என் மலர்
உள்ளூர் செய்திகள்

பம்பையை 7 மணி நேரம் இசைத்து உலக சாதனை
- பம்பை வாசிக்கும் பணியில் கடந்த 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
- ஏழு மணி நேரம் நிறுத்தாமல் பம்பை வாசிக்கும் உலக சாதனை நடந்தது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பாலக்கோடு நகர் பகுதியை சேர்ந்த சற்குணம் (வயது 22). இவர் ஆறாவது தலைமுறையாக பம்பை வாசிக்கும் பணியில் கடந்த 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனையின் உலக சாதனை முயற்சியில் ஏழு மணி நேரம் நிறுத்தாமல் பம்பை வாசிக்கும் முயற்சியில் புதூர் மாரியம்மன் கோவில் முன்பு ஈடுபட்டார்.
இதை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாலக்கோடு அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜா உலக சாதனை முயற்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் நோபல் உலக சாதனை முயற்சியின் தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் நடுவர் டாக்டர் லாவண்யா ஜெயகர் முன்னிலையில் ஏழு மணி நேரம் நிறுத்தாமல் பம்பை வாசிக்கும் உலக சாதனை நடந்தது.
Next Story






