டைம்" (Time) பத்திரிகை, "2023 ஆண்டிற்கான நபர்" என டேலரை தேர்வு செய்து தனது அட்டைப்படத்தில் வெளியிட்டது.

    டேலர், இதுவரை வசூலிலும், நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் 117 கின்னஸ் சாதனைகளை புரிந்துள்ளார்.

    இந்நிலையில் அவரது "எராஸ் டூர்" இசை நிகழ்ச்சி ரூ.8333 கோடிக்கு ($1 பில்லியன்) மேல் வசூல் செய்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது. அவரது சுற்று பயணம் தொடர்வதால், இந்த வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கிப்படுகிறது.

    இச்செய்தியால் டேலரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    • கையில் 3 கத்திகளை வைத்து அவற்றை வீசி வித்தை காட்டி பார்வையாளர்களை அசத்துகிறார்.
    • வித்தை காட்டியவாறே 34 அடி மற்றும் 4 அங்குல தூரத்தை கடந்து சாதனையை மேற்கொண்டுள்ளார்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே பகுதியை சேர்ந்தவர் எட்கர் யுட்கேவிச். சர்க்கஸ் கலைஞரான இவர் கயிற்றில் நடந்தவாறு 3 கத்திகளை பயன்படுத்தி நேர்த்தியாக வித்தை காட்டி கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

    இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், குறிப்பிட்ட தூரம் கட்டப்பட்ட கயிற்றின் மீது எட்கர் யுட்கேவிச் நடந்து செல்கிறார். அப்போது அவரது கையில் 3 கத்திகளை வைத்து அவற்றை வீசி வித்தை காட்டி பார்வையாளர்களை அசத்துகிறார்.

    இவ்வாறு வித்தை காட்டியவாறே 34 அடி மற்றும் 4 அங்குல தூரத்தை கடந்து சாதனையை மேற்கொண்டுள்ளார்.

    • ஆரோனிடம் பல வடிவங்களில் ஏராளமான பென்சில்கள் உள்ளன
    • 100-வருட பென்சில் ஒன்றும் ஆரோனின் சேகரிப்பில் அடங்கும்

    அமெரிக்காவின் அயோவா (Iowa) மாநில ஜாஸ்பர் கவுன்டி (Jasper County) பகுதியில் உள்ளது கோல்ஃபாக்ஸ் நகரம் (Colfax). இந்நகரத்தில் வசிப்பவர், ஆரோன் பார்த்தலோமி (Aaron Bartholomey).

    சிறு வயதில் தனது தாத்தாவுடன் கடைகளுக்கு செல்லும் போது ஆரோனுக்கு பென்சில்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த வயது முதலே சேகரிக்க தொடங்கினார். இது நாட்கள் செல்ல செல்ல அவருக்கு பொழுதுபோக்காக மாறியது. இவரிடம் பல நிறங்களில் பல வடிவங்களில் ஏராளமான பென்சில்கள் உள்ளன.


    உலகெங்கும் நடைபெறும் அரிதான சாதனைகளை பதிவு செய்யும் நிறுவனம், கின்னஸ் உலக சாதனை பதிவகம் (Guinness World Records). இந்நிறுவன பதிவுகளின்படி அதிக பென்சில் சேகரித்த சாதனை எண்ணிக்கை 24,000 என இருந்தது.

    இதை கேள்விப்பட்ட ஆரோன் தனது சேகரிப்பை பார்க்க வருமாறு அமெரிக்க பென்சில் சேகரிப்பாளர்கள் சங்கத்திற்கு (American Pencil Collectors Society) அழைப்பு விடுத்தார்.

    கடந்த ஜூலை மாதம், அவர்கள் கணக்கெடுப்பை துவங்கினர். அவர்களிடம் பெற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் கின்னஸ் நிறுவனத்திற்கு ஆரோன் தனது சேகரிப்பு குறித்த விபரங்களை அனுப்பினார். அந்நிறுவனத்தினர் மீண்டும் ஒரு ஆய்வை நடத்தினர்.

    3 மாதங்களுக்கு பிறகு கின்னஸ் நிறுவனத்தால் ஆரோனுக்கு உலகிலேயே அதிக பென்சில்கள் சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் எனும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஆரோனிடம் 69,255 பென்சில்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100-வருட பென்சில் ஒன்றும் அடங்கும்.


    "எண்ணிக்கையின்படி பழைய சாதனையான 24 ஆயிரத்தை விட எனது சேகரிப்புகள் அதிகம் என அறிந்திருந்தேன். ஆனால், அதை துல்லியமாக எண்ண நீண்ட காலமும், பொறுமையும் தேவைப்பட்டது. நீண்ட பணிக்கு பிறகு இது நடைபெற்றது. கின்னஸ் நிறுவனத்தினர் கடுமையான விதிமுறைகளை பின்பற்றினார்கள். என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், இறுதியில் அனைத்தும் நல்லபடியாக முடிந்தது" என ஆரோன் தனது சாதனை குறித்து அறிவித்துள்ளார்.

    • திருமங்கலத்தில் 30 நிமிடங்களில் 15 யோகாசனம் இடைவிடாதுசெய்து மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
    • உலக சாதனை நிகழ்ச்சியை ஏராளமான பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் சோழன் உலக சாதனை பத்தகம் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக் கான யோகா உலகசாதனை நிகழ்ச்சி திருமங்கலம் தனியார் பள்ளியில் நடைபெற்றது.

    உடல்நலத்தை பேணிக் காக்கும் வகையில் நடை பெற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 5 வயது முதல் 17 வயதுவரையிலான 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    ஒரு ஆசனத்தில் 2 நிமிடங்கள் என தொடர்ந்து 15 யோகா ஆசன நிலைகளில் 30 நிமிடங்கள் இடைவிடாத செய்து நமது உடலை சமநிலையில் வைத்திருக்கும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்வு நடை பெற்றது.

    உலக சோடாகான் கராத்தே அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். சோழன் உலக புத்தக நிறுவனர் நிமலன் நீலமேகம் முன்னிலை வகித்தார். கராத்தே அமைப்பின் செயலாளர் மாஸ்டர் பால் பாண்டி வரவேற்றார்.

    இதில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் பாத ஹஸ்தா சனம், உட்கட்டா சனம், திருகோண ஆசனம், பச்சிமோதாசனம், மச்சா சனம், பாலாசனம், புஜங்கா சனம் உள்ளிட்ட 15 யோகா ஆசனங்களில் ஒரு ஆச னத்தில் 2 நிமிடங்கள் என தொடர்ந்து 30 நிமி டங்கள் அனைத்து ஆசன நிலை களிலும் உடலை சமநிலை யில் வைத்திருந்தனர். மாணவ, மாணவியர்களின் 2 நிமிடங்கள் என தொடர்ந்து 15 யோகா ஆசன உலக சாதனை முயற்சி வெற்றி பெற்றதாக சோழன் புத்தகம் அறி வித்தது. இதனை தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவி யர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. உலக சாதனை நிகழ்ச்சியை ஏராளமான பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    • இவர் கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்
    • வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு நிறுவனமும் சேர்ந்த விக்கிக்கு உலக சாதனை விருது வழங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்த முத்து- உமாபதி தம்பதியின் மகன் விக்கி. இவர் கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். விக்கி சிலம்பம் போட்டியில் 2 உலக சாதனைகளை படைத் துள்ளார். கள்ளக்குறிச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்த சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் பங்கேற்று அதிக கேடயங்கள், பதக்கங் கள், சான்றிதழ்களை வென்றுள்ளார். இந்நிலை யில் 3 மாதங்களுக்கு முன் பானை மீது நின்று 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார். இதை பாராட்டி குளோபல் நிறுவனம் விருது வழங்கியது.

    அதைத்தொடர்ந்து புதிய முயற்சியாக முட்டி போட்டு கொண்டே 2 கைகளிலும் சிலம்பும் சுற்றிக்கொண்டு 12.36 நிமிடத்தில் 1 கிலோ மீட்டரை கடந்து சாதனை படைத்தார். எக்சலண்ட் புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் மற்றும் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு நிறுவனமும் சேர்ந்த விக்கிக்கு உலக சாதனை விருது வழங்கியது. இந்நிலையில் விருதுகள் மற்றும் சான்றிதழ்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத் தின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆகியோரிடம் காண்பித்து வாழ்த்துக்கள் மற்றும் ஆசிபெற்றார். அப்போது ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், மாநில மருத்துவர் அணி செயலாளர் கம்பன், அண்ணாதுரை எம்.பி., எம்.எஸ்.குமார் முகிலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • தேவிபட்டினம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளியில் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது.
    • சிலம்பம் பயிற்சி பள்ளி செயலாளர், சிலம்ப மாஸ்டர்கள் தங்க குரு நாதன், கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேவிபட்டினம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சாலையில் உள்ள கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது. ஹேமநாதன் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மதுரை 4-ம் தொழிற்சங்கத்தின் தலைவர் ராஜா கே.பி.எம் நாகேந்திர சேதுபதி, கிருஷ்ணா இண்டர் நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், தலைமை ஆசிரியர் முத்துக் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட னர். செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா, எம்.ஜி. பப்ளிக் பள்ளி தாளாளர் ஹர்சவர்தன், விளையாட்டு ஆசிரியர் சுந்தரராஜன், துணை வட்டாட்சியர்(ஓய்வு) கருப்பையா, கிராமிய கலைக்குழு வீரவேல், ஒயி லாட்ட கலைக்குழு தலைவர் வரதராஜ், ராமநாதபுரம் மாவட்ட சிலம்பு ஆசிரியர் நலச்சங்க தலைவர் பொரு ளாளர் வருசை கனி,

    ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு பயிற்சியாளர் நலச்சங்கம் செயலாளர் கண்ணன், பொருளாளர் செந்தில்குமார், உலக சாதனை நிர்வாகிகள் வினோத், பரணிதரன், பரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் 18 மாணவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு கட்டைக்காலில் நின்று இரட்டை கம்புகளுடன் 2 மணி நேரம் 15 நிமிடமும், ஐஸ் கட்டி மேல் நின்று 2 கம்புகளுடன் 3 மணி நேரமும், 6 பானைகள் மேல் நின்று ஒற்றைக்கம்பு சிலம்பமும், மான் கொம்பு வீச்சு, கண்ணை கட்டிக் கொண்டு இரட்டை சுருள்வாள் சுற்றுவதும், ஆணி மேல் நின்று ஒற்றை தீப்பந்தத்துடன் 3 மணி நேரம் சுற்றுவதையும் செய்து காட்டினர். இது உலக சாதனையாக அமைந்தது.

    ஏற்பாடுகளை இந்நிகழ்ச்சிக் கான ஏற்பாட்டினை நிகழ்ச்சி யின் ஒருங்கிணைப்பாளர், மாஸ்டர் ஹேமநாதன் சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவனர் தலைவர் கின்னஸ் உலக சாதனை யாளர் என்.ஹேமநாதன் செய்திருந்தார்.

    சிலம்பம் பயிற்சி பள்ளி செயலாளர், சிலம்ப மாஸ்டர்கள் தங்க குரு நாதன், கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×